Friday, February 01, 2008

எண்கள் - அறிமுகம்

பல நாள்களாக கணிதம் பற்றி பதிவுகள் எழுத நினைத்திருந்தேன். ஆனால் அதற்கான சரியான கருவிகள் புரிதல் இல்லை. இப்போது கடந்த இருதினங்களாக MathML பற்றிப் படித்துவருகிறேன். இப்போதும் எளிதாக கணிதச் சமன்பாடுகளை blogspot.com வலைப்பதிவுகளில் புகுத்திவிடமுடியாது என்றே தோன்றுகிறது. சில முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. Wordpress.com ஒத்துழைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அதில் வேலை செய்ய நேரம் இல்லை.

ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. Header பகுதியில் இந்த வரி தேவை.
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.1 plus MathML 2.0//EN" "http://www.w3.org/Math/DTD/mathml2/xhtml-math11-f.dtd">

அதேபோல content-type கீழ்க்கண்ட வகையில் மாற்றப்படவேண்டும்.
<meta http-equiv="content-type" content="application/xhtml+xml; charset=UTF-8"/>

அதன்பின் MathML-ஐப் பின்பற்றி சமன்பாடுகளை எழுதவேண்டியதுதான். இதற்கு ஓப்பன்ஆஃபீஸ், அமாயா போன்றவை உதவும். இருந்தாலும் இது எளிதான விஷயம் கிடையாது. எழுத நேரம் எடுக்கும் ஒரு விஷயம் - இப்போதைக்கு.

இந்தப் பக்கங்களை Firefox உலாவியில் எளிதாகப் பார்க்கலாம். சில கணித எழுத்துருக்கள் தேவைப்படலாம். அவற்றை இங்கேயிருந்து பெற்று இன்ஸ்டால் செய்துகொள்ளுங்கள்.

இண்டெர்நெட் எக்ஸ்புளோரர் என்றால் நீங்கள் ஒரு plugin-ஐ இன்ஸ்டால் செய்யவேண்டியிருக்கும். அதற்கு நீங்கள் செல்லவேண்டிய இடம் இது.

***

அடுத்த சில பதிவுகளில் எளிமையாகத் தொடங்கி கணித விஷயங்கள் பற்றி எழுதப்போகிறேன். எப்படி, எந்தத் திசையை நோக்கிச் செல்லும் என்று சொல்லமுடியாது. பார்ப்போம்.

எண்கள் தொடர்பானது இந்தப் பதிவு.
ஒருநாள் பித்தாகோரஸின் சீடன் ஒருவன் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கண்டுபிடித்தான். ஒரு செங்கோண முக்கோணத்தின் இரண்டு பக்கங்களின் நீளம் 1, 1 என்று இருந்தால், மூன்றாவது பக்கத்தின் நீளம் ஒரு விகிதமுறு பின்னமாக இருக்காது என்பதே அது.
...
முடியாது என்று சொன்னதால் அந்தச் சீடன் அடித்தே கொல்லப்பட்டான் என்கிறார்கள். காரணம், பித்தாகோரஸ் அப்படிப்பட்ட “கெட்ட” எண்கள் இருக்கமுடியாது என்று தீவிரமான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் அந்த நம்பிக்கை பொய்யானது. ஏன் இந்த எண்ணை விகிதமாக, இரண்டு முழு எண்களின் பின்னமாகக் கொடுக்கமுடியாது என்பதை நாளை பார்ப்போம்.

2 comments:

  1. பத்ரி சின்ன வயதில் இருந்தே கணிதத்தில் கொஞ்சம் ஆர்வம் உண்டு, ஆனால் இடையில் கணிதமே பிடிக்காத அளவிற்குப் போய்விட்டது.

    என்ன எழுதப்போகிறீர்கள் என்று ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. விகிதமுறு பின்னம், வர்க்கம், வர்க்கமூலம்.... ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... :)

    நல்ல முயற்சி பத்ரி.
    "எண்கள் அறிமுகம்" கொஞ்சம் கோர்வை இல்லாமல் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.திடீரென்று பிதாகரஸ் தேற்றத்திற்கு தாவியதால் இருக்கலாம்.
    போன பதிவிலோ அதற்கு முந்திய பதிவிலோ சொல்ல நினைத்தது. ஆங்கில நடையில் தமிழில் எழுதும்போது வாசிக்கத் தடையாக இருக்கிறது.
    உதாரணத்திற்கு கீழ்க்கண்ட வாக்கியம். இதைப் படிக்கும்போதே என்னையறியாமல் மொழிபெயர்த்துப் படித்தேன்.
    "பித்தாகோரஸ் - இவரது பெயரால் ஒரு கணிதத் தேற்றம் வழங்கப்படுகிறது - சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்."

    "Pythagorus, in whose name a theorem is named after, lived about 2500 years go"

    தொடர்ந்து எழுதுங்கள்!

    -பரி

    ReplyDelete