Friday, July 21, 2006

உலகத் தமிழர் இயக்கம் மீதான விசாரணை

National Post செய்தி: Mounties call Tamil group 'arm of Tigers'

கனடாவில் உள்ள அமைப்பான 'உலகத் தமிழர் இயக்கம்' (World Tamil Movement) மீது கனடா காவல்துறை RCMP 2002-ம் ஆண்டு முதல் விசாரணை மேற்கொண்டிருந்தது. தமிழர் நலனுக்கான லாபநோக்கில்லாத அமைப்பு என்ற பெயரில் இருந்தாலும் இந்த அமைப்பு விடுதலைப் புலிகளின் முகப்பு நிறுவனம் என்றும் கனடாவில் பல்வேறு வழிகளில் பணம் சேர்ப்பதன்மூலம் விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வாங்க இந்த அமைப்பு உதவி செய்கிறது என்றும் நேற்று ஒண்டாரியோ மாகாண நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் RCMP தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி அன்று விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா அரசாங்கம் தடை செய்தது. அதைத் தொடர்ந்து WTM சில ஆவணங்களை மறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று அறிந்த RCMP, WTM-ன் Montreal கிளையை ஏப்ரல் 13-ம் தேதி சோதனையிட்டுள்ளனர். டொராண்டோ கிளையை ஏப்ரல் 22-ம் தேதி சோதனையிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment