Thursday, November 02, 2006

சென்னையில் கூட்டம் பற்றி இரா.செழியன்

சென்ற பதிவு ஒன்றில் கூட்டம் நடத்த எந்த மாதிரியான அனுமதி வேண்டும் என்று கேள்வி எழுப்பியிருந்தேன். இன்று தினமணியில் வெளியான கருத்துப் பத்தியில் இரா.செழியன் சில விவரங்கள் தருகிறார். ஆனால் தகவல் முழுமையாக இல்லை. அவரது கட்டுரையிலிருந்து சில தகவல்கள் இங்கே.

* கூட்டங்கள் நடத்துவதை அனுமதிக்கவும் தடுப்பதற்குமான அதிகாரம் சென்னைப் போலீஸ் சட்டம் 1888-ன் கீழ் சென்னைப் போலீஸ் கமிஷனருக்குத் தரப்பட்டிருக்கிறது. அதன்படி கூட்டத்தை நடத்த முற்படுபவர் தருகிற மனுவை ஆராய்ந்து, கூட்டத்தை நடத்துவதற்கு சில கட்டுப்பாடுகளுடன் போலீஸ் ஆணையர் அனுமதி வழங்கலாம், அல்லது வழங்காமல் போகலாம்.

* அனுமதி வழங்காத நிலையில் ... கூட்டம் நடத்துபவருக்கு வாய்ப்பளித்து நேரிடையாக அவரோ அல்லது அவரது வழக்குரைஞரோ கூட்டம் நடத்துவதற்கு உள்ள தமது வாதங்களை முன்வைக்கலாம்.

* அதன்பிறகும் அனுமதி வழங்கமுடியாது என்று போலீஸ் கமிஷனர் முடிவெடுத்தால் அனுமதி வழங்காததற்கான காரணங்களை எழுத்து மூலம் காட்டி, அனுமதி வழங்க மறுக்கும் உத்தரவைத் தரலாம்.

* கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால் 'தடையில்லை' என்று நினைத்து கூட்டத்தை நடத்தக்கூடாது. போலீஸ் சட்டம் 6-வது விதிமுறையில் உள்ள எச்சரிக்கையின்படி, அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தினால் ஆயிரம் ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒரு மாதம் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து - என்ற தண்டனைக்கு உள்ளாக நேரிடும்.

4 comments:

  1. ஆமா! இக்கூட்டத்தில் வலைப்பதிவாளர் கூட்டமும் உண்டு தானே!

    ReplyDelete
  2. //ஆமா! இக்கூட்டத்தில் வலைப்பதிவாளர் கூட்டமும் உண்டு தானே!//
    கண்டிப்பாக உண்டு! அதனால் தான் நம்மவர்கள் சந்திப்பு என்று போட்டுக்கொள்கிறோம்.

    காவல் துறையின் அனுமதியோடு சென்னையில் அடுத்த வலைப்பதிவர்கள் சந்திப்பு பெரிய அளவில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அறிவிப்பு விரைவில் வரும்.

    ReplyDelete
  3. //கூட்டம் நடத்துவதற்கான அனுமதி வரவில்லை என்றால் 'தடையில்லை' என்று நினைத்து கூட்டத்தை நடத்தக்கூடாது. //

    ஆத்தாடி ...
    "Technical Meetings" மற்றும் "Political Meeting" வேறுபாடு உண்டா ???
    ஏனென்றால்
    ஒரு அரசு ஊழியர் Technical Book எழுத அரசிடல் முன் அனுமதி பெற தேவையில்லை
    ஆனால்
    ஒரு அரசு ஊழியர் Political Book எழுத அரசிடல் முன் அனுமதி பெற வேண்டும். அதுவும் அனுமதி விண்ணப்பத்துடன் முழு scriptம் அனுப்ப பட வேண்டும்

    விதி இங்கே
    http://doctorbruno.blogspot.com/2006/11/technical-vs-political.html

    ReplyDelete
  4. கூட்டம் நடத்துவதற்கான அனுமதி கேட்டு விண்ணப்பித்தவற்களுக்கு உரியகாலத்தில், அதாவது கூட்டம் நடக்கவுள்ள தேதி அல்லது நேரத்திற்கு முன்னமேயே காவல்துறையின் கருத்து அளிக்கப்படவேண்டும் என்கிற நியதியை காவல்துறை கடைபிடிக்கவேண்டாமா? காவல்துறையின் மௌனத்தை சம்மதம் என்று கொண்டால் அதில் என்ன தவறு? ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே கூட்டத்திற்கு அணுமதி கேட்கும் விண்ணப்பம் காவல்துறையை வந்தடையவேண்டும் என்றும் காவல்துறை அதன் கருத்தை கூட்டத்திற்கு ஒரு நாள் முன்னமே அளித்துவிடவேண்டும் என்பதை நடைமுறையாக்குவதில் என்ன இடையூறு இருக்கமுடியும்?

    ReplyDelete