Thursday, April 13, 2006

மும்பை பார் நடனம் மீதான தடை விலக்கல்

மும்பை நடன விடுதிகளில் பெண்கள் நடனமாடுவதைத் தடுக்க மஹாராஷ்டிரா அரசு ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்தது. ஆளுனர் அதில் கையெழுத்திடவில்லை. பின் மஹாராஷ்டிரா அரசு சட்டசபையில் ஒரு மசோதாவைக் கொண்டுவந்து அதனைச் சட்டமாக்கியது.

இதை எதிர்த்து நடன விடுதிகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். பெண்களைச் சுரண்டுவதைத் தடுப்பதாகச் சொல்லிச் சட்டம் இயற்றிய அமைச்சர், பல்லாயிரக்கணக்கான பெண்கள் வேலையின்றித் திண்டாடப்போவதைக் கருத்தில் கொள்ளவில்லை.

வழக்கில் நேற்று வெளியான தீர்ப்பில் இந்தச் சட்டம் செல்லாது; அதிலும் முக்கியமாக சில இடங்களுக்கு மட்டும் விலக்கு அளித்து இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் சரியல்ல என்று நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதை எதிர்த்து மஹாராஷ்டிரா அரசு மேல்முறையீடு செய்யலாம்.

முந்தைய பதிவு:
மும்பை பார் நடனம் மீதான தடை


1 comment:

  1. தமிழ்ப்புத்தாண்டுக்கு ஊருக்குப்போக ஒருவாரம் லீவு கேட்டான் மாட்டேன்னுட்டாங்க.

    எப்படிப்பார்த்தாலும் மூணுநாள் லீவு வருது, அப்ப மும்பைக்கு போயிர வேண்டியதுதான். :-)

    ReplyDelete