Monday, October 17, 2005

10,000 ரூ கணினி?

From The Telegraph, Calcutta Low-cost PCs? Check fine print

இதைப் பற்றி நான் குமுதம் கேள்வி-பதில் பகுதியில் சென்ற மாதம் எழுதியிருந்தேன். 10,000 ரூபாய்க்கு குறைவான கணினி என்று சொன்னாலும் கையில் கிடைக்கும்போது விலை அதற்கு மேல்தான்.

முதலில் வயா சில்லுடன் ஆரம்பித்த எச்.சி.எல், இப்பொழுது ஏ.எம்.டி சில்லைப் பதித்துத் தரவும் எண்ணியுள்ளது. ஆனால் இந்தக் குறிப்பிட்ட ஏ.எம்.டி சில்லுடன் வரும் குறைந்த விலைக் கணினி கையில் கிடைக்க 2006-07 ஆகிவிடும்! ஆக அதுவரையில் வயா சில்லுதான் என்று நினைக்கிறேன்.

ஒரு மாற்றம் - மைக்ரோசாஃப்ட் எக்ஸ்பி ஸ்டார்டர் பேக் 1250 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆனால் இந்த இயக்குதளம் ஒருவருக்குப் போதுமானாதா என்று தெரியாது. இனிதான் நான் இதனைப் பார்க்கவேண்டும்.

குமுதத்தில் நான் எழுதியது:

மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அறிமுகம் செய்த குறைந்த விலை (ரூ. 10,000) கம்ப்யூட்டரின் தரம் என்ன? அது எங்கு கிடைக்கும்? சற்று விளக்கம் தேவை.

தயாநிதி மாறன் அறிமுகப்படுத்திய கணினியை உற்பத்தி செய்வது HCL என்ற நிறுவனம். இதுவரையில் கிடைத்த தகவல்கள்படி, இந்தக் கணினியின் விலை ரூ. 11,700 (வரிகளுடன் சேர்த்து). முதலில் இந்தப் பணத்தை டிராஃப்ட் எடுத்து HCL நிறுவனத்தின் விற்பனையாளர்களிடம் கொடுத்து, சில நாள்கள் காத்திருந்தால், கணினி வந்து சேரும். கணினியில் ஏற்படும் சிறுசிறு பிரச்னைகளை கவனிக்க ஒரு வருடத்துக்கு ரூ. 500 மேற்கொண்டு கட்டவேண்டியிருக்கும். ஆகா, ரூ. 12,200 செலவாகும். அதைத்தவிர பிற செலவுகள் இருக்கலாம். (டேபிள், சேர், UPS...). இந்தக் கணினியுடன் லினக்ஸ் என்னும் ஆபரேடிங் சிஸ்டம்தான் வருகிறது. ஆங்கிலத்திலேயே எழுத, படிக்க இது போதும். ஆனால் தமிழில் எழுத, படிக்க, இணையத்தளங்களைப் பார்வையிட இந்த ஆபரேடிங் சிஸ்டம் இப்பொழுதைக்கு அவ்வளவு எளிதானதல்ல. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆபரேட்டிங் சிஸ்டம் என்றால் தமிழில் எழுதப் படிக்க மிகவும் வசதியாக இருக்கும். அது தேவையென்றால் இன்னமும் ரூ. 4,000 செலவாகும். அத்துடன் anti-virus மென்பொருள் தேவைப்படும்... இப்படியாக செலவுகள் இழுத்துக்கொண்டே போகும்.

கணினியின் தரம்: இந்தக் கணினியை வைத்துக்கொண்டு இண்டெர்நெட் இணைப்பு பெற்று சரளமாக வேலைகளைச் செய்யலாம். சாதாரண ம்யூசிக் சிடிக்களைப் போட்டுக் கேட்கலாம். ஆனால் விசிடியில் சினிமா பார்க்கலாம் என்றால் கணினி மிகவும் சிரமப்படும். விடியோ கேம்கள் விளையாட கணினி கஷ்டப்படும். அதெல்லாம் செய்ய வேண்டுமென்றால் இதைவிட சற்றே உயர்ந்த தரமுள்ள கணினிகள் தேவை. நல்ல மல்டிமீடியா கணினி வேண்டுமென்றால் ரூ. 15,000 செலவாகும். அதற்கு மேல் மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் எக்ஸ்பி வேண்டுமென்றால் (அதாவது சரளமாக தமிழிலும் எழுதி, படிக்க, இணையத்தில் உள்ள எல்லா தமிழ் வெப்சைட்களைப் பார்க்க வேண்டுமென்றால்) ரூ. 4,000 அதிகமாகச் செலவு செய்யவேண்டிவரும்.

இதுவரையில் HCL டீலர்களே கூட இந்தக் கணினியைக் கண்ணால் பார்க்கவில்லை. அதனால் இந்தக் கணினியில் என்னென்ன பாகங்கள் உள்ளன என்ற விளம்பரத் தகவல்களின் மூலம், அதைப்போன்ற ஒரு கணினியை வடிவமைத்து, அதிலிருந்து மேற்படித் தகவல்களை அளித்துள்ளேன்.

3 comments:

  1. பத்ரி,

    இம்மாத DataQuest பத்திரிக்கையிலும், இதைப் பற்றிய விரிவான கட்டுரை வெளியாகியுள்ளது.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  2. விரைவில் 100 டாலர்களுக்கு மடிக்கணினி வரவிருக்கிறது. இதன் வடிவமைப்பு இந்த நவம்பர்மாதம் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக சொல்கிறார்கள். இக்கணினியின் படங்கள் கூட வெளியாகியிருக்கிறது.

    கைக்கடக்கமாக மிக அழகாக வடிவ்மைத்திருக்கிறார்கள்.

    மின்சார வ்சதி இல்லாத இடங்களில் கூட கைகளால் சுழற்றி மின்சாரத்தை உருவாக்கி சேமித்து பயன்படுத்தலாம்
    500 Hz முறைவழியாக்கி, 128 அல்லது 256 mb நினைவகம், wifi என்று அசத்துகிறார்கள்.

    அநேகமாக அடுத்த ஆண்டு இறுதிக்குள் இத்ன் பாரியளவிலான உற்பத்தி ஆரம்பித்துவிடும் என்று கூறுகிறார்கள்.

    உரிய தொடுப்புக்களை இங்கே தராததற்கு மன்னிக்கவும். அவை என் என் புத்தகக்குறிகளிளிருந்து காணாம்ற்போய்விட்டன.

    ReplyDelete
  3. Question mark - கேள்விக்குறி.
    Bookmark - புத்தகக்குறி.
    நல்ல மொழிபெயர்ப்பு.

    ReplyDelete