Monday, August 01, 2005

பின் நவீனத்துவம் + மார்க்ஸியம்

திருப்பூரில் புத்தகக் கண்காட்சியின்போது இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். ஒன்று M.G.சுரேஷின் "பின்-நவீனத்துவம் என்றால் என்ன? (ஓர் எளிய அறிமுகம்)" - வாங்கி ஒரே நாளில் படித்து முடித்துவிட்டேன். எளிமையாக நன்றாக எழுதப்பட்டுள்ளது. புரிவதற்கு அவ்வளவு கஷ்டப்பட்ட வேண்டாம்.

பின்னர் முழுமையாக எழுதுகிறேன்... இப்பொழுதைக்கு சில குறைகள். ஏற்கெனவே தமிழில் இருக்கும் சொல்களுக்கு பதிலாக புதிது புதிதாக சொல்களைக் கொண்டுவந்து கஷ்டப்படுத்துகிறார் சுரேஷ். உதாரணம்: de-construction என்பதற்கு 'கட்டுடைத்தல்' என்றுதான் தமிழில் இதுகாறும் புழங்கி வந்திருக்கிறோம். நிர்-நிர்மாணம் என்ற சொல்லை முன்வைக்கிறார் சுரேஷ். பின்-நவீனத்துவ பிரதிகள் பற்றிப் பேசும்போது சில உதாரணங்களைச் சொல்லியிருக்கலாம்.

மற்றபடி அவசியம் வாசிக்கவேண்டிய புத்தக வரிசையில் சேர்க்கலாம். புதுப்புனல், 2004, பக்: 192, விலை ரூ. 100

இரண்டாவது புத்தகம் - மார்க்சியத்திற்கு அழிவில்லை, (கோவை) ஞானி, புதுப்புனல், 2001, பக். 192, விலை ரூ. 90

இப்பொழுதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பாதி தாண்டிவிட்டேன். ஞானியின் மார்க்சியம் பற்றிய சில கட்டுரைகள் அடங்கிய தொகுதி. கட்டுரைத் தொகுதியானதால் முழுமையான மார்க்சியத்துக்கான கையேடாக இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் ஓரளவு ஐரோப்பிய சிந்தனை முறை பற்றித் தெரிந்திருந்தால் படிக்க கஷ்டமிருக்காது என்றே தோன்றுகிறது.

1 comment:

  1. யோவ் பத்ரி! வலைப்பதிவில் ஜனரஞ்சகமாக இலக்கியத்தை எழுதுவது நீ தானய்யா. பின் நவீனத்துவம், மார்க்சியம் பற்றிய வெவ்வேறு நூல்களை ஒரே கட்டுரையில் விமர்சனம் செய்ய உம்மால் தானய்யா முடியும்.

    ReplyDelete