Saturday, May 09, 2009

உங்கள் வாக்குச் சாவடி எங்கே உள்ளது?

சில நாள்களுக்கு முன் தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆராய்ந்துகொண்டிருந்தோம். இவை அனைத்தும் தமிழில் உள்ளன. ஆனால் யூனிகோடில் இல்லாமல் ஏதோ ஓர் என்கோடிங்கில் உள்ளன. கூகிளில் தேடி, உங்களது பெயர் எந்தத் தொகுதியில் உள்ளது; உங்களது பெயர் உள்ளதா, இல்லையா; உங்களது வாக்குச் சாவடி எங்கே உள்ளது என எதையுமே கண்டுபிடிக்க முடியாது. ஆக மொத்தத்தில், தகவல்கள் உள்ளன; ஆனால், நமக்குத் தேவையான வகையில் இல்லை.

நாகராஜன், நான், சத்யா ஆகியோர் கிழக்கு பதிப்பகம் அலுவலகத்தில் உட்கார்ந்து இதைப் பற்றிப் பேசினோம். எல்காட்டின் முன்னாள் நிர்வாக இயக்குனரும் இப்போது சிறுசேமிப்புத் துறையில் இருப்பவருமான உமாஷங்கர் ஐ.ஏ.எஸ் அவர்களுடனும் இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். உமாஷங்கர், தொழில்நுட்பத்தில், முக்கியமாக லினக்ஸ், டேடாபேஸ் போன்றவற்றில் நல்ல அனுபவம் உள்ளவர். மக்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டிய வாக்குச் சாவடியை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு வழி இருந்தால் நன்றாக இருக்கும், அதுவும் மொபைல் போன் மூலமாகக் கண்டுபிடிக்க முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பேச்சு வந்தது. அதை ஒட்டி, அவர் சில தொழில்நுட்ப ஆலோசனைகளைச் சொன்னார். நாகராஜன் புரோகிராமிங்கைச் செய்துமுடித்தார்.

தமிழகத்தை மட்டும் எடுத்துக்கொண்டால், 4 கோடிக்கும் மேற்பட்ட ரெகார்டுகள். அந்த அளவுக்குத் தகவல்களை நிர்வகிக்கும் திறனுள்ள சர்வர் கணினிகள் எங்களிடம் கிடையாது. உமாஷங்கரின் உதவியுடன் சில அரசு நிறுவனங்கள்மூலம் இதைச் செய்யலாமா என்று பார்த்தோம். நேரம் இல்லாததால் சரியாகச் செய்யமுடியவில்லை. எஸ்.எம்.எஸ் பரிவர்த்தனை செய்யும் நிறுவனம் ஒன்றுடன் பேசி, அவர்களது கேட்வேயுடன் இணைக்கவேண்டியிருந்தது. சில நிறுவனங்கள் அதற்கு ஏகப்பட்ட பணம் கேட்டார்கள்.

கடைசியாக, சென்னையில் உள்ள மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் இதனைச் செயல்படுத்தலாம் என்று முடிவுசெய்தோம். அந்த அளவுக்கு மட்டுமான தகவல்கள் என்றால் எங்கள் வழங்கிக் கணினியிலேயே செயல்படுத்தலாம். 35 லட்சம் ரெகார்டுகள்தான்.

நீங்கள் சென்னையின் மூன்று நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உள்ளாக இருந்தால் (தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை), உங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை எண் இருந்தால், உங்களுடைய வாக்குச் சாவடி எது என்று தெரியாவிட்டால், அதனைக் கண்டுபிடிக்க நீங்கள் செய்யவேண்டியது இவ்வளவுதான்:

BOOTH <வாக்காளர் அடையாள அட்டை எண்>

என்பதை 575758 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் செய்யவும். உங்களது வாக்குச் சாவடி முகவரி, உங்கள் மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்ஸாக வந்துவிடும்.

மேலே குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்ப, உங்கள் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கும். அந்தக் கட்டணம் உங்களது நெட்வொர்க் மற்றும் பிளானைப் பொருத்தது. (10 பைசாவிலிருந்து 3 ரூபாய் வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.)

இந்தச் சேவை, எங்களைப் பொருத்தமட்டில் இலவசமாக, வாக்காளர்கள் வசதி கருதிச் செய்யப்படுகிறது. அனைவரும், முக்கியமாக புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.

வரும் நாள்களில் (அடுத்த தேர்தலுக்கு முன்) சரியான ஆதரவு இருந்தால், தமிழகத்தில் 4+ கோடி வாக்காளர்களுக்கும் இதே வசதியைச் செய்துகொடுக்கலாம். அல்லது இதைத் தேர்தல் ஆணையமே செய்துவிட்டால் பிரச்னை தீர்ந்தது.

24 comments:

  1. நலல பதவு
    அண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க

    ReplyDelete
  2. //புதிய வாக்காளர்களான இளைஞர்கள் அனைவரும், வாக்குச் சாவடிகளுக்குச் சென்று கட்டாயம் வாக்களிக்கவேண்டும் என்பதற்காகவே இந்த வசதியைச் செய்துதந்துள்ளோம்.//

    hats off!

    - suresh kannan

    ReplyDelete
  3. நல்ல காரியம் பண்ணியிருக்கீறிர்கள்.

    ReplyDelete
  4. நல்ல முயற்ச்சி....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள்

    அடுத்த முறை தமிழகம் முழுவதும் இந்த வசதியை செய்து முடிக்க advance வாழ்த்துக்கள்

    என்ன மாதிரி வழங்கி தேவைப்படும்.

    ReplyDelete
  6. //ஆனால் யூனிகோடில் இல்லாமல் ஏதோ ஓர் என்கோடிங்கில் உள்ளன. //

    அடுத்த கொடுமையை சொல்லவில்லையே

    அதை நகலெடுத்து என்கோடிங்கை மாற்றலாம் என்றால் அதையும் நகலெடுக்க முடியாதவாறு PDF கோப்பில் செட்டிங் செய்துள்ளார்கள்

    ReplyDelete
  7. நல்ல முயற்சி. பாராட்டுகள்

    ReplyDelete
  8. பாராட்டுக்கள்! அனைத்து வலையுலக நண்பர்களும் இந்த தகவலை சென்னை வாசிகளுக்கு கொண்டு செல்ல தங்களால் இயன்ற அளவு முயற்சி எடுக்க வேண்டும்.
    பத்திரிக்கைகளில்/செல்போன் மூலமாக விளம்பரம் செய்யும் எண்ணம் உள்ளதா?

    ReplyDelete
  9. Good action! I welcome and appreciate this act that reflects your social responsibility and technology awareness!

    Vazhthukkal!!

    ReplyDelete
  10. பிரமாதம்! நன்றி!!

    ReplyDelete
  11. பா. ரெங்கதுரைSun May 10, 10:11:00 AM GMT+5:30

    இன்றைய இந்தியத் தொழில்நுட்ப வளர்ச்சியில் இது சாத்தியமானதே என்பதை நிரூபித்திருப்பதைத் தவிர இம்முயற்சியினால் வேறு ஏதும் பயனில்லை.

    தேர்தலுக்கு ஓரிரு நாள்கள் முன்னரே வாக்காளர்களுக்குப் பிரதான கட்சிகளின் சார்பில் அவர்களுடைய வாக்குச்சாவடி சம்மந்தமான தகவல் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டுவிடுகிறது. எஸ்.எம்.எஸ்.மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும் என்ற ஆரம்பகட்ட ‘த்ரில்’லைத் தருவதைவிட இம்முயற்சியினால் உருப்படியான பலன் ஒன்றும் கிடையாது.

    இம்முயற்சியையே சில மாதங்களுக்குமுன், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளும் வகையில் செய்திருந்தால் அது நிச்சயம் பயனுடையதாக இருந்திருக்கும்.

    இது உங்களுக்கும் தெரிந்திருக்கும். இம்முயற்சியினால் உங்களுக்கும், உங்கள் பதிப்பகத்துக்குப் பெரிய விளம்பரம் எதுவும் கிட்டிவிடாது என்ற நிலையிலும், இவ்வசதி சாத்தியமே என்று demonstrate செய்ததற்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  12. நல்ல முயற்ச்சி

    ReplyDelete
  13. மிகவும் நல்ல முயற்சி. நன்றி.

    ReplyDelete
  14. பத்ரி
    அது Tab Encoding:
    உதாரணத்திற்கு http://www.elections.tn.gov.in/pdfs/dt9/ac089/ac089001.pdf என்ற pdfஇல் உள்ள textஐ காப்பி செய்து http://www.suratha.com/reader.htm பக்கத்தில் ஒட்டி Tab ஐ தேர்ந்தெடுத்தால் ஒருங்குறியில் (well... almost!)காண முடிகிறது:

    சட்டமன்ற தொகுதி எண், பெயா¢ மற்றும் பாகம் எண்
    1 பொது ஒதுக்கீட்டுத்தகுதி நிலை
    அன்புடன்
    வெங்கட்ரமணன்

    ReplyDelete
  15. அய்யா!

    எங்க பொழைப்பில் மண்ணை போட்ருவீங்க போலிருக்கே? :-)

    ReplyDelete
  16. Sir,
    I am Balasankar from Madipakkam.
    I have tried for getting poll booth from sending sms. but it did not get address for the booth. I get the sms as " invalid keyword".ok.

    I am not get the booth address. ok. Bye

    ReplyDelete
  17. அட! அற்புதமான முயற்சியாக இருக்கிறதே...

    ReplyDelete