திருமாவளவன் சமீபத்தில் சென்னையில் கருத்துரிமை (மீட்பு) மாநாடு ஒன்றை நடத்தினார். அதில் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசு நீக்கவேண்டும் என்ற கோரிக்கையை திருமாவளவன் வைத்தார். அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற காரணத்தாலேயே ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டிப்பது, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களின் சாவுக்கு இரங்கல் தெரிவிப்பது போன்றவற்றை யாரும் செய்யக்கூடாது என்று சொல்வது கருத்துரிமைக்கு எதிரானது என்றார்.
திருமாவளவனது கருத்துடன் நான் முழுவதுமாக ஒத்துப்போகிறேன். ஓர் இயக்கம் தடை செய்யப்பட்டது என்ற காரணத்தாலேயே அதைப்பற்றி யாரும் பேசக்கூடாது, அந்த இயக்கத்துக்கு ஆதரவாக எதையுமே “பேசக்கூடாது” என்ற கருத்து மிகவும் ஆபத்தானது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது.
முதலில் எந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் அந்தத் தடை தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, தேசவிரோத நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே நியாயமான விவாதங்கள் நடைபெற விடாமல் செய்வதை அறிவுஜீவிகள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.
திருமாவளவன் இந்த விஷயத்தை ஓர் அரசியல் பிரச்னையாக்கி, நீதிமன்றம், மக்கள் மன்றம், பத்திரிகைகள் என அனைத்துக்கும் கொண்டுசெல்லவேண்டும்.
இந்த விஷயத்தில் தமிழக சட்டமன்றத்தின் தீவிரமான விவாதம் நடத்தப்படவேண்டும். சட்டமன்ற விவாதங்கள் என்றால் உறுப்பினர்களுக்கு எதைப்பற்றி வேண்டுமானாலும் பேச immunity உண்டு. அதனால் பயமின்றிப் பேசலாம்.
Astronomy and Mathematics in the Vedas
9 hours ago
நல்லா சொன்னீங்க பத்ரி.
ReplyDeleteஇது நீதிமன்றத்தில் வேண்டுமென்றால் விவாதத்திற்கு உரியதாகலாமோ தவிர சட்டமன்றத்தில் அல்ல.¡
ReplyDeleteதிருமாவைப் பொறுத்தவரை கருத்துரிமை தனக்குத்தான் என்று
ReplyDeleteநினைப்பவர், அதை பிறருக்கு
மறுப்பவர் உ-ம் 1, தினமலர் மீது
தாக்குதல், 2, குஷ்புவிற்கு எதிரான
போராட்டம்,வழக்குகள், 3, கருத்து
சுதந்திரத்தில் நம்பிக்கை இல்லாத
பிற்போக்கு பழைமைவாத தமுமுகவுடன் அணி சேர்வது.
அவர் கேட்பது தான் புலிகளை அனைத்து விதங்களிலும் ஆதரிக்கும் உரிமையை, கருத்துரிமையை அல்ல.
அதை நேரடியாகச் சொல்லாமல்
கருத்துரிமை என்ற பெயரில் சொல்கிறார்.
இப்ப சட்டம் போட்டிருவாங்க போலிருக்கே?
ReplyDeleteமுதல்வர் உங்கள் கருத்தை உள்ளடக்கிய உச்ச நீதிமன்ர தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளார்.
//முதலில் எந்த இயக்கம் தடை செய்யப்பட்டாலும் அந்தத் தடை தேவையா, இல்லையா என்பதைப் பற்றிப் பேசுவதற்கான உரிமை நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கவேண்டும். எதற்கெடுத்தாலும் தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, தேசவிரோத நடவடிக்கை என்று சொல்லிச் சொல்லியே நியாயமான விவாதங்கள் நடைபெற விடாமல் செய்வதை அறிவுஜீவிகள் அனைவரும் கண்டிக்கவேண்டும்.//
ReplyDeleteஅறிவுஜீவிகள் மட்டுமல்ல அனைவரும் கண்டிக்க வேண்டும்.
இந்திய அரசு விடுதலைப் புலிகளுக்கு அப்போது உதவினால் அதற்குப் பெயர் தேசப்பற்று.
இப்போது அதைப்பற்றி பேசினால் கூட தேசத்துரோகம்.
பாருங்கள் இவர்களின் தேசப்பற்றை????.
இவர்களில் தேசப்பற்று என்பது சுயநலம் சார்ந்தது.
இந்த சுயநலவாதிகளை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.