Saturday, August 06, 2005

9990 ரூபாய்க்கு கணினி?

அனுராக் இதைப்பற்றி எழுதியுள்ளார். எனது ஆங்கிலப் பதிவு இங்கே.

நேற்று நான் வாடிக்கையாகக் கணினி வாங்கும் HCL டீலரிடம் பேசினேன். அதன்படியான தகவல்கள் இதோ:

1. இந்தக் கணினிக்கு ஆகும் செலவு ரூ. 12,500/- பத்தாயிரத்துக்குள் கணினி என்று HCL சொல்வது பெரும் புருடா. இதற்கு மத்திய அமைச்சர் ஒருவர் துணை நின்று பெரும் விளம்பரம் ஈட்டித் தந்துள்ளார்.

2. ரூ. 12,500 ஐயும் ஒரே வரைவோலையாக (draft) எடுத்து HCLக்கு அனுப்ப வேண்டும். கணினி கையில் கிடைக்க 25 நாள்கள் ஆகும்.

3. Via Cyrix 1GHz, onboard audio, 128 MB RAM, 40 GB HD... + Linux இந்தக் கணினி வலு குறைந்ததாகத்தான் இருக்கும். நானே இந்த சிப் வைத்து வீட்டில் ஒரு கணினியை வடிவமைத்தேன். அதற்கு எனக்கு ஆன மொத்த செலவு ரூ. 9,000. இரண்டாம் கை திரை ஒன்றை வாங்கி வைத்தேன். ஆடியோ சிடிக்கள் வேலை செய்கின்றன. விடியோ சிடி தடவும். நான் லினக்ஸ் தொகுப்பை நிர்மாணிக்க மிகுந்த சிரமம் எடுத்துக்கொண்டேன். ஆடியோ வேலை செய்யவில்லை. X விண்டோஸ் வேலை செய்யத் தடுமாறியது. திரை மாறி மாறி கலர் கலராக மின்னியது. இப்பொழுது ஒருவேளை சரியான டிரைவர்கள் கிடைக்கலாம். பின் விண்டோஸ் 98 போட்டேன். அது ஒன்றுதான் ஒழுங்காக வேலை செய்தது. விண்டோஸ் எக்ஸ்பி போட நினைக்காதீர்கள். உருப்படாது.

4. கூட ரூ. 1,000 கொடுத்தால், அதாவது ரூ. 13,500 கொடுத்தால், இண்டெல் செலரான் சிப் கொடுப்பார்களாம்.

5. இந்தக் கணினியை ஒரு வருடத்துக்கு சேவை செய்ய டீலருக்குக் கிடைக்கும் பணம் ரூ. 300தானாம். அதனால் டீலர்கள் யாரும் இந்தக் கணினியை காதலுடன் பார்க்கப்போவதில்லை. மேலும் இந்தக் கணினியில் பல பிரச்னைகள் வரும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

இதுவரையில் டீலர்கள் கூட இந்தக் கணினியை கண்ணால் பார்த்ததில்லை. பார்த்த இரண்டு முக்கியஸ்தர்கள் தயாநிதி மாறன், சோனியா காந்தி.

(அரசியல்) போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்! பொய்யான விளம்பரங்களைக் கண்டு மயங்காதீர்கள்!

2 comments:

  1. சிங்கப்பூரில் இருந்து 10ஆயிரம் ரூபாய்க்கு பெண்டியம் மூன்று கணினி இந்தியாவுக்கு எந்த லாபமும் இல்லாமல் சொந்தக்காரர்களுக்காக கொண்டு வந்து கொடுத்தேன்.(ஆல் இன் ஒன் செட், கிட்டாச்சி, 256ரேம், 20ஹார்டு டிஸ்க், 933 புரோசஸர், நார்மல் சிடிரோம், ப்ளாப்பி டிஸ்க், மவுஸ், கீபோர்டு, ஜப்பான் தயாரிப்பு). எக்ஸ்பி இயங்கு தளம். இந்தியாவில்கூட கொடுக்கலாம். ஆனால் பிராண்டடு என எதிர்பார்க்காமல் கொடுக்கலாம். எனது எதிர்காலக் கனவு 5000 ரூபாய்க்குக் கொடுப்பதுதான்!

    ReplyDelete
  2. இது நல்ல முயற்சி 10,000 ரூபாயில் வீட்டு உபயோகத்திற்கு தேவையான அளவிற்கு கிடைத்தால் நல்லதே. ஆனால் தொழில் நுட்ப அறிவு படைத்தவர்களுக்கே பிரச்சனையாக இருக்கிற தென்றால் கணிணி பற்றிய அறிவு இல்லாதவர்களுக்கு பிரச்சனைகள் வந்தால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

    ReplyDelete