Monday, January 08, 2007

குழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்

தமிழில், குழந்தைகளுக்கான புத்தகங்கள் வழவழப்பான வண்ணத்தாளில், தரமான விதத்தில், குறைவான விலையில் கிடைப்பதில்லை என்ற குறை இருந்துவந்துள்ளது.

அதனைப் போக்கும் விதத்தில், புத்தகங்கள் கொண்டுவரவேண்டும் என்று கடந்த சில மாதங்களாக வேலை செய்துவருகிறோம். இதற்கென நியூ ஹொரைசன் மீடியா நிறுவனம் உருவாக்கியிருப்பதுதான் Prodigy Books.

தமிழில் மட்டுமன்றி, பிற இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் இந்தப் பதிப்பு புத்தகங்களை உருவாக்கும். தமிழ், ஆங்கிலம் ஒவ்வொன்றிலும் 12 புத்தகங்களுடன் சென்னை புத்தகக் காட்சியில் களமமிறங்கிறோம். ஸ்டால் எண்கள் 205, 206-ல் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.

குழந்தைகளுக்குக் கதையும் இருக்க வேண்டும், அதே சமயம், நீதிக் கதைகள் போன்று இல்லாமல், அறிவைப் புகட்டுவனவாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தப் புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கதையின் கதாநாயகர்கள் - விக்கி எனும் சிறுவன், ரேவா என்னும் சிறுமி. இவர்கள் தனித்தனியாகவோ, சேர்ந்தோ, பிற விலங்குகள், பறவைகள், மனிதர்களுடன் உலகைச் சுற்றி உண்மைகளைக் கற்பார்கள்.

1. ஹாய் கம்ப்யூட்டர்! (குட்டிப் பசங்களுக்கு கம்ப்யூட்டர், சுட்டிப் பையன் விக்கியோட டூர் போலாம் வாங்க!)
2. மீனம்மா, மீனம்மா (ரேவாவை கடலுக்கு அடியில் அழைத்துப் போகிறது ஸ்நூ! அடேங்கப்பா! அங்க எவ்ளோ விதவிதமான மீன்கள்!!)
3. ஜப்பானை சுத்திப் பாக்கப் போறேன்! (குட்டி ரேவா ஜப்பானுக்கு ஜாலி ட்ரிப் போறாளாம். அங்க அவ ஃப்ரண்ட் மோடோ இருக்கான்! பெரிய சுமோ சாம்பியன்!)
4. hello நான் ரிசீவர் பேசறேன்! (விக்கியோட சேர்ந்து நாமும் டெலிபோனோட கதைய தெரிஞ்சுக்கலாமா?)
5. விக்கியைத் துரத்திய டைனோசர்! (டைனோசர் கிட்ட விக்கி மாட்டிகிட்டான். காப்பாத்த வாங்க!)
6. புல்புல் கொடுத்த பெட்ரோல்! (பெரிய பாலைவனத்துல குட்டி ரேவா. புல்புல்லோட ஒரு திக்திக் பயணம்!)
7. விண்வெளியில் விக்கி! (குறும்புக்கார விக்கி விண்வெளியை நோக்கி... கூடவே புஸ்புஸ்ஸும் துறுதுறு ஜோஜோவும்!)
8. எங்க போச்சு சூரியன்? (காணாமல் போன சூரியனை, தேடிச் செல்கிறான் விக்கி!)
9. விக்கி vs விக்கி (சைக்கிள், ஆட்டோ, கார், பஸ், லாரி... அப்பப்பா! ஒரு ஐஸ்க்ரீம்காக எவ்வளவு கலாட்டா!)
10. ரயிலே... ரயிலே... (ரயிலை கோட்டை விட்டுட்டான் விக்கி. அதனாலென்ன? இருக்கவே இருக்கு சுட்டி குதிரை பிளாக்கி!)
11. விமானத்தில் கலாட்டா! (விமானத்துல விக்கி, ரேவா! குறும்பு செய்ய குட்டி வாண்டுகள். அப்புறமென்ன? ஒரே ரகளைதான்!)
12. ஏலேலோ ஐலசா! (கட்டுமரத்துல போன ரேவா கப்பலில் திரும்பி வந்த கதை!)

இவை 16 அல்லது 24 பக்கங்களில் இருக்கும். தமிழில் ரூ. 25 அல்லது ரூ. 30 என்ற விலையிலும், ஆங்கிலத்தில் ரூ. 35 அல்லது ரூ. 40 என்ற விலையிலும் கிடைக்கின்றன.

அடுத்த மாதம் மலையாளத்திலும் ஹிந்தியிலும் வெளியாகும்.

18 comments:

  1. நல்ல முயற்சி, பத்ரி. புத்தகங்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  2. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அமர் சித்திர கதைகள் (Amar Chitra Katha), வாண்டுமாமா கதைகள் போன்றவைகளை மறுபதிப்பு செய்ய முயற்சிக்களாமே !!!

    ReplyDelete
  4. அமர் சித்ர கதா இன்னமும் தொடர்ந்து வரும் ஒரு புத்தகம். வேறு ஒரு நிறுவனத்திடம் அதற்கான உரிமைகள் உள்ளன.

    வாண்டுமாமா... முடிந்தால் பார்க்கலாம்.

    ReplyDelete
  5. மிக மிக நல்ல முயற்சி!
    "Feel good" கதைகளைக் கூட சேர்த்துக் கொள்ளலாம்.

    ReplyDelete
  6. Thank you for addressing this issue.

    It will be even better if the paper is thick and non-tearable. In the US, they print books for children less than 5 years in a thick cardboard like material. I think they call this as board book format.

    ReplyDelete
  7. நல்ல முயற்சி. தொலைக்காட்சியைத் தொலைத்து இவற்றை படிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்துகிறேன். http://www.roomtoread.org காரர்களை அணுகிப் பாருங்கள். அவர்களுடைய நூலகத்திலும், தமிழ்ப் பள்ளிகளிலும் இவை உபயோகப்படும்.

    ReplyDelete
  8. பாராட்டதக்க முயற்சி.

    அவர்களுடைய
    http://www.prodigybooks.in/ என்ற இணைய முகவரிக்கு சென்றால் இது net4india என்ற நிறுவனத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வருகிறது.

    ReplyDelete
  9. குழந்தைகளுக்குத் தமிழில் போதிய புத்தகங்கள் இல்லை என்ற நிலையில் Prodigy Books-ன் வரவு மிக நல்ல விஷயம். நியூ ஹொரைசன் மீடியா நிறுவனத்தின் logo மற்றும் slogan-ஐ சமீபத்தில் உருவாக்கி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். இரண்டும் நன்றாக உள்ளன.

    ReplyDelete
  10. தகவலுக்கு நன்றி பத்ரி.
    திட்டமிட்டபடி கொணந்துவிட்டீர்கள், வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    நெய்வேலியில் கிடைக்குமா?
    நண்பர் வரும்போது வாங்கிவரச் செய்யவேண்டும்.

    நன்றி.

    ReplyDelete
  11. அன்பு: நெய்வேலி மற்றும் பிற எல்ல இடங்களிலும் நடக்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் பொதுவான கடைகளிலும் இந்தப் புத்தகங்கள் கிடைக்கும்.

    நன்றி.

    ReplyDelete
  12. குறும்பன்: இப்பொழுது இணைய முகவரியைச் சரிசெய்து விட்டேன். எங்கள் பொதுவான இணையத்தளத்துக்குப் போகும். இணையத்தளத்தை இனிதான் ஒழுங்காக உருவாக்கவேண்டும்.

    ReplyDelete
  13. நல்ல முயற்சி பத்ரி.

    அத்துடன் இன்று முதல் துவங்கும் புத்தகக் கண்காட்சியில் நடக்கவிருக்கும் மற்றும் நடந்த நிகழ்ச்சிகளைக் குறித்தும் ஒரு தனிப்பதிவாக எழுதினாலும் நன்றாக இருக்கும்.

    உங்களால் முடியாவிட்டாலும் தங்களுடைய ஊழியர்களில் யாரையாவது எழுத வைத்தாலும் நல்லது என்று கருதுகிறேன்.

    கட்டாயமில்லை. ஒரு யோசனை. அவ்வளவுதான்.

    நன்றி.

    ReplyDelete
  14. நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. அருமையான செய்கை. வாழ்த்துகள். தொடர்ந்து வெளியிடுங்கள்.

    சென்ற ஆண்டு சென்னை வந்த போது உங்களை சந்தித்து பேசி, குழந்தைகள் புத்தகங்கள் வாங்க ஆசைப்பட்டேன், ஆனால் முடியவில்லை.

    இந்த ஆண்டு கட்டாயம் சந்தித்து, பேசி, புத்தகங்கள் (விலை குறைத்து) வாங்கிக் கொள்கிறேன் :).
    - பரஞ்சோதி

    ReplyDelete
  16. மிக அருமையான தொகுப்பு. மழலைச் செல்வங்கள் வாழ்வில் முன்னேறத் தேவையான விஷயங்கள் நிறந்துள்ளன.

    ஆகிரா
    ஆசிரியர்
    மழலைஸ்.காம்
    குழந்தைகளுக்கான இணையதளம்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்.

    சின்ன விமர்சனத்தை இந்த சுட்டியில் காணலாம்.

    இந்த புத்தகங்கள் இணையத்தின் மூலம் கிடைக்குமா என நண்பர்கள் கேட்கின்றார்கள்.

    http://vizhiyan.wordpress.com/2007/01/16/prodigy-children-books-review/

    ReplyDelete
  18. Goodwork !
    More kids books in http://www.penguinbooksindia.com/Kids/

    ReplyDelete