Sunday, December 26, 2004

நாகையில் தீவிர இழப்பு

சென்னையில் நடந்தது ஒன்றுமேயில்லை என்பது போல சற்றுமுன்னர் நாகபட்டிணம் நண்பரிடம் தொலைபேசியில் பேசியதில் கிட்டத்தட்ட 5,000 (ஐந்தாயிரம்) நாகையில் மட்டுமே இறந்திருக்கலாம் என்கிறார். தானே முப்பது உடல்களை இழுத்து வந்து மருத்துவமனையில் சேர்த்ததாகச் சொல்கிறார். நாகபட்டிணம், வேளாங்கன்னி (மாதா கோவில் விசேஷம்...), நாகூர், காரைக்கால் கடற்கரையோரங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று இரவும் மீண்டும் இந்தோனேசியாவை ஒட்டி மற்றுமொரு நிலநடுக்கம் ஏற்படலாம் என்றும், அதனால் மீண்டும் கரையோரங்களில் கடலில் கொந்தளிப்பு இருக்கும் என்றும் சந்தேகிக்கிறார்களாம்.

தொலைக்காட்சியில் இப்பொழுதைக்கு நாகையில் 1,500 சாவு என்றுமட்டும் செய்தி வருகிறது.

நாகை/காரைக்கால் பகுதிகளில் பல பாலங்கள் உடைபட்டுவிட்டன. இப்பொழுதைக்கு ஒரேயொரு பாலம் திருவாரூரை இணைப்பது மட்டும்தான் இப்பொழுதைக்கு உடையாமல் உள்ளது.

இலங்கையில் 500ஐத் தாண்டிவிட்டது.

கடலூரில் 200க்கும் மேல்.

இராணுவம், கப்பல்படை மீட்புக்குப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கொண்டு விவரங்கள் கிடைக்கக் கிடைக்கத் தருகிறேன்.

3 comments:

  1. பிபிஸி 1000 பேர் தமிழ்நாட்டிலே இறந்திருப்பதாகக் கூறுகிறது. 4.56 EST

    ReplyDelete
  2. இலங்கை 1300 பேர் என்கிறது பிபிஸி

    ReplyDelete
  3. பிபிசி, சி என் என் இரண்டுமே எண்ணிக்கைகளைக் குறைவாகத்தான் கொடுக்கின்றன
    இங்கு மலேசியாவில் பினாங்கில் 50க்கும் மேல் இறப்பு! ஆனால் அவர்கள் அதையும் குறைவாகத்தான் சொல்கிறார்கள்.

    விபரங்களுக்கு
    நன்றி.

    ReplyDelete