Sunday, August 26, 2007

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்

தமிழக உள்ளாட்சித் துறை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்ற திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. இதன்படி ஐந்தாண்டுகளில் 12,618 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ஒன்றுக்கு ரூ. 20 லட்சம் வீதம் பணம் ஒதுக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 2500 கிராமப் பஞ்சாயத்துக்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

ரூ. 20 லட்சத்தை எதற்கெல்லாம் செலவு செய்வார்கள்? அடிப்படை வசதிகளை மேம்படுத்த என்று சொல்கிறார்கள்.

இந்தப் பணத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு நூலகம் அமைப்பது என்று முடிவெடுத்துள்ளார்கள். ஒவ்வொரு நூலகத்துக்கும் இந்த 20 லட்சத்திலிருந்து ரூ. 35,000 புத்தகம் வாங்குவதற்கு என்று முடிவு செய்துள்ளனர். அதிகமாகத் தமிழும், கொஞ்சம் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் இருக்குமாம். இந்த நூலகங்களை உருவாக்கியபின், இவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு பொது நூலகத்துறையிடம் வழங்கப்படுமாம்.

இந்த ஆண்டு, இந்த கிராமப் பஞ்சாயத்து நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் பதிப்பாளர்களுக்கும் புத்தக விற்பனையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

2 comments:

  1. Would that be a comment on politics that reads like a news report??

    This post of yours!?

    :-)

    ReplyDelete
  2. It is just a news report:-) I am informing the readers that as part of Anaithu Grama Anna Marumalarchi Thittam, TN Govt. is procuring books worth Rs. 8.9 crores this year!

    This is over and above the library books purchased. The amount spent for 2005-06 books will be known only in the next budget or through a RTI request.

    In 2004-05, TN Govt. spent Rs. 8.53 crore for Tamil books and Rs. 2.44 crore for English books.

    2005-06 procurement has just happened. 2006-07 is yet to happen. We are already into 2007-08.

    ReplyDelete