Friday, January 07, 2005

சென்னை புத்தகக் கண்காட்சி 2005 - முன்னோட்டம்

இன்று சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கியது. இன்று பலரும் தத்தம் கடைகளை ஒழுங்கு செய்வதிலேயே நேரத்தைச் செலவிட்டனர். மாலை ஓரளவுக்குக் கூட்டம் வரத்தொடங்கியது.

கிழக்கு பதிப்பகம் வாசலில் நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தில் செய்துள்ள விளம்பரமும், கடை எண் 67-ன் ஒரு காட்சியும் இங்கே.

நுழைவுச்சீட்டு வாயில்


கடை உள்ளே


இம்முறை கிட்டத்தட்ட 250 கடைகள். போனமுறையை விட அதிகமான பங்கேற்பு என அறிகிறேன். சென்றமுறை போலல்லாமல் இரண்டு வாயில்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒரு வாயில் வழியாக உள்ளே வந்து மற்ற வாயில் வழியாக வெளியே போக வேண்டும். அடுத்த நாள் உள் - வெளி இரண்டும் மாறும்.

இம்முறை நான் வாங்க வேண்டிய நூல்களை முன்னதாகவே முடிவு செய்து விட்டேன். இன்று முதல் தவணையாக பெரியாரின் வாழ்க்கை வரலாறு (சாமி சிதம்பரனார்), மற்றும் பெரியாரின் மொத்த எழுத்துகள் - 8 தொகுதிகளாக. அதைத்தவிர திராவிடர் கழக பிரசுரங்கள் சில. ஜெயகாந்தனின் "ஹர ஹர சங்கர" (விலை ரூ. 15, கவிதா பதிப்பகம்). இதை நாவல் என்று சொல்வதை விட சிறுகதை என்றே சொல்லவேண்டும். இன்னமும் படிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்தேன். நாளைக்குள் படித்துவிடுவேன்.

இன்னமும் வாங்க வேண்டியது சல்மாவின் நாவல், ஆ.இரா.வேங்கடாசலபதியின் பாரதியார் விஜயா பத்திரிகை தொகுப்பு - இரண்டும் காலச்சுவடு பதிப்பகம்; எஸ்.ராமகிருஷ்ணனின் உலக சினிமா பற்றிய அருமையான புத்தகம் (விலை ரூ. 500, கனவுப்பட்டறை வெளியீடு). இதற்கு மேல் ஒன்றும் காசுகொடுத்து வாங்கப்போவதில்லை. (மீதி உருப்படியான புத்தகங்கள் எல்லாம் நாங்கள் பதிப்பித்தது:-)

புத்தகக் கண்காட்சி பற்றி தினமும் ஒரு சிறு ரிப்போர்ட் தருகிறேன்.

மைலாப்பூர் திருவிழா படங்கள் நாளை.

15 comments:

  1. If you have not bought already, please consider buying the complete short stories of Asokamitran published by Kavitha Pathipagam.

    I saw "Bharathiar - Vijaya Katuraikal" at my friend's place when I visited recently. I browsed few pages. Ve. Anaimuthu's collection of Periyar works is considered very good.

    On World Movies, there is an English book titled, "1001 movies you should see before you die". Please see the details here. http://search.barnesandnoble.com/booksearch/isbnInquiry.asp?userid=BQv1XJkoAO&isbn=0764157019&itm=1

    In this book, normally they give half page to one page for a movie. For Jalsaagar by Ray they have given 2 full pages and praises it very much. That itself states how good this book is.

    - PK Sivakumar

    ReplyDelete
  2. வயித்தெரிச்சல கொட்டிக்காதீங்க :(

    ரொம்பத்தான் 'உருப்படியான' குசும்பு :-)

    ReplyDelete
  3. PKS: அசோகமித்திரன் சிறுகதைகள் முழுத்தொகுப்பும் போன வருடமே வாங்கிவிட்டேன். கவிதா வெளியீடு - இரு தொகுதிகளாக, ரூ. 750 இரண்டும் சேர்த்து. அதைப்பற்றி, வாங்கிய உடனே என் பதிவில் எழுதியும் இருந்தேன்.

    ராமகிருஷ்ணனின் புத்தகம் பைண்டிங் செய்யும் இடத்தில் பார்த்தேன். புத்தகமாக இன்னமும் பார்க்கவில்லை. அதில் இரண்டு பாதிகள் - ஒன்று உலக சினிமாப் படங்களைப் பற்றி - முக்கியமான சினிமாக்கள் பற்றி ஓரிரு பக்கங்கள். பின் உலக சினிமாக் கலைஞர்கள் பற்றி ஓரிரு பக்கங்கள். ஹாலிவுட் முதல், மும்பை, சென்னை வரை, நடுவில் பிரென்ச் சினிமா, ஜப்பானிய சினிமா, ரே, வங்களா சினிமா என்று கிட்டத்தட்ட தேவையான எல்லோரும் இருக்கிறார்கள், மேலோட்டமாகப் பார்க்கும்போது. புத்தகத்தை வாங்கிப் படித்தபின் எழுதுகிறேன்.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. // off topic //

    There was one article by Pa.Ra on his blog, regarding the list of books to read. is it possible to get it back?

    By: veeramani

    ReplyDelete
  6. all the best badri. keep posting. It will be useful for the non-chennaities, like me.

    akkinikunchu

    By: akkinikunchu

    ReplyDelete
  7. I also wanted to buy the complete works of Periyaar and I contacted Viduthalai by email like 3 months back. As I expected, no one replied back yet.

    Our publisher's marketing aggressiveness...?!

    Dear Badri: could you please let me know whether Kaamadenu.com planning to sell Periyaar's work?



    By: Raj Chandra

    ReplyDelete
  8. Dear Badri,

    Thanks for your reply. I am sorry to have disturbed you. I well understood you have removed it, because you thought it was a mistaken post of mine. But actually my intention was to post that with just dots. I just want to mention that, and insist it was not a mistake. Anyway thanks for your reply, and sorry to have disturbed you.

    anbuLLa vasanth.

    ReplyDelete
  9. பத்ரி, குழந்தைகள் புத்தகங்கள் எந்தளவுக்கு இருக்கின்றன?

    ReplyDelete
  10. ராஜ்: நிச்சயமாக பெரியார் புத்தகங்கள் (திராவிடர் கழக பிரசுரங்கள்) அனைத்தும் இருக்கும். பிறரது புத்தகங்களும் இருக்கும். இந்த புத்தகக் காட்சியின்போது அனைவரிடமும் பேசி இந்தப் புத்தகங்களை kamadenu.com மூலம் விற்பனைக்குக் கொண்டுவருவோம்.

    ரோஸாவசந்த்: No probloem!

    சுந்தர்: குழந்தைகள் புத்தகங்கள் என நிறைய இருக்கின்றன. அதில் பலவும் ஆங்கிலத்தில்தான். தமிழில் எனக்குத் தெரிந்து தரமான விஷயங்கள் குழந்தைகளுக்கென வருவதேயில்லை.

    தமிழில் எழுதிக்கொண்டிருந்த குழந்தை எழுத்தாளர்கள் யாரும் இன்னமும் காணப்படுவதில்லை. இங்கும் நிறைய செய்யமுடியும். ஆங்கிலத்தில் இருக்கும் குழந்தை எழுத்துகள், படப்புத்தகங்கள், தகவல் களஞ்சியங்கள், சிடி மென்பொருள்கள் என ஒரு பட்டியல் தயாரித்து அதைப்போல (முதலில் காப்பியடித்தாவது, பின்னர் ஒரிஜினலாக) தமிழில் கொண்டுவருதல் வேண்டும்.

    காட்சியில் குழந்தைப் புத்தகங்கள் பற்றி நான் பார்த்ததை கடைசியாக எழுதுகிறேன்.

    ReplyDelete
  11. //குழந்தைகள் புத்தகங்கள் என நிறைய இருக்கின்றன. அதில் பலவும் ஆங்கிலத்தில்தான். தமிழில் எனக்குத் தெரிந்து தரமான விஷயங்கள் குழந்தைகளுக்கென வருவதேயில்லை.//

    இது மிகவும் உண்மை. கவனிக்க வேண்டியது.
    (எதோ என் லெவலுக்கு, நான் படிப்பது இதுதானே:-)
    -காசி

    ReplyDelete
  12. உன்மை, தமிழில் நல்ல குழந்தைகள் புத்தகங்கள் இல்லை. வணிக ரீதியாக நல்ல சாத்தியக்கூறுகள் இருக்குமானால், என் நிறுவனத்தின் மூலமாக செய்ய முயல்வேன். இதற்கான பதிலை, பத்ரி தான் சொல்ல வேண்டும்.

    ReplyDelete
  13. //Tகெரெ நச் ஒனெ அர்டிcலெ ப்ய் Pஅ.ற ஒன் கிச் ப்லொக், ரெகர்டிங் தெ லிச்ட் ஒf போக்ச் டொ ரெஅட். இச் இட் பொச்சிப்லெ டொ கெட் இட் பcக்?
    //
    பரி உபயம் !!
    க்ட்ட்ப்://பரி.கிருக்கல்கல்.cஒம்/இன்டெக்ஷ்.ப்க்ப்?இடெமிட்=70

    By: ரவியா

    ReplyDelete
  14. //There was one article by Pa.Ra on his blog, regarding the list of books to read. is it possible to get it back?
    //
    பரி உபயம் !!
    http://pari.kirukkalgal.com/index.php?itemid=70

    By: Raviaa

    ReplyDelete