Tuesday, September 27, 2005

பாரமவுண்ட் ஏர்லைன்ஸ் தொடக்கம்

தமிழகத்தின் உட்புறத்தில் சேவையைத் தொடங்கும் இரண்டாவது தனியார் விமான நிறுவனம் பாரமவுண்ட் ஏர்லைன்ஸ். சென்ற வாரம் சேவையைத் தொடங்கிய இந்த நிறுவனம் கோவை-தில்லி, கொச்சி-தில்லி, கோவை-சென்னை ஆகிய வழிகளில் பறக்குமாம்.

இப்பொழுதைக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் வகையறாக்கள் (அல்லயன்ஸ் ஏர் உடன் சேர்த்து) தவிர்த்து ஜெட் ஏர்வேஸ் கோவை, மதுரை நகரங்களுக்குப் பறக்கிறது. திருச்சிக்கு இந்தியன் ஏர்லைன்ஸை விட்டால் வேறு வழியில்லை.

கீழ்க்கண்ட வழிகளை ஏர்லைன்ஸ்காரர்கள் உடனடியாக யோசிக்கலாம்.

மதுரை-பெங்களூர்
மதுரை-மும்பை
கோவை-மும்பை
திருச்சி-மும்பை
மதுரை-தில்லி
திருச்சி-தில்லி
சென்னை-நாகர்கோவில் (ஏர்போர்ட் எந்த அளவுக்கு இருக்கிறது என்று தெரியவில்லை!)

பல மதுரை, திருச்சி, கோவை ஆசாமிகள் மும்பை, தில்லிக்குப் போக வேண்டியுள்ளது.

டெக்கான் இன்னமும் தீவிரமாக தமிழக நகரங்களைக் கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

2 comments:

  1. beyond south only thoothukudi has an airport. that is also not in commercial use. but everyone is hopeing it will become the commercial airport. because of port trust and it will become the commercial centre after few years(sethu samudram, koodan kulam atomic power station, nanguneri export project, etc..).

    there is no airport in nagercoil

    all south districts are using trivandrum airport. sizable passangers in trivandrum airport are belonging to southern part of tamilians.

    ReplyDelete
  2. Paramount airlines...Essar-BPL..Badri sir, only business news after long gap. Looks like you have gone for long trip and out of the city. Whats your comments on Board-Saurv-Chappel matters? I though you would be first one going to write...
    Also don't for get about kushboo etc., :-)

    ReplyDelete