Tuesday, December 19, 2006

நியூ ஹொரைசன் மீடியா ஆங்கிலப் பதிப்பு

தமிழை அடுத்து ஆங்கிலத்தில் புத்தகங்கள் வெளியிடும் வேலையில் இறங்கியிருக்கிறோம். இதற்கென இரண்டு ஆங்கிலப் பதிப்புகள் (imprints) வரவுள்ளன.

ஓர் ஆங்கில இம்பிரிண்ட் முழுக்க முழுக்கப் புனைகதைகளுக்காக. இந்திய மொழிகளில் வெளியாகும் நாவல்கள், சிறுகதைகள், (ஓரளவுக்கு இலக்கியம் தொடர்பான கட்டுரைகள், சித்திரங்கள்) ஆகியவற்றை ஆங்கிலத்தில் கொண்டுவந்து இந்தியாவிலும் ஆங்கிலம் படிக்கும் பிற நாடுகளிலும் கிடைக்கச் செய்வது இந்தப் பதிப்பின் நோக்கம்.

முதலில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு. முதலாவதாக எடுத்துக்கொண்டிருப்பது அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ஆதவன் ஆகியோரது நாவல்கள் ஒன்றொன்று. இவை ஜனவரி மாதக் கடைசியில் வெளியாகும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குக் கொண்டுவரவேண்டிய நாவல்கள், சிறுகதைகள் என்று அவசியமாக நீங்கள் கருதும் புத்தகங்களைப் பற்றியும் ஆசிரியர்களைப் பற்றியும் எனக்கு எழுதவும்.

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிமாற்றும்போது பல பிரச்னைகள் தெரியவந்தன. தமிழ் -> ஆங்கிலம் மொழிபெயர்ப்பாளர்களும் நிறைய தேவைப்பட்டனர். இதைக் கருத்தில் கொண்டு ஒரு சிறு கருத்தரங்கை சென்ற வாரம் (13 டிசம்பர் 2006) ஏற்பாடு செய்திருந்தோம். இந்திரா பார்த்தசாரதி, ஜெயகாந்தன் இருவரும் கலந்துகொண்டனர். சில மொழிபெயர்ப்பாளர்களும் மொழிபெயர்ப்பில் ஆர்வம் உள்ளவர்களும் கலந்துகொண்டனர்.


ஜெயகாந்தனும் இந்திரா பார்த்தசாரதியும்


மொழிபெயர்ப்பாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள்.


கூட்டம்

மற்றொரு ஆங்கிலப் பதிப்பு கிழக்கு பதிப்பகம் போன்று ஆங்கிலத்தில் எளிமையான non-fiction புத்தகங்களை வெளியிடுவதற்காக. இவையும் கூடிய விரைவில் வெளியாகும்.

2 comments:

  1. Hi Badri,

    Good efforts. Would like to see James Joyce 'Ullysses' in Tamil.Also all the books of Indira Parthasarathy.

    I occasinally translate some Tamil works in http://rgiri.livejournal.com

    Giri.

    ReplyDelete
  2. தயவு செய்து யுலிசிஸை தமிழில் மொழிபெயர்க்க அனுமதிக்காதீர்கள். அந்த அளவிற்கு இங்கு யாருக்கும் ஆங்கிலமும் தமிழும் தெரியாது.

    ReplyDelete