Friday, September 30, 2005

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநில மாநாடு

இன்று திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 10வது மாநில மாநாடு தொடங்கியது. ஞாயிறு வரையில் தொடரும்.

த.மு.எ.ச ஓர் இடதுசாரி அமைப்பு. தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் அரசியல் தளத்தில் பெருத்த பலத்துடன் இல்லாதிருந்தாலும், பல்வேறு தளங்களில் அமைப்பு ரீதியாக வலுவாக உள்ளனர். தொழிற்சங்கங்கள் ஒருபக்கம். இப்படி எழுத்தாளர்களை ஒன்றுதிரட்டி மாவட்டம் மாவட்டமாக அமைப்புகளை ஏற்படுத்துவது மற்றொன்று. (இந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் என்ன செய்வார்கள் என்பது புரியவில்லை.) தமிழ்நாடு அறிவியல் அமைப்பு - TamilNadu Science Forum என்னும் அமைப்பும் இடதுசாரி அமைப்புதான் என்பதை வெகு சமீபத்தில்தான் அறிந்துகொண்டேன். அவ்வப்போது தமிழில் சில அறிவியல் புத்தகங்கள் வெளியிடுவது, மாதாமாதம் தமிழிலும் ஆங்கிலத்திலும் அறிவியலுக்கான இதழ்களை வெளியிடுவது (தமிழில் 'துளிர்' என்ற இதழ்), பள்ளி ஆசிரியர்களுக்குப் பயிற்சிகள் அளிப்பது போன்றவை Science Forum வேலைகள்.

சில பத்திரிகைகள் (தீக்கதிர்...), புத்தக வெளியீட்டு நிலையம் (பாரதி புத்தகாலயம் நேரடியாக கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் இயங்குவது. அதைத்தவிர பல இடதுசாரி சாயும் பதிப்பாளர்களும் உள்ளனர்), புத்தக விற்பனை நிலையங்கள் என்று இடதுசாரிகளின் கை கலை, இலக்கியத் துறைகள் - முக்கியமாக எழுத்துத் துறையில் - வலுவாக உள்ளது.

நான் திருவண்ணாமலை சென்றது அங்கு சில எழுத்தாளர்களைச் சந்திக்க. மற்றபடி எனக்கு தனிப்பட்ட முறையில் சுவாரசியமாக ஒன்றும் இல்லை. காலையில் அரங்கினுள் நான் நுழையும்போது தெலுகு கவிஞர் வோல்கா என்பவர் (லலிதா குமாரி) தெலுங்கில் பேசிக்கொண்டிருந்தார். அதை ஒருவர் தமிழில் சொதப்பலாக, தப்பு தப்பாக மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார். உலகமயமாதல், மத அடிப்படைவாதம், பெண்ணியம் என்று சில விஷயங்களைத் தொட்டுச் சென்றது பேச்சு. நாளைய தீக்கதிரில் முழுமையான தகவல்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்.

-*-

என் முதல் கேள்வி... ஏன் தமிழகத்தில் இடதுசாரிகளைத் தவிர பிற அரசியல் கட்சிகள் வெறும் முட்டாள்தனத்தை மட்டுமே வளர்க்கின்றன? ஏன் அவை சிறிதும் பிற விஷயங்களில் ஈடுபடுவதில்லை? அம்மாவுக்கும், ஐயாக்களுக்கும் கட் அவுட் வைப்பதைத் தவிர வேறு எதையுமே செய்யத் திராணியற்றவர்களாக உள்ளார்கள் அந்தந்தக் கட்சிகளின் அமைப்பாளர்கள்? கருணாநிதியாவது அவ்வப்போது முரசொலியில் புகுந்து விளையாடுகிறார். மற்ற எல்லோரும் ஒட்டுமொத்தமான முட்டாள்களாக உள்ளனர். மேடைப்பேச்சில் கண்டதையும் உளறி, அடுக்குமொழியில் எதையாவது பேசிப் பிழைத்தால் போதும் என்று காலத்தை ஓட்டுகிறார்கள்?

இரண்டாவது கேள்வி: இடதுசாரிகள் - முக்கியமாக கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுகள் (CPM) ஏன் தமிழகத்தில் நன்றாகக் காலூன்றவில்லை? ஏன் மக்கள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை?

-*-

பி.கு. இடதுசாரிகளுக்கும் இடது பக்கத்தில் சில fringe கோஷ்டிகள் உள்ளன. புரட்சிகர மாணவர் பேரவை (அல்லது அதைப்போல வேறெதோ பெயரில் ஒன்று) மாநாடு நடக்கும் இடத்துக்கு அருகில் போஸ்டர்களை அடித்து ஒட்டிவைத்திருந்தது. த.மு.எ.சங்கத்தைக் கேலி செய்து இவர்கள் பார்ப்பனர்களைத் தூக்கிப் பிடிக்கிறார்கள், வழவழா கொழகொழா ஆசாமிகள் என்று பொருள் படும்படி நல்ல சிவப்பு வண்ணத்தில் போஸ்டர்.

பி.பி.கு. மக்கள் கலை இலக்கியக் கழகம் எங்கிருந்து வருகிறது; இடதுகளுக்கும் இடதா, வலதா என்று தெரியவில்லை. சமீபத்தில் தமிழ் எழுத்தாளர்கள் இரண்டு பேர் (தண்ணி அடித்து விட்டு) எழுதிய கூட்டுக் கவிதையில் ஏதோ சரியாக இல்லை என்று சொல்லி, அவர்களை மிரட்டி மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியதாகச் செய்தி வந்துள்ளது.

7 comments:

  1. இரா.மு.வைக் கேட்ட்டால் சி.பி.ஐ, சி.பி.எம். ஆகியவற்றின் கலை இலக்கிய அமைப்புகளின் பெயர்கள், பணிகள், அவற்றிலுள்ள முக்கியப் பிரமுகர்கள் என்று வரலாற்றைப் பிட்டு பிட்டு வைப்பார்.

    cpi -> மக்கள் கலை இலக்கிய கழகம்
    cpm -> முற்போக்கு எழுத்தாளர் சங்கம்

    மாதமொருமுறை....
    தாமரை - சி.பி.ஐ
    செம்மலர் - சி.பி.எம்.

    தினசரி....
    ஜனசக்தி - சி.பி.ஐ
    தீக்கதிர் - சி.பி.எம்.

    நன்றி: கூகிள்

    ReplyDelete
  2. //என் முதல் கேள்வி... ஏன் தமிழகத்தில் இடதுசாரிகளைத் தவிர பிற அரசியல் கட்சிகள் வெறும் முட்டாள்தனத்தை மட்டுமே வளர்க்கின்றன? //

    In all their enthusiasm to fight against meritocracy, over the time they unconciously got themselves into the belief that any aspect of competence, talent or intellect in any form within their party are against their parties' ideologies.

    ReplyDelete
  3. //
    இரண்டாவது கேள்வி: இடதுசாரிகள் - முக்கியமாக கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுகள் (CPM) ஏன் தமிழகத்தில் நன்றாகக் காலூன்றவில்லை? ஏன் மக்கள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை?
    //

    Inspite of their better intellectual basis (than any other party of TN), the communists fail to impress the mass mainly due to the following,

    1) No charismatic and articulate leaders. Not keen on expansionist politics.

    2) No effort to propogate to the general public what communism means. As of now, people vaguely translate communism as strikes, anti-US,labor unions, maoist terrorists etc.

    3)Too much of identification with the underclass (social and economic) a base which is rapidly depleting - that "the upwardly mobile stereotypes of today" with US leanings dont want to identify themselves with the communist ideologies whatsoever. simply its not a hip thing to do.


    4) Leaders themselves are not clear on Communism's relevance and implications in the ever-globalizing and fast "capitalizing" world - living in utopia - no sense of pragmatism.


    In short, communists in India should reinvent themselves as soon as they can. Need to revisit their ideologies, popularize them, tailor and transform their brand of politics to suit the indian tastes.

    ReplyDelete
  4. பா.பா,
    சி.பி.ஐ - கலை இலக்கிய பெருமன்றம். ம.க.இ.க அல்ல.

    ReplyDelete
  5. முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உண்மையில் பிற்போக்கு எழுத்தாளர் சங்கம்தான். மாக்கா ஈக்கா ஒரு காட்டுமிராண்டிக் கும்பல்.

    ReplyDelete
  6. / இடதுசாரிகள் - முக்கியமாக கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுகள் (CPM) ஏன் தமிழகத்தில் நன்றாகக் காலூன்றவில்லை? ஏன் மக்கள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை?
    /
    கொஞ்ச லேட்டா கேட்டாலும் நல்ல கேள்வியைத்தான் கேட்டிருக்கிறீர்கள். :-)

    ReplyDelete
  7. "இடதுசாரிகள் - முக்கியமாக கம்யூனிஸ்ட் மார்க்ஸிஸ்டுகள் (CPM) ஏன் தமிழகத்தில் நன்றாகக் காலூன்றவில்லை? ஏன் மக்கள் அவர்களைக் கண்டுகொள்வதில்லை?"

    எல்லாவற்றுக்கும் ரஷ்யாவைப் பார், சீனாவைப் பார் என்றவர்களை மக்கள் ஒதுக்கியதில் ஆச்சரியம் இல்லைதான். 1939-ல் ஸ்டாலின் - ஹிட்லர் ஒப்பந்தத்தில் ஆரம்பித்து சோவியத் யூனியன் அழியும்வரை அதன் ஊதுகுழலாக இருந்தவர்கள்தானே கம்யூனிஸ்டுகள்.

    சைனாவும் உலகமயமாக்கலுகுத் தாவிவிட என்ன செய்வது என்று புரியாமல் இருக்கிறார்கள் அவர்கள்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete