Tuesday, October 04, 2005

சென்னை பார்க் ஹோட்டல் விவகாரம் + குஷ்பூ

"Let us get some things straight. As long as a person is an adult, and does not kill, maim, molest, rape, abuse, or spit on anyone, how he or she chooses to lead his or her life should be their business alone, strictly off-limits to anyone else. That includes the clothes they wear, the books they read, the music they listen to, the films they watch. It includes life choices such as finding a career, making friends, marrying, staying single, getting a divorce, having children or not. Some people are wise in what they do, some are foolish, some have good taste, some bad. But as long as it does not harm anyone else, no one can stop anyone from doing what they want. To argue that my children and I could be influenced adversely by someone else's conduct that I find distasteful, and therefore I must do everything to stamp it out, is only to expose what little faith I have in my own way of life, my values and conduct and in the way I have brought up my children." - நிருபமா சுப்ரமணியன், தி ஹிந்து கருத்துப் பத்தி

மேற்படி பத்தியை முழுமையாகப் படியுங்கள்.

அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அணியவேண்டிய ஆடைகள் பற்றிய விதிமுறைகள் என்னைப் பொறுத்தமட்டில் அபத்தமானவை. ஆனால் மொபைல் போன்கள் பற்றிய விதிகள் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை. ஆடைகளுக்கான விதிமுறைகள் பெண்களைக் கட்டுபடுத்தத்தான் என்பதும் திண்ணம்.

பார்க் ஹோட்டலில் இளம் பெண்கள் மது அருந்துவது பற்றி இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசக் கொழுந்துகள் கண்டறிந்து புகைப்படத்துடன் எழுத அதனால் சென்னைக் காவல்துறை ஆணையர் கடுப்புடன் பார்க் ஹோட்டலை இழுத்துமூட உத்தரவிட்டார். நீதிமன்றம் வரை சென்றுள்ளது இந்த வழக்கு.

பார்க் ஹோட்டல் பிழைத்துக்கொண்டுவிடும். ஆனால் பாவம் குஷ்பூ. அவர் சொன்னது அவர் கருத்து, அது எனக்கு ஏற்புடையதல்ல என்று சிலர் சொல்லிவிட்டுப் போகலாமே? இல்லையாம். தமிழ் மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்தி விட்டாராம். அதனால் பாமக கட்சி அனுதாபிகள் ஊர் ஊராக அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்கள். இதை குஷ்பூ எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை. நீதிமன்றங்களும் அபத்தமாக இந்த வழக்குகளை எடுத்துக்கொண்டு குஷ்பூவை நேரில் ஆஜராகச் சொல்கின்றன. இதுபோன்ற frivolous வழக்குகளை ஒரேயடியாக டிஸ்மிஸ் செய்திருக்கவேண்டும்.

"தமிழ்ப் பெண்களை இழிவாகப் பேசினார்" என்று ஒருவர் மீது குற்றம் சாட்ட முடியுமா? தமிழ்ப் பெண்களையோ, தமிழ் ஆண்களையோ, தமிழ் வக்கீல்களையோ, தமிழ் அரசியல்வாதிகளையோ - இழிவாகப் பேசக்கூடாதா? அதற்குக்கூட இந்த நாட்டில் உரிமையில்லையா? இப்பொழுது குஷ்பூ மீது போடப்படும் வழக்குகள் harassment வகையைச் சார்ந்தது. வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் சரி, உன்னை அலைக்கழித்துவிட்டேன் பார்! என்ற திமிர், மமதை. தங்கர் பச்சானைப் பற்றி வாய்க்கொழுப்புடன் பேசினாயா, இப்பொழுது திண்டாடு, என்ற குரூரம்.

தனி மனிதனை ஆதாரமில்லாமல் இழிவாகப் பேசினால், வார்த்தைகளைத் திரித்து தவறான அர்த்தம் கற்பித்தால், ஒரு மனிதனது கண்ணியத்தைக் குலைக்குமாறு பேசினால் அது defamation. இதுவே libel, slander போன்ற வார்த்தைகளாலும் அறியப்படும். இதற்கு எதிராக பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடுக்க முடியும். இங்கும் இழிவாகப் பேசியவர் உள்ளர்த்தத்துடன், வேண்டுமென்றே எதிராளி மனரீதியாகவும், பணரீதியாகவும் பாதிக்கப்படவேண்டும் என்று பேசியிருந்தார் என்று நிரூபிக்கவேண்டும். ஆனால் போகிறபோக்கில் சொன்ன ஒரு சொல்லை - அது ஏற்புடையதோ, இல்லையோ - வைத்துக்கொண்டு அவரை அலைக்கழிக்க ஓர் அரசியல் கட்சி களத்தில் குதித்திருப்பது படு கேவலமான செய்கை.

இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு கட்சிகளும் இப்படிக் கேவலமான முறையில் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.

கலாசார போலீஸ்காரர்கள் வரும் தேர்தலில் மண்ணைக் கவ்வினால் எனக்கு சந்தோஷமே.

33 comments:

  1. very good article Badri. Surprised to see that you are also touching the politics which you didn't do for long time. Anyhow there are ppl to throw some brutal comments against you,

    --
    Jagan

    ReplyDelete
  2. திருமாவளவன் ஒரு சப்பைக் கட்டு கட்டியிருக்கிறார். தானும் குட்டையில் ஊறிய மட்டைதான் என்று தெளிவுபடுத்திவிட்டாரென்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. ///உன்னை அலைக்கழித்துவிட்டேன் பார்! என்ற திமிர், மமதை. தங்கர் பச்சானைப் பற்றி வாய்க்கொழுப்புடன் பேசினாயா, இப்பொழுது திண்டாடு, என்ற குரூரம்.
    ///

    - Exactly.

    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. I disagree with PMK and DPI on many issues.They are trying to harass Kushboo.It is nothing but tit for tat. But were Kushboo and
    others not acting as moral police
    in his case. Why his views were not treated as his personal views and why was he so much harassed even after he apologised. Are actresses more equal than others in India.

    PMK has been arguing for prohibition and has been a critic of tamil nadu governments opening of many liquor shops.One need not agree with PMK but one should be honest enough to
    acknowledge that PMK has been opposing drinking by men and women.
    I need not accept PMK's views on women and liquor to acknowledge the
    fact that PMK is against free flow of liqour. But Nirupama is trying to mislead readers on this.

    Is Nirupama all for legalising use of narcotics or for free flow of pornographic materials and legalising prostitution. Perhaps these 'liberals' may demand that adultrey should no longer be treated as a crime but only as a personal matter between two or more individuals.

    Today it has become fashionable to defend Kushboo uncritically and to
    declare that those who oppose her views are moral police.

    ReplyDelete
  6. குஷ்பூவும், பிற நடிகைகளும் தங்கர் பச்சான் விவகாரத்தில் நடந்து கொண்டதும் அபத்தம்தான். அவர்களும் தங்கர் பச்சானைக் குற்றம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். ஆனால் வந்து நேருக்கு நேராக நின்று மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் சொல்லியிருக்கத் தேவையில்லை. அதைத் தொடர்ந்தும் "தங்கர் பச்சான் யார்?" என்றெல்லாம் கேள்விகளைக் கேட்க வேண்டியிருக்கவில்லை.

    ஆனாலும்... இப்பொழுது நடப்பது அதைவிடவும் கடுமையானது, அபத்தமானது. இதைக் கண்டிக்க வேண்டுமென்றால் முந்திய விஷயத்தையும் கண்டிக்க வேண்டும் என்ற தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

    -*-

    நிருபமா பாமக குடியை வரவேற்கிறது என்று எங்கும் சொல்லவில்லை. குடியை எதிர்த்தாலும், அப்பட்டமாக டாஸ்மாக் முன் நின்று இப்பொழுதே மூடு என்றோ, குடிகாரர்களை எதிர்த்தோ ஏதாவது போராட்டத்தை நடத்துகிறார்களா இனக்காவலர்கள்? (அப்படி நடத்தவேண்டும் என்று நான் சொல்லவில்லை.) அப்படியெல்லாம் போகாத தமிழ் கலாசாரம் குஷ்பூ வார்த்தையில்தான் போய்விட்டதா என்ன?

    மற்றபடி "அடல்டரி" என்பது என்னைப் பொறுத்தமட்டில் மூன்று அல்லது நான்கு பேர் சம்பந்தப்பட்டது. அதை அவர்களுக்குள் அவர்கள் தீர்த்துக்கொள்ளலாம்.

    ReplyDelete
  7. That too the laughable matter is some small time magailarani lady from PMK filed the case .. what crap is this.. and some stupid weekly takes interview from some brothel .. gosh... we need to call all this idiots and slap them on the face.. and ask them to mind their business

    ReplyDelete
  8. //Today it has become fashionable to defend Kushboo uncritically and to
    declare that those who oppose her views are moral police. \\

    FULLY AGREE

    ReplyDelete
  9. ///இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு கட்சிகளும் இப்படிக் கேவலமான முறையில் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.///

    this is only because PMK and VC , you are saying this way. else if it is some other party or some women's wing or social welfare institutions, you wouldnt be support kushboo. that is for sure!
    you dislike the act because it is taken up by VC and PMK

    ReplyDelete
  10. பா.ம.க டாஸ்மாக் கடைகளின் முன் போராட்டம் நடத்தியிருப்பதாக அறிகிறேன். ராமதாஸ் மதுவால் இளைஞர்கள் சீரழிவதாக கூறியிருக்கிறார். கலாச்சாரம் என்ற பெயரில் அவர்கள் பெண்கள் மது அருந்துவதை குறை கூறுவதை நான் ஏற்கவில்லை. ஆண்கள் குடிப்பது சரி, பெண்கள் குடிப்பதுதான் தவறு என்ற நிலைப்பாட்டினை பா,ம.க எடுக்கவில்லை. நிருபமா கட்டுரையில் இது குறிப்பிடப்படுவதேயில்லை மாறாக பெண்கள் குடிப்பதை விமர்சிப்பவர்கள் ஆண்கள் குடிப்பதை விமர்சிக்கவில்லை என்ற பொருளே அவர் கட்டுரையில் உள்ளது.

    மது அருந்துவது ஒரு தனி நபர் உரிமை என்ற அளவில் மட்டுமே பார்ப்பதை நான் ஏற்கவில்லை. ஒரு தனி நபர் செயலால் பிறர் பாதிப்புறும் போது அதை தனி நபர் சார்ந்த பிரச்சினையாக மட்டும் பார்க்க இயலாது. அன்றாடக் கூலியில் பெரும் பகுதியில் மதுவிற்கு செலவழித்துவிட்டு குடும்பம நடத்த போதுமான பணம் தராத கணவர்களால் பாதிப்புறுவது யார் என்பதையும் யோசிக்க வேண்டும்.

    நிருபமா தனி நபர் உரிமைகள் குறித்து ஒரு மேலோட்டமான கண்ணோட்டத்தினையே முன் வைக்கிறார். இந்தக் கண்ணோட்டம் பிரச்சினைக்குரியது என்பதே என் கருத்து.

    ReplyDelete
  11. ///இதைக் கடுமையாக எதிர்க்க வேண்டும். பாமக, விடுதலைச் சிறுத்தைகள் இரண்டு கட்சிகளும் இப்படிக் கேவலமான முறையில் நடந்து கொள்வது கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டியது.///

    அட இதத்தாம்பா நானும் சொல்ல வர்றன். அப்ப தமிழ்நாட்டில உள்ள மாமிகள் எல்லாம் பொம்பளங்க கிடையாது. குஷ்புவின் வரிக்ள் அவர்களை பாதிக்கவில்லையா?

    ReplyDelete
  12. //Today it has become fashionable to defend Kushboo uncritically and to declare that those who oppose her views are moral police. \\

    ME TOO FEEL THE SAME

    Hypocrats and Stereotypes everywhere!

    ReplyDelete
  13. In my view Thangar, Kushbu, PMK and Cheetas did mistakes. If you think without prejudice you can identify what mistakes each of them did. One sad thing about the whole drama is: nobody there to speak for the Navya Nayar's hair stylist. In my view not paying Rs.600 for a hair stylist is the horrible crime.

    ReplyDelete
  14. குஷ்பு ஒரு இந்திய பிரஜை. அவரை தமிழ்நாட்டை விட்டு போக சொல்ல
    இவர்களுக்கு என்ன உரிமை உள்ளது? தமிழ்நாடு தனி நாடாகிவிட்டதா?

    நடிகர்கள் ஸ்ட் ரைக் செய்ததால் தங்கர் மன்னிப்பு கேட்டிருக்கலாம்.
    குஷ்புவுக்கு இந்த பிரச்சினை இல்லை. மிஞ்சி போனால் ஜாக்பாட்டிலிருந்து தூக்குவார்கள்

    குஷ்பு மன்னிப்பு கேட்டிருக்காமல் தன் நிலையில் உறுதியாக நின்றிருக்கவேண்டும்.

    ReplyDelete
  15. நிஜமாகவே வேறுபாடு தெரியாமல் தான் தங்கரையும், குஷ்புவையும் ஒப்பு நோக்கி பேசுகிறார்களா?

    காசுக்கு வருபவள் என்று ஒருவர் சொன்னால் மன்னிப்பு கேட்கச் சொல்வதும், தனிப்பட்ட ஒருவர் அவர் விரும்புவதைச் செய்வதற்கு முன்பு அதிலிருந்து வரக்கூடிய பின்விளைவுகளிலிருந்து தற்காத்துக் கொள்ளச் சொல்லும் அறிவுறையும் ஒன்றா?

    ReplyDelete
  16. Badri,

    Excellent post.

    ravi srinivas,

    adultery is not crime unless india has become an islamic republic? Has it become one?

    ReplyDelete
  17. ravi srinivassin karuthukkal sariyillai..mathu kudippathal kudippavanathu kudumpam pathikkappaduvathaka ravi solkirar...Super star Rajini,bush,soudi mannar,charunivethitha yellorum kudikkiranka..avanka kudumpam sirappai than irukku..Annal nanka kudicha pathippu..So ravi pirachanai mathuvil illai..samukathilum..unkalilum

    ReplyDelete
  18. Badri,
    It is your blog.
    Try to stop this kind of third rated comments that invoke the communal feelings of individuals.

    ReplyDelete
  19. Indian Penal Code
    http://www.indialawinfo.com/bareacts/ipc.html#_Toc496765390

    497. Adultery
    Whoever has sexual intercourse with a person who is and whom he knows or has reason to believe to be the wife of another man, without the consent or connivance of that man, such sexual intercourse not amounting to the offence of rape, is guilty of the offence of adultery, and shall be punished with imprisonment of either description for a term which may extend to five years, or with fine, or with both. In such case the wife shall be punishable as an abettor.

    If somebody thinks that adultery is a crime only in Islamic countries i pity him or her for being ignorant of the simple fact that adultery is a crime in secular India too.

    ReplyDelete
  20. பத்ரி அவர்களே,

    போலி டோண்டு வந்துவிட்டான் பார்த்தீர்களா?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  21. Badri,
    Nirupama's views and arguments make one think. I agree with yours too !

    enRenRum anbudan
    BALA

    ReplyDelete
  22. Badri,
    Would you please consider turning off anonymous comment option? There seem to be few sick minds around.

    ReplyDelete
  23. கடைசியில் நீங்களும் அனானி பின்னூட்டங்களை தடை செய்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  24. "பார்ப்பன திருமலை சென்னை வந்ததும் ஓடோடிச் சென்று வலைப்பதிவு சந்திப்புக்கு அழைத்து கூடிக்குலாவி குசலம் விசாரித்து மகிழ்ந்த மனது தலித் ஆதரவாளர் ரோசாவசந்த் வந்ததபோது ஓடி ஒழியச் சொன்னதே..."
    என்ன பொய்யான உளறல். ஆனால் உம்மால் வேறு என்ன செய்ய முடியும் உளறுவதைத் தவிர?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  25. test.
    Don't be amazed Badri. I gave the extra comments so that the post could be updated by Tamizmanam. If you delete comments without trace, the updating mechanism gets hung.
    While deleting, remember to keep the links and let the mention "deleted by a blog administrator" remain.
    Just a suggestion.
    Regards,
    Dondu Raghavan

    ReplyDelete
  26. குஷ்பு விடயத்தில் அரசியல் தான் இத்தனை தூரம் புயலை கிளப்பியது என்பதில் சந்தேகமில்லை,

    யாரும் வெற்றிபெற வேண்டுமென்பதோ/ தோல்வியுறவேண்டுமென்பதோ single agenda வை பொறுத்தது அல்ல. இந்த single agenda எல்லாம் படிக்காத பாமரர்களுக்கு சரி பத்ரி எப்படி single agenda விற்காக தோற்கடிக்கப்பட வேண்டுமென விரும்புகின்றார் என்பது புரியவில்லை, பத்ரி போன்றவர்களே ஒற்றை வரியில் தீர்ப்பு வழங்கும்போது என்ன செய்வது.

    கலாச்சார ஆயுதங்கள் கை கோளப்படும் போது அதன் முனை மழுக்கப்படுவதும் கூர் தீட்டப்படுவதும் ஆயுதம் யார் கையிலிருக்கின்றது என்பதை பொறுத்து தான், அது தான் நடந்து கொண்டுள்ளது என்பதிலும் எனக்கு சந்தேகமில்லை.

    ReplyDelete
  27. Kushbu's comments are nothing wrong. They are humanistic, rational and perhaps extremely important for the success and survival of females in an industry where every year scores commit suicide due to psychological and physical abuses. Comparing her statement to a magazine that voluntarily went and asked HER OPINION and got it published with the statement of a man who calls a worker 'prostitute' because she demanded her assistant's fees, is to say the least vulgarly inhuman.

    ReplyDelete
  28. you can block Anon. But any one can login as Anon. How will you stop them Mandu sorry Dondu

    ReplyDelete
  29. கருத்து சுதந்திரம் பற்றி இவ்வளவு பேசும் காவலர்களே..

    கொஞ்சம் இங்கே பாருங்கள்..

    http://icarus1972us.blogspot.com/2005/10/iipm-vs-gaurav-chabnis-fellow-bloggers.html

    இதற்கு உங்கள் பதில்கள் என்ன. ஜாதி,இன,மத,மொழி வேறுபாடுகளை களைந்து.. ஒன்று சேருங்கள்..

    ReplyDelete