Saturday, November 06, 2004

ஆசாரகீனனின் தியோ வான் கோ இரங்கல்

ஆசாரகீனன் திண்ணையில் எழுதிய கட்டுரையை ரவி ஸ்ரீனிவாஸ் விமர்சித்து எழுதிய பதிவு இங்கே.

ரவி ஸ்ரீனிவாஸின் கருத்துக்களோடு நான் ஒத்துப்போகிறேன். ஆசாரகீனன் கட்டுரைகளைப் படிக்கும்போது எனக்கும் கிட்டத்தட்ட அதே உணர்வுகள்தான். ('மவுண்ட் ரோட் மாவோ' என்று கேவலப்படுத்தப்படும்) 'தி ஹிந்து' தியோ வான் கோ படுகொலையைப் பற்றி சிறியதாகவாவது செய்தி வெளியிட்டது. ஐரோப்பிய ஊடகங்களுக்கு மேற்படி விஷயம் அடுத்த நாட்டில் நிகழ்ந்த ஒன்று. அதனால் அவர்கள் இதைப்பற்றி அதிகமான செய்திகளைத்தான் வெளியிடுவார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்லப்படுவது கூட ஒரேமாதிரியான விஷயமில்லை.

1. இஸ்லாமிய இனக்குழுக்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் பெரும்பான்மை ஆட்சியாளர்கள் கையில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது ஏற்படும் எதிர்ப்பு வாதம், அதையொட்டிய தற்கொலைத் தாக்குதல் முயற்சிகள், ஆயுதப் போராட்டம் - பாலஸ்தீனம், செச்னியா போன்ற இடங்களில் ஏற்படுவது. இங்கு, போராளிகள் மதத்தின் சில கூறுகளைப் பயன்படுத்தி தம் எதிர்ப்புக்கு வலு சேர்க்கிறார்கள். இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது திலகர் பிள்ளையாரைத் துணைக்கு அழைத்ததைப் போல.

2. இஸ்லாமிய நாடுகளில் - பெரும்பான்மை மக்களும் இஸ்லாமியர்களே - சில இஸ்லாமியப் பிரிவுகளையோ, இனங்களையோ அல்லது வேறு மதத்தவரையோ அச்சுறுத்துவது, அழிக்க முனைவது. சூடான் டார்ஃபர் பகுதியில் அராபிய முஸ்லிம்கள் ஆப்பிரிக்க முஸ்லிம்களைத் துன்புறுத்துவது, பாகிஸ்தானின் சன்னி, ஷியா சண்டை போன்றவை.

3. இஸ்லாமிய நாடுகளில் அரச/ஆளும் வர்க்கம் தாம் எப்படி திரைமறைவில் நடந்துகொண்டாலும், வெளியில் பெண்கள் மீது, பொதுவான மக்கள்மீது கொண்டுவரும் அடக்குமுறைகள், அச்சுறுத்தல்கள், ஜனநாயக விரோதச் செயல்கள். சவுதி அரேபியா முதல், சோமாலியா வரை, இன்னமும் பல இடங்களில் இதைக் காணலாம்.

4. ஆப்கானிஸ்தான், இந்தோனேஷியா என்று ஒளிந்து கொண்டு பிற இடங்களில் - அமெரிக்கா, ஆப்பிரிக்கா நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள் - அவ்வப்போது அமெரிக்கர்கள் (பக்கத்தில் இருக்கும் பிற நாட்டவர்கள்) மீது நடத்தும் தாக்குதல்கள். அந்தத் தாக்குதல்களில், ஒரு பாவமும் செய்யாதவர்கள் பலியாகும்போது வீடியோ டேப் மூலம் அந்தச் செயல்களையெல்லாம் சரிதான் என்று நிலைநாட்ட முயற்சிப்பது.

5. ஒருசில நட்டு கேஸ்கள் தியோ வான் கோ போன்றவர்களை வெறிகொண்டு கத்தியால் குத்துவது.

எல்லாவற்றையும் ஒரே பிரஷ்ஷால் ஒரேமாதிரியான இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று சொல்வது எந்த விதத்திலும் நியாயமாகத் தெரியவில்லை. அத்துடன் இதுபோன்ற மேற்படி அடிப்படைவாதிகளுக்கெல்லாம் (ஐரோப்பிய மற்றும் இந்திய) இடதுசாரிகள் என்னவோ கையில் ஆயுதம் எடுத்துக் கொடுத்து, 'போ, போய்த் தாக்கு' என்று சொல்வது போல ஆசாரகீனன் எழுதியிருப்பது சரியல்ல.

இடதுசாரிகளை ஒட்டுமொத்தமாக, வீணாகக் குறைசொல்வதில் என்ன பயன் என்று புரியவில்லை. இடதுசாரிகளின் கொள்கைகளின் ஆதாரமாக சிலரைக் கொலை செய்வதில் தவறில்லை என்று ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

5 comments:

  1. ஒரு ரிக்கொஸ்ட்டு.. விதேசிப் பெயர்களை குறித்த கட்டுரை எழுதும் போது, அந்தப் பெயர்களின் ஆங்கில வடிவத்தையும் பிராகெட்டுக்குள் குடுக்க முடியுமா? கூகுளில் தேட வசதியாக இருக்கும்.

    By: prakashBy: prakash

    ReplyDelete
  2. ஒரு ரிக்கொஸ்ட்டு.. விதேசிப் பெயர்களை குறித்த கட்டுரை எழுதும் போது, அந்தப் பெயர்களின் ஆங்கில வடிவத்தையும் பிராகெட்டுக்குள் குடுக்க முடியுமா? கூகுளில் தேட வசதியாக இருக்கும்.

    By: prakashBy: prakash

    ReplyDelete
  3. இடதுசாரிகள் என்பது கிட்டத்தட்ட ஒரு கெட்டவார்த்தையாகக் கருதப்படும் பிரதேசங்களில் நடந்த புனிதப் போர்களையும், சிலுவையில் எரிக்கப்பட்டவர்களையும், கலிகுலா போன்ற வெறியர்களையும், நம்மூரில் மதுரையில் கழுவேற்றப்பட்ட சமணர்களையும், ஜைனக் களப்பிரர்களின் வெறியாட்டங்களையும், ஔரங்கசீப் போன்ற பைத்தியக்காரர்களையும் தாண்டித்தான் நாம் வந்திருக்கிறோம்.

    அரேபிய, ஒட்டோமன் துருக்கியர்களின் கலாச்சாரம் உச்சத்திலிருந்த மத்தியகாலங்களில் 'மூன்றாமுலக நாடுகளாக' இருந்தவை தற்போது 'முன்னேற்றமடைந்த' நாடுகளாகத் தங்களைப் பிரகடனம் செய்துகொள்ளும் மேற்கு ஐரோப்பிய நாடுகளே. அப்போது அமெரிக்கக் கண்டத்திற்கு ஐரோப்பியர்கள் வந்திருக்கக்கூட இல்லை! இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் போர்த்துகீசியர்கள் தொடங்கிவைத்த குழப்பங்களை; வெலாஸ்குவெஸ், ஹெர்னாண்டோ கோர்த்தெஸ் போன்ற ஐரோப்பிய தாதாக்கள் ஆக்கிரமித்தபின் கப்பல் கப்பலாக ஃபிரான்ஸிஸ்கப் பாதிரிகள் ஸ்பெயினிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டு தென்னமெரிக்கக் கண்டம் முழுவதும் catholicize செய்யப்பட்டதற்கும்கூட '...சாரிகள்' மீது பழிபோடலாம். இதையெல்லாம் சொல்லப்போனால், முதன்முதலில் நடந்த இனப்படுகொலைகளுக்குக் காரணம் '...சாரிகளே'. Neandertal மனிதர்களும் நம் மூதாதையர்களும் பக்கம் பக்கமாக வாழ்ந்துகொண்டிருந்தபோது '...சாரிகளாக' இருந்த நமது மூதாதையர்கள்தான் நியாண்டர்தால்களைக் கொலைசெய்தார்கள். சமீபத்தில் இந்தோனேசியாவில், 500 ஆண்டுகளுக்கு முன்புகூட homo florensis என்னும் பிரிவு வாழ்ந்துவந்ததாகவும், homo sapiens களின் குடியேற்றத்துக்குப்பிறகு அவை அழிந்ததாகவும் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதற்கும் '...சாரிகள்தான்' காரணம் என்று யூகிக்கப்படுகிறது.

    வன்முறை என்பது அநாகரிகம். அதை அனைத்து மதங்களும் களைத்துத்தீரும் வரை செய்திருக்கின்றன என்பது என் அபிப்ராயம்.

    வலதுசாரி இடதுசாரி அபிமானிகள், '...' என்பதற்குப்பதிலாக வலது அல்லது இடது என்று படித்துப்பார்த்துக்கொள்ளவும்.

    By: Montresor

    ReplyDelete
  4. Badri, I have read Ravi and your blog on this. I agree with your views. It gives an impression that Van Gogh murder was used to attack lefitsts. I think if Aacharakinan has written his criticism about leftists and/or The Hindu separately we could understand it. Otherwise, there is scope for even a common reader to question the motive of such articles. The sad thing is, rather than driving home the point about Van Gogh murder and the dangers we face in terms of religious fundamentalism, that article deviates and distorts into stone throwing on leftists and the Hindu. If thats the motive of the author, he succeeds. If the motive of the author is to bring out what happened to Van Gogh, the article failed in convincingly doing so. Thanks and regards, PK Sivakumar

    By: PK Sivakumar

    ReplyDelete
  5. I meant, I agree with both Ravi and your views. Thanks, PK Sivakumar

    By: PK Sivakumar

    ReplyDelete