Monday, June 14, 2004

அரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு

சென்னையைச் சேர்ந்த "பொதுச் செலவுகள் வட்ட மேசை அறக்கட்டளை" (Public Expenditure Round Table Trust) என்ற அரசியல் சார்பற்ற அமைப்பு பொதுச் செலவுகள் பற்றிய பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வது, விவாதங்களை ஊக்குவிப்பது, புத்தகங்கள் வெளியிடுவது, இவை மூலமாக மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்து அவை மேற்கொள்ளும் பொதுச் செலவுகளின் திறப்பாட்டையும் செயல்திறனையும் அதிகரிப்பது போன்ற நோக்கங்களைக் கொண்டது.

ஆங்கிலத்தில் மட்டுமில்லாமல், தமிழிலும் அச்சிட்டு இலவசமாக வெளியிடுகின்றனர். நேற்று எனக்கு இவர்கள் வெளியிட்டிருந்த "அரசு நிதிநிலை 2020 - நீண்டகால முன்னோக்கு" என்ற ஆவணம் கிடைத்தது. [ஆக்கியோர்: முனைவர் கி.வேங்கடராமன், இ.ஆ.ப (ஓய்வு), தமிழாக்கம்: முனைவர் ஏ.எம்.சுவாமிநாதன், இ.ஆ.ப (ஓய்வு)] அந்த ஆவணத்திலிருந்து:
முனைவர் கி.வேங்கடராமன் சென்னையில் அமைந்துள்ள பொதுச் செலவுகள் வட்ட மேசையின் தலைவர். இந்திய ஆட்சிப் பணியில் உயர் அலுவலராகப் பணிபுரிந்த இவர், பின்னர் வியன்னாவைத் தலைநகராகக் கொண்ட ஐக்கிய நாடுகள் தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (UNIDO) ஒரு நிர்வாக இயக்குனராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார். பொதுச் செலவுகள் குறித்த சில புத்தகங்களை எழுதியுள்ளார்.

"தி ஹிந்து" நாளிதழின் "2004 இந்தியத் தொழில்துறை" பற்றிய சிறப்பிதழுக்காக இவர் எழுதிய ஒரு கட்டுரையின் தமிழாக்கம் இக்குறுநூல்.

முனைவர் ஏ.எம்.சுவாமிநாதன் இந்த அமைப்பின் நிர்வாக அறங்காவலர். இவரும் இந்திய ஆட்சிப்பணியில் அலுவலராக, நிதிச் செயலர் உள்பட பல பதவிகளில் தமிழகத்தின் பணியாற்றியுள்ளார். சமீபத்தில் தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் செலவு சீராய்வு ஆணையத்தின் தலைவராகப் பணிபுரிந்து பல அறிக்கைகள் கொடுத்துள்ளார்."
பொதுச் செலவுகள் வட்ட மேசையைத் தொடர்பு கொள்ள விரும்புவோருக்காக முகவரி: பொதுச் செலவுகள் வட்ட மேசை, 3/357, ஏ.ஜி.எஸ் காலனி, கடற்கரை லே அவுட், கொட்டிவாக்கம், சென்னை 600 041. தொ.பே: 2451-1655. இப்பொழுதைக்கு என்னிடம் மின்னஞ்சல் முகவரி கிடையாது.

4 comments:

  1. பத்ரி, திரு வேங்கடராமனின் மின்னஞ்சல் : kvenkat1@vsnl.com நான் அவரிடம் பேசிய போது, அவர் விஷயங்களை 'மக்களுக்கு எடுத்து செல்வது' தான் சிரமமாக இருப்பதாகக் கூறினார். உங்களைப் பற்றி கூறினேன்.(எனக்கு தெரிந்ததை). மிகவும் மகிழ்ந்தார். முடிந்தால் அவரை நேரில் சந்தியுங்களேன்.

    ReplyDelete
  2. நிச்சயமாக அவரை சந்திக்க முயல்கிறேன். ஞாயிறு அன்று பொதுச் செலவுகள் வட்ட மேசை + இந்தியன் லிபரல் குரூப் இருவரும் இணைந்து நடத்திய பட்ஜெட் பற்றிய விளக்கக் கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். அங்குதான் PERT பற்றிய விவரங்களை அறிந்துகொண்டேன். பல 'இ.ஆ.ப' க்கள் மிக ஆர்வத்துடன், தங்களுக்குத் தெரிந்த விஷயங்களை பொதுமக்களுக்குப் போய்ச்சேருமாறு விளக்கினர். அது பற்றி நேரம் கிடைக்கும்போது எழுத வேண்டும்.

    பி.எஸ்.ராகவன் வந்திருந்தார். ஏ.எம்.சுவாமிநாதன் இருந்தார். தி ஹிந்துவில் எழுதும் ராஜரத்தினம் மற்றும் பலரும் இருந்தனர்.

    ReplyDelete
  3. இத்தகைய ஆவணங்களை இணையத்தில் வெளியிட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வெளியிடும் நிறுவனங்களின் செலவும் குறையும்.

    ReplyDelete
  4. இதை இணையதளத்தில் போட்டால் எளிதில் தகவல்களை
    பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்

    இண்டி ராம்

    ReplyDelete