Wednesday, March 01, 2006

மணிமேகலை பிரசுரம் செய்வது சரியா?

திண்ணை இணைய இதழில் முருகபூபதி என்பவர் எழுதியுள்ள கட்டுரைக்கான சுட்டி இதோ:

மணிமேகலை பிரசுரம் - தமிழ் சேவையா? வியாபார தந்திரமா?

5 comments:

  1. முருக பூபதி சொல்வதை விடவும் இன்னும் ஏராளம் கதைகளுண்டு.
    சென்ற மாதம் மெல்பேணில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்திருந்த போது நடந்த கூத்துக்கள் நிறைய. இதற்குப் பின்னும் ஏமாந்து கொண்டிருக்கும் மடையர்களைத்தான் சொல்ல வேண்டும்.

    குறிப்பாக எழுத்தாளரிடமே காசு வாங்கி புத்தகம் அச்சிட்டு 300 பிரதிகள் கொடுக்கும் விளையாட்டு இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதன் மர்மம் புரியவில்லை. எப்படியாவது புத்தகம் வெளிவந்தாற் சரி என்ற நிலையில்தான் இந்த எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் போலுள்ளது.

    ReplyDelete
  2. ஆரூரான்: "மெல்பேர்னில் நடந்த கூத்துக்கள்" பற்றி மேற்கொண்டு தகவல்களைத் தரமுடியுமா?

    ReplyDelete
  3. கடந்த வருடம் தினக்குரல் பத்திரிகையில் மணிமேகலைப்பிரசுரத்தின் ஏமாற்றுக்கள் என்று கட்டுரையொன்று வந்தது. அதற்கு மிகமிக உருக்கமாக ரவிதமிழ்வாணன் பதிலொன்று எழுதியிருந்தார். அதில் அவர் கேட்டது இதுதான். யாருக்காவது நாம் தருவதாகச் சொன்ன 300 புத்தகங்களைத் தராமல் ஏமாற்றியிருக்கிறோமோ?.
    ஆக, எழுத்தாளர்கள் ஒத்துக்கொண்டு காசு கொடுத்து அந்த 300 ஐயும் பெற்றுக்கொள்ளும்போது, மணிமேகலைப்பிரசுரம் மீது ஏமாற்று என்ற குற்றச்சாட்டை முன்வைக்க முடியாமலுள்ளது.

    மேலும், அப்பதிலில், "உலகம் முழுவதும் நான் பயணம் செய்யும்போது 40 கிலோகிராம் புத்தகங்களை என்னுடன் காவிச்செல்கிறேன். வேறு யாராவது இப்படிச் செய்கிறார்களா? இப்படிக் கஸ்டப்பட்டுத் தமிழ்த்தொண்டாற்றும் என்னை இப்படி ஏமாற்றுக்காரர் என்று சொல்ல எப்படி மனசு வந்தது?" என்று கேட்கிறார்.

    என்ன இது? ஒரு வியாபாரி தான் விற்கும் பொருளைக் காவிச்சென்று விற்பதைத் தமிழ்த்தொண்டாகச் சொல்கிறாரே? அதைப் பார்த்துப் பதறிப்போய் "உவங்கள் உப்பிடித்தான் சும்மா எழுதுவாங்கள். நீங்கள் யோசிக்காதையுங்கோ நாங்களிருக்கிறம்" என்று முதுகு சொறியவும் எம்மில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.

    ******************
    பத்ரி,
    தனிமடல் போட்டிருக்கிறேன். பாருங்கள்.

    ReplyDelete
  4. பத்ரி.
    பதிப்பகத் துறையச் சேர்ந்த நீங்கள் இந்தச் செய்தியை எப்படிப் பார்க்கிறீர்கள். அதையும் சொல்லலாமே. வெறுமனே சுட்டிகள் மட்டும் கொடுப்பது ஏன்?

    ReplyDelete
  5. முத்துகுமரன்,

    பதிப்பகத் துறையில் இருப்பவன் என்ற வகையில், எனக்கு இங்கே சொல்ல நிறைய இருக்கிறது. அடுத்த இரண்டு நாள்களுக்குள் பதிவில் எழுதுகிறேன்.

    ஏற்கெனவே 'வானிடி பப்ளிஷிங்' பற்றியும் சுரண்டல்களிலிருந்து மீள்வது பற்றியும் என் பதிவில் எழுதியிருக்கிறேன். நிலாவின் பதிவிலும் அதைப்பற்றி எழுதினேன் என்று நினைக்கிறேன். என் முந்தைய பதிவு:

    தமிழ் பதிப்புலகம் பற்றி...

    ReplyDelete