Friday, December 28, 2007

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஆடியோ வடிவில்

ஆடியோ புத்தகங்கள்: சென்னை புத்தகக் கண்காட்சி அரங்கு எண் 114

தமிழில் உலகத்தரத்திலான எண்ணற்ற சிறுகதைகள் எழுதப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தொடங்கி இன்றுவரை பல எழுத்தாளர்கள், சிறுகதையின் பல சாத்தியங்களை முயன்று பார்த்துள்ளனர். தேர்ந்தெடுத்த பல எழுத்தாளர்களின் தேர்ந்தெடுத்த சில சிறுகதைகளை ஆடியோ வடிவில் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். குறைந்தது நூறு (100) சிறுகதை ஆசிரியர்கள்; ஆளுக்குப் பத்து சிறுகதைகளாவது, என்பது திட்டம்.

அதன் முதல்படியாக, பத்து சிறுகதை எழுத்தாளர்களது கதைகளை - தனித்தனியாக - ஆடியோ சிடி (எம்.பி.3 வடிவில்) கொடுத்துள்ளோம். முதல் பத்தில் வருபவர்கள்: புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்திரன், ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, சா.கந்தசாமி, தேவன், அ.முத்துலிங்கம், இரா.முருகன், சுப்ரமண்ய ராஜு.

சிறுகதைகள் வாசிப்பது குறைந்து வரும் இந்த சமயத்தில், இதற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று நம்புகிறேன்.



முந்தைய பதிவு: மதியின் அடடே கார்ட்டூன் தொகுதிகள்

4 comments:

  1. கடன் அட்டை கொண்டு வாங்கி, MP3 வடிவில் இறக்க முடிந்தால் நன்றாக இருக்கும். இவை காமதேனு.காமில் கிடைக்கின்றனவா என்ன?

    ReplyDelete
  2. Particularly (and hopefully) with the increasing amount of time spent driving...

    ReplyDelete
  3. பல வருடங்களுக்கு முன்பாகவே ராயர் கிளப்பிள் இதைப் பற்றி சொல்லியிருகிறேன். இப்பொழுது சாத்தியமாக்கியிருக்கிறீர்கள்.பைரசி கட்டுப்பாடு எதுவும் இல்லாத நம் நாட்டில் இது எவ்வளவு தூரம் காப்பி அடிக்கப் படாமல் விற்பனையாகும் என்பது தெரியவில்லை

    வாசிப்பின் பொழுது வட்டார நடைகளைக் கொணர உத்தேசித்திருக்கிறீர்களா? ஆதவன், இ பா போன்று பொதுவான வட்டார நடை இல்லாமல் எழுதப் பட்டுள்ள புத்தகங்களை ஒரு வித மத்தியமான ஆக்செண்ட்டில் படிப்பது எளிது. உதாரணமாக சு.ரா, நாஞ்சில் நாடன், வண்ண நிலவன், ராஜநாராயணன் கதைகளைப் படிக்கும் பொழுது அதில் உள்ள நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி வட்டார நடைகளைக் கொஞ்சம் கூடப் பிசகாமல் படிப்பது மிகவும் அவசியம். உதாரணமாக புளியமரத்தின் கதையை ஒருவர் வாசிக்கும் பொழுது தெளிவான தமிழ் பேச்சு நடைக்கும் மலையாளச் சாயல் அதிகம் வீசும் நாகர்கோவில் நடைக்கும் அடிக்கடி மாற வேண்டியது அவசியம். அது போன்ற வட்டார மொழி நடைகளில் பயிற்சியுள்ளோர்களைத்தான் புத்தகம் படிக்க தேர்ந்தெடுத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது போன்ற வட்டார மொழி நடைகள் அதிகம் உள்ள புத்தகங்களைப் படிப்பவரை (வாசிப்பவரை)த் தேர்வு செய்யும் பொழுது பொதுவாக அனைத்துப் புத்தகங்களுக்கும் தமிழ் சினிமா பின்ணனிக் குரல் கொடுப்பவர்களைப் போல ஒரே ஆணையும் பெண்ணையும் தேர்வு செய்யாமல் அந்தப் பகுதியைச் சார்ந்த நல்ல சுத்தமான உச்சரிப்பு உடையோரை ஆடிஷன் செய்து தேர்வு செய்வது அவசியம். உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை, இருந்தாலும் என் 2 செண்ட்டுகள்.

    பொன்னியின் செல்வன், மோக முள், சாம்பு போன்ற பெரும் புஸ்தகங்களைக் நல்ல உச்சரிப்புச் சுத்தம் உள்ள, நன்றாகக் கதை படிக்கத் தெரிந்தோர் படிக்கக் கேட்க்க ஆசை. அதற்கு முன் சில சாம்ப்பிள்களைக் கேட்டுப் பார்க்க விரும்புகிறேன்.

    அன்புடன்
    ச.திருமலை

    ReplyDelete