Sunday, April 15, 2007

ஜெட் - சஹாரா: இறுதியாக இணையும்...?

சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஜெட் ஏர்வேய்ஸ், ஏர் சஹாரா இரண்டு நிறுவனங்களும் இணைய முயற்சி செய்தன. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த முயற்சி சிக்கலில் மாட்டிக்கொண்டது. பங்குச்சந்தை சரியத்தொடங்க, ஜெட், தான் சஹாராவுக்கு அதிக விலை (ரூ. 2,200 கோடி) கொடுக்க ஒப்புக்கொண்டோமோ என்று தோன்ற, பின்வாங்கியது. சஹாரா இதனை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது. பின் ஆர்பிட்ரேஷனுக்குச் சென்றது இந்த வழக்கு. இப்பொழுது ஆர்பிட்ரேட்டர்கள் முன்னிலையில், ஜெட் ரூ. 1,450 கோடிக்கு சஹாராவை வாங்கிக்கொள்ளும் என்று முடிவாகியுள்ளது.

ஆனால் இங்கும் குழப்பம் இருக்கும் என்று தோன்றுகிறது. முந்தைய ஒப்பந்தத்தில் சுமார் ரூ. 550 கோடி அளவுக்கு சஹாராவுக்கு இருந்த கடனை ஜெட் அடைக்கவேண்டாம் என்று இருந்தது. ஆனால் இப்பொழுது அது என்ன ஆகும் என்ற விளக்கம் இல்லை என்கிறார்கள். இந்தக் குழப்பத்தை தற்போதைய ஒப்பந்தத்தின்போது தெளிவாகத் தீர்த்திருக்கலாம். மீண்டும் காலம் கடத்தப்பட்டால் அது இரண்டு நிறுவனங்களுக்குமே கெடுதலாகத்தான் இருக்கும்.

2 comments:

  1. அது எப்படி 2200 கோடியிலிருந்து 1450 கோடிக்கு சகாரா சம்மதித்தது? இதில் ஏதும் உள் குத்து இருக்கிறதோ?

    ReplyDelete
  2. //அது எப்படி 2200 கோடியிலிருந்து 1450 கோடிக்கு சகாரா சம்மதித்தது?//

    Buyers' market, சார். இன்று இந்தியாவில் செயல்படும் விமான நிறுவனங்களிலேயே Jet Airways ஒன்று மட்டுமே லாபத்தில் இயங்குகிறது என்று எங்கோ வாசித்த ஞாபகம். மற்ற எல்லா நிறுவனங்களுமே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருப்பவைதான். வந்த விலைக்கு விற்று முடித்து, வேறு வேலை பார்க்க எண்ணும் சஹாரா குழுமத்தின் நோக்கம் வியப்பை அளிக்கவில்லை.

    ReplyDelete