Sunday, November 25, 2007

அரபி மொழிக்கு மொழிமாற்றம்

கார்டியன் வழியாக தி ஹிந்துவில் வந்த கட்டுரை. கார்டியனில் தேடிக் கண்டுபிடித்ததில் மேற்கொண்டு தகவல்கள் கிடைத்தன.

அபு தாபியைச் சேர்ந்த கலிமா என்னும் அமைப்பு பிற மொழிகளிலிருந்து நிறைய புத்தகங்களை அரபி மொழிக்கு மொழிமாற்றம் செய்ய உள்ளது. முதல் ஆண்டு (2007-ல்) 100 புத்தகங்கள். 2010-லிருந்து ஆண்டுக்கு 500 புத்தகங்கள். முதல் 100-ல் பாதி ஆங்கிலத்திலிருந்து அரபிக்கு. மீதம் உள்ள புத்தகங்கள் 16 மொழிகளிலிருந்து வரப்போகிறதாம்.

இந்தத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

*

ஓர் ஆண்டுக்கு ஸ்பெயின் மொழிக்கு எவ்வளவு புத்தகங்கள் மொழிமாற்றம் செய்யப்படுகின்றனவோ, அந்த எண்ணிக்கையை அரபி மொழி கடந்த 1000 ஆண்டுகளில்கூட எட்டவில்லையாம்.

இங்கு அரபி மொழியை எடுத்துவிட்டு தமிழ் என்று போட்டால் அதே நிலைதான் இருக்கும்.

இந்தியாவில் மலையாளத்தை எடுத்துவிட்டுப் பார்த்தால் பிற மொழிகளிலிருந்து இந்திய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பது என்பது அபூர்வமே. அதற்கான உள்கட்டுமானம் இல்லாத நிலை. அப்படி ஒன்றைச் செய்தால் அதற்குத் தேவையான சந்தை இருக்குமா என்ற பயம். சந்தை இருக்கும் என்று தோன்றினாலும் எப்படி சரியாகச் செய்வது என்று தெரியாத சூழ்நிலை. தரம் பற்றிய கவனம் இல்லாமை.

இதனை மாற்றவேண்டுமென்றால் நிறைய புத்தகங்கள் சுமாரான தரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று தமிழுக்குக் கொண்டுவரப்படவேண்டும். பின்னர் அவற்றைச் செப்பனிடும் பணியும் தொடர்ந்து நடைபெறவேண்டும்.

மொழிபெயர்ப்பு பற்றிய என் முந்தைய பதிவு

2 comments:

  1. Hi BADRI,
    Reading your thoughts, i am reminded of Bharathi's immortal words.
    Pira Naattu Nallarinjar Saathirangal, Tamilil Iyatra Vendum...
    These noble LONGINGS prevail for centuries.
    God Bless.
    Regards,
    srinivasan.

    ReplyDelete
  2. Badri,

    I thought Tamil had quite a bit novels translated from other languages. One example is V.S. Kandekar's marathi novels. I could be wrong.

    - Ravi

    ReplyDelete