Monday, September 17, 2007

சென்னையின் மரங்கள்

பேராசிரியர் கே.என்.ராவ் எழுதிய "Trees and Tree Tales: Some Common Trees of Chennai" என்ற ஆங்கிலப் புத்தகத்தை நியூ ஹொரைசன் மீடியாவின் ஆங்கிலப் பதிப்பான Oxygen Books வெளியிடுகிறது.

ராவ், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.

சென்னையில் காணக்கிடைக்கும் தாவரங்களைப் பல்வேறு வகையாகப் பிரித்து, அவற்றுடைய தாவரவியல் பெயர், பொதுவாக மக்கள் அழைக்கும் பெயர் ஆகியவற்றுடன், அந்தத் தாவரங்களைப் பற்றிய சில கதைகளையும் ஆசிரியர் விளக்குகிறார்.

புத்தகத்தில் 48 பக்கங்கள் முழுவதும் ஆர்ட் பேப்பரிலான தாவரங்களின் வண்ணப்படங்கள் உள்ளன. இவை அனைத்தும் பிரத்யேகமாக சென்னையைச் சுற்றிவந்து அங்குள்ள தாவரங்களைப் படமாக எடுத்தவை.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 20 செப்டெம்பர் 2007 அன்று ஆழ்வார்பேட்டை ஸ்ரீபார்வதி ஹாலில் (கிழக்கு பதிப்பகம் அலுவலகத்துக்கு எதிராக) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

3 comments:

  1. தமிழில் இப்புத்தகத்தை கிழக்குப்பதிப்பகம் வெளியிடுமா?

    ReplyDelete
  2. ஆங்கிலப் புத்தகத்தின் விலை ரூ. 200. புத்தகத்தில் 48 பக்கங்கள் கலர் படங்கள் உள்ளன (100 gsm ஆர்ட் பேப்பர்). தமிழில் பதிப்பித்தாலும் விலை கிட்டத்தட்ட ரூ. 200 வைக்கவேண்டும். எப்படியும் ரூ. 150க்குக் கீழ் குறைக்க முடியாது. அந்த விலைக்கு 160 பக்கப் புத்தகங்கள் தமிழில் விலைபோகுமா என்று தெரியாது.

    இப்பொழுதைக்கு முயற்சி செய்யப்போவதில்லை.

    ReplyDelete
  3. கட்டாயம் முயற்ச்சி செய்யுங்கள். வாங்கி படிக்க ஆவலாக இருக்கின்றோம்
    லோகமாதேவி-பொள்ளாச்சி

    ReplyDelete