Saturday, July 26, 2008

சல்மாவின் நாவல் Man Asian Literary Prize 2008-ல்

ஆண்டுதோறும் ஆங்கிலத்தில் எழுதும் நாவல்கள் புக்கர் பரிசு என்னும் விருதுக்குத் தகுதியாகும். சென்ற ஆண்டுமுதல் ஆசிய எழுத்தாளர்களுக்கு என்று தனியான ஒரு பரிசு புக்கர் பரிசை ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. 2007-ல் ஒரு சீனர் அதை வென்றார்.

இந்தப் பரிசுக்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவலோ அல்லது ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்படும் நாவலோ விண்ணப்பிக்கலாம். ஆனால் விண்ணப்பிக்கப்படும்போது இந்தப் புத்தகம் அச்சுக்கு வந்திருக்ககூடாது. அதாவது அச்சாவதற்கு முன்னரே - மேனுஸ்க்ரிப்டாக இருக்கும்போதே - விண்ணப்பிக்கவேண்டும். (இது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் எங்களது சில நாவல்களைப் பதிந்துவைத்திருக்கலாம்.)

இந்த ஆண்டுக்கான நீண்ட பட்டியலில் சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை”யின் ஆங்கில வடிவம் “Midnight Tales” இடம்பெற்றுள்ளது. இந்தியாவிலிருந்து 11 நாவல்கள் இடம்பெறுகின்றன.

  1. Tulsi Badrinath ("Melting Love")
  2. Anjum Hasan ("Neti, Neti")
  3. Daisy Hasan ("The To-Let House")
  4. Siddharth Dhanvant Shanghvi ("Lost Flamingoes of Bombay")
  5. Amit Varma ("My Friend, Sancho")
  6. Sarayu Srivatsa ("The Last Pretence")
  7. Kavery Nambisan ("The Story that Must Not be Told")
  8. Sumana Roy ("Love in the Chicken's Neck")
  9. Vaibhav Saini ("On the Edge of Pandemonium")
  10. Rupa Krishnan ("Something Wicked This Way Comes")
  11. Salma ("Midnight Tales")

3 comments:

  1. Midnight Tales - The title is not opt.It is too bland and sounds like a title of xxx film.A poetic title would be better.Irandam Jamangalin Kathai in tamil is different from midnight tales in meaning.

    ReplyDelete
  2. oops it should be apt not opt.

    ReplyDelete
  3. அன்புள்ள பத்ரி, உங்கள் பதிவுகள் மிகவும் பயனுள்ளவையாகவும், ஒருவித இன்பம் தருவதாகவும் உள்ளன. என்னால் நினைத்ததைச் சரியாக்ச் சொல்ல முடியவில்லை. குறிப்பாக வெஜிடேரியனிசம் மற்றும் கல்விச் செலவுகள் பற்றிய பதிவுகள்.

    தொடர்ந்து எழுதுங்கள்
    அன்புடன்
    நாகூர் ரூமி

    ReplyDelete