Thursday, January 10, 2008

சென்னை சங்கமம்

சென்னையில் டிசம்பர், ஜனவரியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள், திருவிழாக்கள். கர்நாடக சங்கீதம், தமிழிசை விழாக்கள் டிசம்பரில் களைகட்டும். அனைத்தும் சங்கீத சபாக்கள், இசை மன்றங்கள் ஆகிய தனியார் அமைப்புகளின் வாயிலாக. அடுத்து தமிழக அரசு ஜனவரி மாதம் முழுவதும் மாமல்லபுரத்தில் நடத்தும் நாட்டிய விழா. சென்னை புத்தகக் கண்காட்சி. பொங்கல் நேரத்தில் இப்போது தமிழ் மையம், தமிழக அரசின் ஆதரவுடன் நடத்தும் சென்னை சங்கமம் நிகழ்ச்சி.

சென்ற ஆண்டு சென்னை சங்கமம், பொங்கலுக்குப் பிறகே நடந்தது. இந்த ஆண்டு முதல் பொங்கல் சமயத்தில் நடக்கும் என்று தோன்றுகிறது.

தனிப்பட்ட கட்சி ஆதரவுடன் நடக்கும் சில விஷயங்களைத் தொடர்ந்து நடத்தமுடியுமா என்று தெரியவில்லை. பொதுமக்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சி அரசியல் கட்சி தொடர்பான சண்டைகளால் நாளை நின்றுபோக நேரிடுமானால் அது நல்லதல்ல. அதனால் தமிழ் மையம் நிர்வாகிகள் வெளிப்படையான திமுக ஆதரவை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

சென்ற ஆண்டு சங்கமம் நிகழ்ச்சிக்கான வரவு செலவு இன்று தி ஹிந்து பத்திரிகையில் வந்த துணையிதழில் கொடுக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து:

ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைத்த வருமானம்: ரூ. 2.96 கோடி

செலவு:
விளம்பரச் செலவு: ரூ. 52.88 லட்சம்
நிகழ்ச்சி நடந்த இடங்களைத் தயார் செய்யும் செலவு: ரூ. 20.65 லட்சம்
நிகழ்ச்சி நடத்துவதற்கான செலவு: ரூ. 71.74 லட்சம்
கலைஞர்களுக்கான செலவு (வெகுமதி, உணவு, உறைவிடம்...): ரூ. 80.58 லட்சம்
அச்சுச் செலவு: ரூ. 5.97 லட்சம்
நிர்வாகச் செலவு: ரூ. 5.24 லட்சம்
விழா ஒருங்கிணைப்புக்கான கட்டணமாகக் கொடுத்தது: ரூ. 12.67 லட்சம்
இதர செலவினங்கள்: ரூ. 4.54 லட்சம்

மொத்தச் செலவு: ரூ. 2.54 கோடி.

உபரி வருமானம்: ரூ. 41.27 லட்சம்

இந்த உபரி வருமானத்தை 21 தொண்டு அமைப்புகளுக்குப் பங்கிட்டுக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள்.

2 comments:

  1. காலைலே ஹிந்து பார்த்த உடனேயே தோணின விஷயம்.. முதன் முறையாக நடந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு எப்படிங்க 2கோடி ரூபாய் நிதி ஆதரவு கிடைச்சிருக்கும்?

    அந்த உபரி வருமானத்தை தொண்டு நிறுவனங்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக, அந்தத்தொகையை வங்கியில் டெபாசிட் செய்து,வட்டித் தொகையை, பங்கு பெறும் கலைஞர்களுக்கு பகிர்ந்து கொடுத்திருக்கலாம் அல்லது அந்தக் கலைஞர்களில் பொருளாதார ரீதியாக நலிந்த நிலையில் இருப்பவர்களுக்குஅ ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம்வரை உதவித் தொகை கொடுத்திருக்கலாம். பழங்கலை பராமரிப்பு, நாட்டுக் கலைகளூக்கு மரியாதை என்பதன் கூடவே, இன்னும் கொஞ்சம் உருப்படியாக ஏதேனும் செய்ய வேண்டும்.

    ReplyDelete
  2. //முதன் முறையாக நடந்த சங்கமம் நிகழ்ச்சிக்கு எப்படிங்க 2கோடி ரூபாய் நிதி ஆதரவு கிடைச்சிருக்கும்? //

    ஒரு கோடி ரூபாய்க்குள் செலவு பண்ணி எடுத்த மொக்கைப் படம் எவனோ ஒருவன் விளம்பரங்களுக்கே ரெண்டு கோடி ரூபாய்க்கு மேல ஸ்பான்ஸராவே கிடைச்சிருக்குண்ணே...

    இன்றைய மாடர்ன் விளம்பர உலகில் ரெண்டு கோடி என்ன? நல்ல மார்க்கெட்டிங் ஆளுங்க இருந்தா பத்து கோடி கூட சாத்தியம் தான்!

    ReplyDelete