மைய அரசின் நிதிநிலை அறிக்கைமீது இப்போதெல்லாம் அதிக சுவாரசியம் இருப்பதில்லை.
என் பார்வையில் இரண்டு முக்கியமான அறிவிப்புகள் வந்துள்ளன. முதலாவது விஷயம், வருமான வரியில் ஏற்பட்டுள்ள மாற்றம். குறைந்தபட்சம் ரூ. 4,000-லிருந்து, கிட்டத்தட்ட ரூ. 50,000 வரை சேமிப்பு இருக்கும். (பெண்களுக்கு, சீனியர் குடிமகன்களுக்கு சற்றே மாறுபடும்.) இது நிச்சயமாக நல்ல செய்திதான். சந்தோஷம் தரக்கூடியதே.
இரண்டாவதாக விவசாயக் கடன் ரத்து. எந்தக் கடன் ரத்தும் எனக்கு ஏற்புடையது அல்ல.
அட, உன் வரியைக் குறைத்தால் சந்தோஷப்படும் நீ, அடுத்தவன் கடன் சுமையைக் குறைத்தால் அதை ஏற்பதில்லையே என்று நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விதான்.
இரண்டையும் நான் சமமாகக் கருதவில்லை.
வரிச்சலுகை வேறு, கடன் ரத்து வேறு.
ஒரு பக்கம், அரசு பொதுமக்களிடமிருந்து இதுவரை வரியாகப் பெற்ற பணத்தை சற்றே குறைத்துப் பெற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது. ஏன் இப்படிச் செய்யவேண்டும்? அரசு எதிர்பார்த்ததைவிட இப்போது அதிகமான வருமான வரி சேகரமாகிறது.
முன்னெப்பொதும் இல்லாத அளவுக்கு கடந்த வருடம் அதிகமானபேர் வருமான வரி கட்டியுள்ளனர். நாட்டின் ஜிடிபியுடன் ஒப்பிட்டால் அதிக சதவிகிதம் வரி அரசுக்குச் சேர்கிறது. மக்கள் மனத்தில் வரி ஏய்க்கவேண்டும் என்ற எண்ணம் சற்றே குறைந்துள்ளது என்று இதிலிருந்து தெரிகிறது. இதனால் அரசு மக்களுக்கு கொஞ்சம் ரிபேட் கொடுத்துள்ளது.
இப்போதும்கூட பலர் வருமான வரியிலிருந்து தப்பித்துவிடுகிறார்கள். ஏமாற்றவேமுடியாதவர்கள் என்று பார்த்தால் அது மாதச் சம்பளக்காரர்கள்தான்! ஏன் ஏமாற்றமுடியாது? இவர்களது வரியை இவர்கள் வேலை பார்க்கும் நிறுவனமே சம்பளத்திலிருந்து பிடித்து முழுமையாகக் கட்டிவிடவேண்டும்.
நீங்கள் தொழில் செய்கிறீர்கள் என்றால், உங்களது வருமானத்திலிருந்து உங்கள் செலவுகளைக் கழித்துக்கொண்டு மீதமுள்ளதற்கு மட்டும் வரி கட்டலாம். ஆனால் நீங்கள் ஒரு அலுவலகத்தில் சம்பளத்துக்கு வேலை செய்கிறீர்கள் என்றால் இந்தச் செலவு, அந்தச் செலவு என்று கழித்துக்கொள்ளமுடியாது.
உதாரணத்துக்கு நீங்கள் ஒரு நிறுவனத்தில் ஊழியராக இல்லாது, ஒப்பந்தக்காரராக (contractor) பணிபுரிகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உங்களது 'ஊதியத்தில்' 10.3% வரியாகப் பிடித்து கட்டிவிட்டு, மீதத்தை உங்களுக்குத் தந்துவிடுவார்கள். இந்த 10.3% என்பது TDS - Tax deducted at source. நீங்கள் உங்கள் வரியைச் செலுத்தும்போது, உங்களது செலவுகள் பலவற்றைக் கழித்துக்கொள்ளலாம். உதாரணமாக பெட்ரோல் செலவு, ஓட்டுனர் இருந்தால் அவரது சம்பளத்தில் ஒரு பகுதி அல்லது முழுப்பகுதி, உங்களது வேலையை/ஒப்பந்தத்தை நிறைவேற்ற உங்களுக்குத் தேவையாக இருக்கும் பொருள்களை வாங்கச் செலவழித்த தொகை ஆகியவற்றைக் கழித்துக்கொள்ளலாம். நீங்கள் வேறு சிலரை உங்களுக்குக்கீழ் வேலை செய்ய வைத்துக்கொண்டதாகக் காண்பித்து அவர்களுக்குக் கொடுக்கும் சம்பளத்தைச் செலவாகக் கழித்துக்கொள்ளலாம். இங்கு 'திருட்டுத்தனம்' செய்ய நிறைய வாய்ப்புகள் உள்ளன. செய்யப்படுகிறது.
நீங்கள் சேவைத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர் என்றால் (டாக்டர், வக்கீல், முடிவெட்டுபவர்...) இதேபோல உங்களது வருமானம், உங்களது செலவுகள் ஆகிய அனைத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு மிச்சம் இருக்கும் தொகையில் பல கழிவுகளைக் கணக்கில் எடுத்து, மீதத்துக்கு வரி கட்டுகிறீர்கள்.
ஆனால் மாதச் சம்பளக்காரர்களால் இதையெல்லாம் செய்யமுடியாது. அவரது மாதச் சம்பளத்தை முன்வைத்து அவரது ஆண்டு வருமானம் எவ்வளவு என்று கணக்கிட்டு அடிப்படைப் பிடித்தங்கள்போக (அதற்கு ரசீதுகளைக் காண்பித்தாகவேண்டும்) மீதத்துக்கு கறாராக வரியைக் கணக்கிட்டு, மாதாமாதம் அந்த வரி பிடிக்கப்பட்டு, அந்தந்த மாதமே அரசிடம் கட்டப்பட்டுவிடும்.
மாதச்சம்பளக்காரர் பகுதிநேரத் தொழில் ஒன்றைச் செய்து அதில் நஷ்டம் வந்தது என்றால் அந்த நஷ்டத்தைத் தனது மாதச் சம்பளத்தில் கழித்துவிட்டு வரி கட்டமுடியாது. ஆனால் டாக்டர் ஒருவர், தனது டாக்டர் தொழிலுடன் ஒரு பெட்டிக்கடையையும் வைத்திருப்பதைக் காண்பித்து (நிஜமாகவே அப்படி ஒன்று இருந்தால்) ஒன்றில் வரும் லாபத்தை மற்றொன்றில் வரும் நஷ்டத்துடன் இணைத்து மொத்தம் லாபமாக அல்லது நஷ்டமாக இருந்தால் அதற்கு ஏற்றாற்போல வரி கட்டலாம்.
நிறுவனங்கள் மாதச் சம்பளக்காரர்களுக்கு பல சலுகைகள் (allowance) கொடுத்துவந்தன. இதில் ஏதோ வரி ஏய்ப்பு நடக்கிறது என்று நினைத்து சிதம்பரம் fringe benefit tax (FBT) என்ற கொடூரமான வரியைக் கொண்டுவந்தார். கொஞ்சம் விஷயம் தெரிந்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் - FBT என்பது நிறுவனங்களுக்கு திகிலை ஏற்படுத்தும் ஒரு விஷயம். இதனால் பல நிறுவனங்களும் FBT வலைக்குள் மாட்டிக்கொள்ளாமல் இருக்க, அலவன்ஸுகளை மொத்தமாக நிறுத்தினர். விளைவாக, கையில் கிடைக்கும் மொத்த வருமானத்துக்கும் மாதச் சம்பளக்காரர்கள் வருமான வரி கட்டவேண்டி இருந்தது. இப்போது மாதச் சம்பளக்காரர்களுக்கு கொஞ்சம் அதிகமான ரிலீஃப் கிடைத்துள்ளது. FBT இன்னமும் இருக்கிறது.
இந்தப் பிரச்னைகள் ஏதும் இன்றி, சுயதொழில் செய்வோர் தங்களது செலவுகளைக் கழித்து, வரிச்சுமையைக் குறைக்கமுடியும். அவர்களுக்கும் இந்த வரி மாறுதல்களால் அதிகமான லாபம்தான். ஆனால் நிஜமாகவே மகிழ்பவர்கள் மாதச் சம்பளக்காரர்களே.
***
ஆனால் கடன் விவகாரம் என்பது முற்றிலும் வேறு.
விவசாயிகள் பெறும் கடனை ரத்துசெய்யும்போது பல விஷயங்கள் கவனிக்கப்படுவதில்லை.
விளைச்சல் பிரச்னையால் பாதிக்கப்பட்ட விவசாயி யார், பாதிக்கப்படாதவர் யார் என்று தீர்மானிப்பது கிடையாது. ஒட்டுமொத்த கடன் ரத்து ஏற்படுகிறது. இரண்டு ஹெக்டேர் என்று நிலத்துக்கு ஒரு வரம்பு கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்தியா முழுமையிலும் 2 ஹெக்டேர் வைத்து விவசாயம் செய்த அனைவருக்கும் நஷ்டமே ஏற்பட்டுக்கொண்டிருக்கிறதா, என்ன? ஒருவருக்குக்கூடவா லாபம் ஏற்படுவதில்லை.
விவசாயம் என்பது ஒரு புனிதப்பசுவாகி விடுகிறது. விவசாய வருமானத்துக்கு வரி கட்டவேண்டியதில்லை. அவர்கள் உணவு தயாரிப்பதால் (அதில் பலரும் காட்டாமணக்குமுதல் மல்லிகைப்பூவரை எதை வேண்டுமானாலும் பயிரிடலாம்!) அவர்களுக்குச் சிறப்பிடம் உள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில், விவசாயத்தை வளரவிடாமல் இருப்பதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அத்தனையையும் செய்துவிடுகிறோம். கடன் ரத்து என்பதே அத்தகைய ஒரு விஷயம்தான். அடுத்தமுறை எந்த வங்கியும் விவசாயக் கடன்களைக் கொடுக்காமல் அதற்குபதில் பணம் ஒழுங்காகத் திரும்பக் கிடைக்கும் மைக்ரோஃபைனான்ஸ் பக்கம் போய்விடுவார்கள்.
விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை என்றால் அதற்கான அடிப்படைக் காரணத்தை ஆராய்ந்து அதற்கான தீர்வை முன்வைப்பதில்லை. விதை, உரம், பூச்சிக்கொல்லி, தண்ணீர், சாகுபடிக்கான காப்பீடு, பொருள்களைப் பாதுகாத்து வைப்பதற்கான குளிர்சாதன வசதி, நல்ல கொள்முதல் விலை - இவற்றில் எங்கு பிரச்னை என்பதைக் கவனிப்பதில்லை நாம்.
இயற்கை விவசாயத்தை முன்வைக்கவேண்டுமா? கொள்முதல் விலையை வெகுவாக அதிகரிக்கவேண்டுமா? சாகுபடிக்குக் கட்டாயக் காப்பீடு எடுக்க விவசாயிகளை வற்புறுத்தவேண்டுமா? அல்லது காப்பீட்டுக்கான பிரீமியத்தை அரசே செலுத்தவேண்டுமா? தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றைக் குறைவான விலையில் (இலவசமாக அல்ல), வேண்டிய அளவு தர முயற்சிகள் எடுக்கவேண்டுமா?
இவற்றை விட்டுவிட்டு கடன்களை ரத்துசெய்வதால் என்ன விளைவு ஏற்படும்? வங்கிகள் அனைத்தும் பிரச்னையில் மாட்டும். அதுவும் அரசாங்க வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும்தான் பிரச்னையில் மாட்டும். தனியார் வங்கிகள் இதில் ஈடுபடுவதே இல்லை. கொடுத்த கடன் திரும்பி வராமலே போகலாம் என்பதால்தான் தனியார் வங்கிகள் விவசாயம் பக்கமே போக பயப்படுகிறார்கள்.
***
வரி விகிதத்தில் உள்ள மாற்றம் ஏப்ரல் மாதம் முதலே மாதச் சம்பளக்காரர்களைத் தொட்டுவிடும். அவர்கள் மாதம் வீட்டுக்கு எடுத்துக்கொண்டுபோகும் தொகை அதிகரிக்கும். விவசாயக் கடன் ரத்து பற்றி சிதம்பரம் அறிவித்துவிட்டாரேதவிர இன்னமும் எப்படி இதனைச் செயல்படுத்துவது என்று யோசித்து முடிக்கவில்லையாம். எனவே நடைமுறைக்குவர நாளாகும். அதற்குள் பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி போன்ற அரசு வங்கித் தலைமையில் உள்ளவர்களுக்கு வயிற்றைக் கலக்கும்.
கருணாநிதி/அன்பழகன் செய்ததுபோல, சிதம்பரமும் வங்கிகளுக்குக் கடன் பத்திரங்களைக் கொடுத்து நழுவிக் கொள்ளலாம். வங்கிகளின் பேலன்ஸ் ஷீட் உதை வாங்கும். அவர்களது லாபம் குறையும். கேஷ் ஃப்ளோவிலும் பிரச்னை வரும்.
இல்லாவிட்டால் சிதம்பரம் இன்னொன்றைச் செய்யலாம். வருமான வரி கட்டும் அனைவரும் 3% சிறப்புக் கல்வி வரி (educational cess) என்பதை சேர்த்துக் கட்டுகிறோம். இதுவே சிதம்பரம் உருவாக்கிய பஜனை வரி. நேரடி வரி வருமானத்திலிருந்து கல்விக்கு அதிகமாகச் செலவு செய்யாமல் அங்கும் இங்கும் திரட்டி கல்விக்குச் செலவழிப்பதாகப் போக்கு காண்பிக்கிறார். 2% என்று ஆரம்பித்து இப்பொது 3% ஆக்கியுள்ளார். அதேபோல விவசாயச் சிறப்பு வரி (agricultural cess) என்று மேலும் ஒரு 2%-3% சேர்க்கலாம். அதில் வரும் பணத்தைக்கொண்டு கடன் ரத்துக்கு பதிலாக விவசாயிகளுக்கு மான்யமாகக் கொடுக்கலாம்.
***
இந்த இரண்டு மாயாபஜார் வேலைகளைக் கொண்டு வாக்குகளை வாங்கிவிடுமா காங்கிரஸ் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை.
பிறந்தநாள் விழா
51 minutes ago
//மாதச்சம்பளக்காரர் பகுதிநேரத் தொழில் ஒன்றைச் செய்து அதில் நஷ்டம் வந்தது என்றால் அந்த நஷ்டத்தைத் தனது மாதச் சம்பளத்தில் கழித்துவிட்டு வரி கட்டமுடியாது.//
ReplyDeleteகேப்பிடல் கெய்ன் எப்படி வரும் பத்ரி.
இப்ப நான் இன்வெஸ்ட் செய்து அதில் ஏகப்பட்ட லாஸ் காண்பிக்கிறேன் என்று வையுங்கள் அது எப்படிக் கணக்காகும்?
அதுவும் தொழில் வருமானத்தைப் போன்றதே. மாதச் சம்பளக்காரர்கள் வேறு எந்த நஷ்டத்தையும் ஈடுகட்டமுடியாது. ஷார்ட் டெர்ம் கேபிடல் கெயின்ஸ் சேர்த்து. (லாங் டெர்ம் பங்குச்சந்தை கேபிடல் கெயின்ஸுக்கு டாக்ஸ் கிடையாது.)
ReplyDeleteநீங்கள் மாதச்சம்பளம் வாங்குபவராக இருந்தால், ஏகப்பட்ட லாஸ் பங்குச்சந்தையில் காண்பித்தால் அது கோவிந்தாதான்.
ஆனால், தொழில் செய்வோருக்கு அந்தப் பிரச்னை இல்லை.
பத்ரி,
ReplyDeleteஎன்னுடைய மிக நெருங்கிய நண்பர்களுக்காக Budget Blunders என்கிற தலைப்பில் ஒரு சின்ன மின்னஞ்சல் சுற்று செய்திருக்கிறேன். அதில் எழுதிய இந்த விவசாய கடனொழிப்பு பற்றிய என் பார்வை.
There are already huge reports have been written about the current Budget put forward by Mr. P Chidambaram. Everyone was talking about the mammoth waiver for farmers upto Rs.60,000 Crores [15Billion].Therearepositivesandnegativesinthisproposal.Thesocalledclaimedpositivesare∗Farmerswillberelievedfromtheirdebtburden∗Theywillhavefreshthingstodowiththeirsoil∗ItwillbeintheirmindtillOctober,soitwillturnintovotes[Itisrumouredwewillhaveaparlimentaryelections]∗ProvidesacleanbalancesheetforBankswhohavegotNPAsButisthepositivesaretrue?Iamseeingabigflipfromthegovernmentonthis.Fornow,letskeepitasideonhowtheGovt.isgoingtosubstantiatethisexpensetowardsbanks.Itsmentionedthatfarmerswhoarehaving1−3Hectaresoflandareonlyqualifiedforthefullwaiverandforsomeothercategoryitwillbe2515+1.8=16.8Billion for them to manage. Is this a government run by people who claims themselves studied / teaching in Harverd and Wharton school ? I am still not getting the idea, that this country is run Dr. Manmohan Singh, who himself is an accomplished Economist who understands the economics behind this major issue.
Now, assume even the banks are getting compensated from whose corpus the money is going to be provided ? Is it tax payer's money or is it Government's ex-chequer's money or is it from the Foreign Reserve holdings we have had with the RBI ? Whose money are we going to spend ?
Instead of this, it can be simplified much easier. With the banks coming under RBI, who have provided the farm loans, can be taken directly by the Finance ministry and ordered a direct intervention between the farmer & bank manager to solve things. In addition, instead of just waiving off the full bank loan, waive off the partial bank loan and the balance to be provided to the farmer to settle his money lender loans. Make sure, take the name of the money lender and issue a cheque for whatever money is allowed for the farmer. This way, we know exactly how much money goes into the Money lender's kitty and can put them under tax bracket, otherwise, all the deals are done via unaccountable cash. Provide them with better information, with local NGOs / Self Help Groups and even make sure the NGO / SHGs disburse the cash to make the farmer come out of the debt loop.
By just initiating a mass waiver, we are not providing a relief, we are actually sending a wrong signal to the farming community in addition to make them more pray to money lenders hungry hands.
I welcome the intention, but the execution and its consequences will send ripple effect damages to the entire rural india for what is considered to be the biggest gift of the FM to the farmers.
விதர்பா, ஆந்திரா போன்ற இடங்களில் இருக்கும் விவசாயிகளுக்குப் பெரிய அளவிலான பிரச்சனை, வங்கிகளில் ஏற்பட்டிருக்கும் கடன்சுமை அல்ல, தனியாரிடம் அதிக வட்டிக்கு வாங்கி, அதனால் ஏற்பட்டிருக்கும் கடன்சுமையே ஆகும். விவசாயிகளின் த்ற்கொலைக்கு, இந்தக் கடன் சுமையே முக்கியமான காரணம் என்று பல முறை, பலரும் எழுதி, பேசி, கருத்தரங்கம் எல்லாம் போட்டு விளக்கியும் விட்டார்கள். கடன் ரத்து என்கிற இந்தச் சலுகையால், அந்த விவசாயிகளுக்கு என்ன பலன்?
ReplyDeleteஒன்றுமே இல்லை.
இது பற்றி, ஆங்கில செய்தித் தொலைக்காட்சியில் நிருபர் கேட்ட கேட்டபோது, சிதம்பரம், ' மணிலெண்டர்களிடம் இருந்து வாங்கிய கடனுக்கு நாங்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?' என்று 'பொறுப்புடன்' பதில் சொன்னார். யார் யார் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறார்கள் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது என்று அவர் கேட்கும் கேள்வியிலே லாஜிக் இருந்த அளவுக்கு, விவசாயிகள் மீதான அக்கறை இருந்ததாகத் தெரியவில்லை.
இதை, நிசமான அக்கறை இருந்தால், ஓரளவுக்காவது துல்லியமாகக் கணக்கிட்டு, விவசாயிகளைக் கடன் சுமையிலிருந்து மீட்க வழிவகை செய்திருக்கலாம்.
தனியாகக் கமிஷன் எல்லாம் போட்டு, அரசுப்பணத்தை விரயம் செய்ய வேண்டாம், கடந்த எட்டு ஒன்பது வருடங்களில் தேசிய நாளிதழ்களில், கிராமப்புற விவசாயிகளின் நிலைமை மற்றி வந்த செய்திகளின் கட்டிங்குகளை ஒட்டு மொத்தமாக வைத்துப் படித்தாலே புரிந்து கொள்ளலாம்.
அதே நிகழ்ச்சியில், தொழில் துறைக்கு அளித்த சில சலுகைகள் பற்றிப் பேசும் போது ப.சி, சிரித்துக் கொண்டே சொன்னது, 'every exemption has a lobby behind it'.
எவ்வளவு உண்மை!
//ங்கள் ஒரு அலுவலகத்தில் சம்பளத்துக்கு வேலை செய்கிறீர்கள் என்றால் இந்தச் செலவு, அந்தச் செலவு என்று கழித்துக்கொள்ளமுடியாது.//
ReplyDeleteஇதில் மிகவும் பாதிக்கப்படுவது அரசு ஊழியர்கள் தான்.
சென்னையில் வேலைபார்ர்க்கும் ஒருவர் அலுவலக விஷயமாக மதுரை செல்ல வேண்டும் என்றால், அவருக்கு வழங்கப்படும் TA ரயில் டிக்கெட். DA 75 ரூபாய் மட்டும் தான். 75 ரூபாயில் தான் மூனு வேலை சாப்பாடு, அறை வாடகை, ஆட்டோ எல்லாம் :) :) :)