Tuesday, September 28, 2004

வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

சனிக்கிழமை சத்யம் திரையரங்கில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படம் பார்த்தேன். படம் ஓடும்போது சந்தோஷமாக சிரித்தேன். கடைசிக் காட்சிகளில் கண்ணீர் விட்டுக் கதறி அழுதேன். மெடிகல் காலேஜ் கம் ஹாஸ்பிட்டலின் பொருந்தாத செட்டுகள் என் மனதை உறுத்தவில்லை.

மெடிகல் காலேஜ் பரிட்சைகள் எல்லாமே 'Choose the correct answer' முறையில் மட்டும்தான் அமைந்திருக்கும் என்பதை விது வினோத் சோப்ராவின் தயவால் அறிந்து கொண்டேன். மேலும் மெடிகல் காலேஜ் நுழைவுத் தேர்வில் நிறைய மதிப்பெண்கள் மட்டும் போதும் (93.5%), 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் எதற்குமே தேவையில்லை என்பதையும் அறிந்து கொண்டேன். வசூல்ராஜா 12ஆவது பாஸ் செய்துள்ளாரா, 12ஆவதில் எந்த வகுப்பு எடுத்துப் படித்தார், எத்தனை வருடங்கள் முன்னால் என்பதையெல்லாம் மெடிகல் காலேஜில் யாருமே கேட்க மாட்டார்கள் என்பதையும் புரிந்து கொண்டேன்.

மெடிகல் காலேஜ் டீன் என்பவர் கல்லூரியை தன் சொந்தக் கல்லூரியாக நடத்துவார் என்பதையும் புரிந்து கொண்டேன். அவர் பைல்ஸ் ஆபரேஷன் செய்வார், உடம்பைக் கிழித்து உள்பாகங்களைக் காண்பிப்பார், அட்மிஷன் விஷயங்களை கவனித்துக் கொள்வார், மாபெரும் அரங்கில் புது மாணவர்களை வரவேற்பார், அவ்வப்போது இஷ்டத்துக்கு எந்த சப்ஜெக்ட் வேண்டுமானாலும் நடத்துவார், அதன்பின் கோபம் வரும்போதெல்லாம் சிரித்து சிரித்து சேஷ்டை பண்ணுவார் - இப்படி படத்திலேயே சகல கலா மாஸ்டர் மாஸ்டர் அவர்தான் என்பதையும் தெரிந்து கொண்டேன்.

ஆனால் இதையெல்லாம் விட என் மனதை மிகவும் கவர்ந்தது சில மருத்துவச் செயல்முறைகள்தான்.

'கட்டிப்பிடி வைத்தியம்' எல்லா பிரச்னைகளையும் கிட்டத்தட்ட தீர்த்து விடும் என்று புரிந்து போனது. என் டாக்டர் ஏன் என்னைக் கட்டிப்பிடிக்கவே மாட்டேன் என்கிறார்? அடுத்த முறை போகும்போது கேட்க வேண்டும். கேரம் போர்டு வைத்தியம் பிரமாதம். வீல்சேர் கோமா கேஸ் வைத்தியம் சூப்பர். கடுகடு சிடுசிடு ஜானிடரை சிரித்த முகமாக்கிய அந்த ஒரு பேச்சும், கட்டிப்பிடி வைத்தியமும் 'A' கிளாஸ். ஆனாலும் அந்த வயிற்று கேன்சர் ஆசாமியை இப்படி அநியாயமாக சாகடித்திருக்க வேண்டாம். அதுவும் 'சிரிச்சி சிரிச்சி வந்தான் சீனா தானா டோய்' என்று அந்த 'காணாப்போன சிறுக்கி மகள்' பாடியதைக் கேட்டு, அவளோடு கும்மாளம் அடித்தபின் அவனைக் கொன்றிருக்க வேண்டாம். கடைசி நேரத்தில் அந்த 'சிறுக்கி மகள்' மீண்டும் வந்து ஆஸ்பத்திரியில் ஒரு சூப்பர் டான்ஸ் போட்டு கேன்சரிலிருந்து அவனை மீட்டெழ வைத்திருக்கலாம்.

படத்தில் அத்தனை பேரும் பிரமாதமாக நடித்திருந்தனர். கதை, வசனம், பாடல்கள், இசை அனைத்தும் அருமை. டைரக்ஷன் மனதைக் கொள்ளை கொண்டது. கேமரா, லொகேஷன் என்று அனைத்தும் பேஷ் பேஷ்.

இந்தப் படத்தை சிரத்தையாக வேலை செய்யும் டாக்டர்களுக்கு டெடிகேட் செய்திருப்பது மனதைத் தொட்டது. இந்தப் படம் இதயமே இல்லாத டாக்டர்களுக்கு சாட்டையடி! படத்தில் வரும் எல்லா டாக்டர்களுமே கெட்டவர்கள். ஏன் பாப்பு கூட. பாப்பு யாரா? பாப்புதான் ஜானகி, ஜானகிதான் பாப்பு. பாப்புவின் அற்புதமான இரண்டு நிமிடப் பேச்சால், வாழ்க்கை முழுவதும் தவறுகள் மட்டுமே செய்து வந்த டீன் வில்லன் ஒரு நொடியில் மனம் மாறுவது புல்லரிக்க வைக்கிறது. இனி உங்கள் வீட்டில் எந்த பிரச்னை வந்தாலும் கையில் மைக்கை வைத்துக் கொண்டு இரண்டு நிமிடம் தொடர்ச்சியாகப் பேசவும். கெட்டவர்கள் உடனேயே மனம் மாறிவிடுவார்கள்.

ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவா! வேட்டியப் போட்டுத் தாண்டவா?

11 comments:

  1. இன்னாடா இது, நம்மாளு பொருளாதாரம் பேஸ்றாரு, எலக்கியம் பேஸ்றாரு, கிரிக்கெட்டு பேஸ்றாரு ஆனா பயாஸ்கோப்பு பக்கம் ஒரு ரவுண்டு வுட மாட்டேங்கிறாரேன்னு ஃபீலாகி இர்ந்தேன். இன்னிக்கு அந்தக் குறை தீர்ந்துபோச்சு.

    சின்னவயசிலே வீட்டிலே எல்லோருமா உட்கார்ந்து கதை சொல்லுவோம், ஆளாளுக்கு எதாவது புதுசு புதுசா. அதிலே வெள்ளை யானை வரும், அது பறக்கும், இன்னும் என்னென்னவோ நடக்கும். கடைசியா "கதைக்கு காலில்லை"ன்னு சொல்லி கதையை முடிச்சிடுவோம். அந்த மாதிரி கமலோட காமெடி படங்கள்ல லாஜிக்கெல்லாம் பார்க்காதிங்க பத்ரி :-).

    உங்களோட அடுத்த பட விமர்சனத்தை "சந்திரமுகி"க்கு எதிர்பார்க்கிறேன் ;-) (அந்தப் படம் வெளிவருமா இல்லையான்னு ஆண்டவனுக்கு ரஜினிக்கும் மட்டுமே தெரியும், ஆனால் அவருடைய ரசிய சிகாமணிகள் இப்போவே கட்அவுட் தயாரிக்க ஆரம்பிச்சிருப்பாங்க :-P)

    ReplyDelete
  2. பி.கே.ஸ் ஸ்டைலில் சொன்னால்... காமெடி படத்தை அனுபவிக்கனும், ஆராயக்கூடாது.


    By: ganesh chandra

    ReplyDelete
  3. பி.கே.எஸ் : பம்மல் கே சம்பந்தம்


    By: ganesh chandra

    ReplyDelete
  4. அதுசரி... அந்த வீணை ஆட்டத்த பத்தி சொல்லவே இல்லெ??? :(
    டிடிங் டிங் டிங் டிங் டிடிங் டிங் டிங் டிங் :-)


    By: பாண்டி

    ReplyDelete
  5. ளோள்..
    மதி, உங்களுக்கு போட்டியா?

    ReplyDelete
  6. ˘̢,

    ¦Ã¡õÀ×õ ¯½÷źô ÀðΠŢðË÷¸û §À¡Ä¢Õ츢ÈÐ. ¸¡¦ÁÊ À¼í¸Ç¢ø ÁðÎÁøÄ, ¾Á¢úô À¼í¸Ç¢§Ä§Â Ä¡ƒ¢ì À¡÷ì¸ìܼ¡Ð ±ýÀ¨¾ ÁÈóРŢðË÷¸û §À¡Ä¢Õ츢ÈÐ.

    By: Suresh

    ReplyDelete
  7. ஸ்னேகாவை பட்ரி ஒரு வார்தையும் இல்லையே? Disappointing :-((

    By: Sneha fan

    ReplyDelete
  8. அதான் கடைசி பாரா முழுக்க அவங்களைப் பத்தித்தானே சொல்லியிருக்கேன்? பாப்பு, ஜானகி, ரெண்டு நிமிஷப் பேச்சு, வில்லன் மனசு மாற்றம். இதுக்குமேல என்ன வேணும்?

    ReplyDelete
  9. //என் டாக்டர் ஏன் என்னைக் கட்டிப்பிடிக்கவே மாட்டேன் என்கிறார்? //

    probably the doctor was a lady :-)

    By: anonymous

    ReplyDelete
  10. முழுநீளகாமடி(?!) படங்களில் லாஜிக் எதையும் எதிர்பார்க்க கூடாது. அந்த மாதிரி படம் எடுப்பவர்களும் வெறும் காமடி படமாக கடைசி வரை கொண்டு செல்லவேண்டும். காமடி மூலம் எதாவது "மெச்சகெ" கொடுக்கிறேன் பேர்வழி என்று கிளம்ப அது இரட்டிப்பு காமடியாகி விடுகின்றது. அது கிடக்கட்டும். சமீபத்தில் ரஜினி பற்றி ஏதோ கருத்து சொல்லப்போய் எக்கச்சக்க விமர்சனங்களுக்கு ஆளாகி, கமலை மட்டும் ரசிக்கும் அறிவுஜீவிக்கள் கும்பலைச் சேர்ந்த பிராமணர் என்ற முத்திரை குத்தப்பட்ட பத்ரிக்கு "நான் அப்படியல்ல, நிஜத்தை விமர்சிப்பவன்" என்பதை உலகிற்கு காட்ட ஒரு வாய்ப்பை தந்த படம் இது.(அதற்காகவே இதை எழுதினாரோ என்னவோ?!;-) ஆழ்வார்பேட்டை ஆண்டவனுக்கு பத்ரிதான் நன்றி சொல்லவேண்டும்.


    By: முகமூடி

    ReplyDelete