Sunday, June 18, 2006

வியாழனும்செவ்வாயும் சனியும் அருகருகே

இன்று இரவு வியாழன்செவ்வாய், சனி ஆகிய கோள்கள் ஒன்றுக்கொன்று வெகு அருகில் வரும் என்று தி ஹிந்துவில் செய்தி வந்திருந்தது. சென்னை பிர்லா கோளரங்கத்தில் பொதுமக்கள் இதனைப் பார்க்க வசதிகள் செய்து தரப்போவதாக எழுதியிருந்தார்கள். சற்றுமுன்னர் அங்குச் சென்றுவிட்டுத் திரும்பினோம்.

வெறும் கண்களாலேயே இரு கோள்களும் ஒன்றுக்கொன்று அருகே இருப்பது இரவு சுமார் 7.30 மணிக்குத் தெரிய ஆரம்பித்தது. கோளரங்கத்தில் நிறைய கூட்டம். 8.30 மணிக்கு மேல் தெரியாது என்ற நிலை. நாங்கள் தொலைநோக்கிக்கு வெகு அருகே செல்லும்போதே வெறும் கண்களுக்குத் தெரியாமல் மறையத் தொடங்கிவிட்டது. 8.15க்கு தொலைநோக்கியில் பார்க்கும்போது சனி மட்டும்தான் ஓரளவுக்குத் தெரிந்தது.

நாளை இரவும் தெரியுமாம். ஆனால் சூரியன் மறைந்தபின் சீக்கிரமாகவே கிரகங்களும் மறைந்துவிடுமாம்.

10 comments:

  1. அண்ணே "Mars" க்கு தமிழ் செவ்வாய்், வியாழன் (Jupiter)் அன்று! ;-)
    குரு பகவான் கோச்சுக்கப் போறார், திருத்திடுங்க ;-)

    ReplyDelete
  2. நான் Jupiter என்பது 'வெள்ளி' என்றல்லவா நினைத்துக்கொண்டிருக்கிறேன்?

    தெரிந்தவர்கள் திருத்துங்கள்... நான் நினைத்துக்கொண்டது:

    ஞாயிறு - Sun
    திங்கள் - Moon
    செவ்வாய் - Venus
    புதன் - Mercury
    வியாழன் - Mars
    வெள்ளி - Jupiter
    சனி - Saturn

    இல்லையா?

    ReplyDelete
  3. பத்ரி,
    எனக்கு இந்தக் கோள்களின் தமிழ்ப்பெயர்கள் சரியாகத் தெரியாது. ஆனால் Mars என்றால் செவ்வாய்க்கிரகம் என எங்கேயோ படித்த ஞாபகம். கிரகங்களுக்கான தமிழ்ப்பெயரை நானும் அறிய ஆவலாக உள்ளேன்.

    நன்றி.

    ReplyDelete
  4. ...என்று நினைக்கிறேன்?!?!?

    ReplyDelete
  5. பத்ரி - கிழமை வரிசையில் அல்ல - ஜாதக வானியல் அமைப்புப்படி தமிழில் கோள்களைக் குறிப்பிடுவதை வைத்துப் பார்த்தால் தமிழில் mars எனக் குறிப்பிடப்படுவது செவ்வாய் என்பதும், jupiter எனக் குறிப்பிடப்படுவது (குரு/வியாழன்) என்றும் முந்தைய அனானி குறிப்பிட்டிருப்பது சரியே.

    ReplyDelete
  6. செவ்வாய் -Mars
    வியாழன் - Jupiter
    வெள்ளி - Venus

    ReplyDelete
  7. ஞாயிறு - Sun
    திங்கள் - Moon
    செவ்வாய் - Mars
    அறிவன் (புதன்) - Mercury
    வியாழன் - Jupiter
    வெள்ளி - Venus
    காரி (சனி) - Saturn

    அன்புடன்,
    இராம.கி.

    ReplyDelete
  8. ஞாயிறு - Sun
    திங்கள் - Moon
    செவ்வாய் - Mars
    புதன் - Mercury
    வியாழன் - Jupiter
    வெள்ளி - Venus
    சனி - Saturn

    Pluto, Neptuneல எது ராகு எது கேது என்று தெரியவில்லை! :O)

    ReplyDelete
  9. வியாழனும் சனியும் அருகருகே ? சுவாரிஸ்யம் ?
    அதைவிட சுவாரஸ்யம் சட்டசபையில் ராகு கேது எதிரெதிரே சந்தித்துக் கொள்வது என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  10. //Pluto, Neptuneல எது ராகு எது கேது என்று தெரியவில்லை! :O)//
    அவை பருப்பொருள்கள் அல்ல. நிழல்கள்.

    ReplyDelete