Friday, August 01, 2008

உயிர் கொடுக்கும் திரவம், உயிர் காக்கும் குழாய்


உலகில் இன்று பெரும்பான்மை மக்களை பாதிக்கும் ஒரு விஷயம் நல்ல குடிநீர் கிடைக்காதது. பல இடங்களில் தண்ணீரே கிடைப்பதில்லை. வேறுபல இடங்களில் தண்ணீர் கிடைக்கிறது; ஆனால் கலங்கிப்போய், மாசுபடுத்தப்பட்டு, நோய்க்கிருமிகள் பொங்கிப் பெருகும் தண்ணீராக உள்ளது.

“கிடைக்கும் தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள்” என்று சுகாதார அமைப்பினர் அவ்வப்போது சொல்லி வருகிறார்கள். ஆனால் நீரைக் காய்ச்சுவதற்கு செலவாகிறது. ஒரு லிட்டர் தண்ணீரை 25 டிகிரியிலிருந்து 100 டிகிரிக்குக் கொண்டுசென்று கொதிக்கவைத்து, பிறகு மீண்டும் ஆறவைத்தால்தான் அதிலுள்ள கிருமிகள் அழியும். நீரில் உள்ள பிற மாசுக்களை - கரைந்த உப்புகளை, தூசுகளை என்ன செய்வது? கொதிக்கவைத்தால் போதாது. வடிகட்டவேண்டும். எதைவைத்து? சுத்தமான துணியாக இருக்கவேண்டும். ஆக செலவு, நேரம், கவனம் தேவை.

அரசாங்கம் இதில் வேண்டிய பணத்தைச் செலவழித்து, ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான நீர் வழங்கினால் நல்லது. ஆனால் செய்வதில்லை. எனவே நகரங்களில் மக்கள் தங்களுக்கான தனித் தீர்வைத் தேடிக்கொள்கிறார்கள். அது அக்வாஃபினா, கின்லே, பிஸ்லெரி என்று தொடங்கி ஊர் பேர் தெரியாத பிராண்ட் பாட்டில் தண்ணீரை நாடுவதாக இருக்கலாம். அல்லது அக்வா கார்ட், ஜீரோ பி, ப்யூர் இட் போன்ற மின்சாரத்தால் இயங்கும் வடிகட்டும் கருவிகளைப் பொருத்துவதாக இருக்கலாம். இங்கு கருவிக்கான செலவு, மின்சாரத்துக்கான செலவு உண்டு. டேங்கிலிருந்து கொட்டும் நீர் வேண்டும். இவை அனைத்துமே நகரங்களை நோக்கிய தீர்வுகள்.

கிராமங்களில், ஏழை மக்களுக்கு சாத்தியமான தீர்வு ஏதேனும் இருக்கிறதா? அதை எப்படி மக்களுக்குக் கொண்டுசெல்லலாம் என்று யோசித்து, ட்விட்டரில் “மின்சாரம் தேவைப்படாத நீர் சுத்திகரிப்புக் கருவி உள்ளதா?” என்று கேட்டேன். பலரிடமிருந்து பதில் வந்தது. மிகச் சிறந்த பதில், @srikan2 என்பவரிடமிருந்து வந்தது.
@bseshadri Not sure of availability in India: http://tinyurl.com/5ahzew
இந்தத் தளத்தை (http://www.vestergaard-frandsen.com/lifestraw.htm) நாகராஜன் பின்தொடர்ந்து, அவர்களுக்கு டில்லியில் ஓர் அலுவலகம் உள்ளது என்று கண்டுபிடித்தார். அங்குள்ள அலுவலர் ஒருவரிடம் பேசியதில், இந்தக் கருவி ரூ. 250-க்குக் கிடைக்கும் என்றும் குறைந்தது 500 ஆர்டர் செய்யவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

நாகராஜனின் டில்லி நண்பர் ஒருவர் இந்த நிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்று ஒரு மாதிரி ஒன்றைப் பெற்று சென்னைக்குக் கொண்டுவந்தார். இன்றுதான் கையில் கிடைத்தது.

***

இந்தக் கருவி பற்றிய தகவல்கள், அவர்களது இணையத்தளத்தில் கிடைக்கின்றன. மொத்தமாக வாங்கினால் $3 (ரூ. 130) என்ற விலைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

தமிழகத்தில் குடிநீர் பிரச்னை இருக்கும் பகுதிகளில் உள்ள சிறுவர்கள் எண்ணிக்கை 1-1.5 கோடியைத் தாண்டாது. ஆண்டாண்டுக்கு டயோரியா, காலரா என்று நீரால் பரவும் நோய்கள் எக்கச்சக்கம். இவர்கள் அனைவருக்கும் தமிழக அரசு நினைத்தால் ஒரு கருவியை வாங்கிக் கொடுத்துவிடலாம். இதற்கு ஆகும் மொத்தச்செலவு (1.5 கோடி * 130 = ரூ. 200 கோடிதான்). அதாவது இலவச கலர் டிவி வாங்கிக்கொடுப்பதற்காக ஒதுக்கிய தொகையில் ஏழில் ஒரு பங்குதான்! (மொத்தம் அரசு கலர் டிவிக்காக ஒதுக்கியுள்ள தொகை ரூ. 1444 கோடிகளாம்.)

சரி, அரசுக்கு இதில் நாட்டமில்லை என்று வைத்துக்கொள்வோம்.

இந்தக் கருவியை ஒருவர் உபயோகித்தால் மூன்று ஆண்டுகள் தாங்கும். ஒரு வீட்டில் இரண்டு அல்லது மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், இதற்குச் செலவழிக்கும் தொகைக்கு மேலாக மருத்துவச் செலவில் சேமித்துவிடுவார்கள். அப்படி ஒரேயடியாகக் கட்ட பணம் இல்லை என்றால், குறுங்கடன்மூலம் கடன் பெற்று, கட்டிவிடலாம்.

இது தொடர்பாக நான் ஈடுபட்டிருக்கும் ஒரு குறுங்கடன் நிறுவனத்துடன் பேசி ஏற்பாடு செய்யப்போகிறேன்.

23 comments:

  1. Badri,

    Great to hear you could obtain one in India. If you put together a pilot plan to obtain this for a village/school or something like that, I can chip in some funding from an NGO that I'm associated with.

    Thanks for taking the effort,

    Srikanth
    (srikan2 in twitter)

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் சார்!

    சுட்டி கொடுத்த பகுதியிலிருந்து, இந்த உபகரணம் பற்றி மேலும் தகவல்கள் தெரிந்துக்கொள்ளவும் வாய்ப்பளித்தமைக்கு நன்றிகளுடன்..!

    ReplyDelete
  3. Badri,

    Let me know the discussions with your microfinance team. If needed, i can talk to Muthoot Group for the same. But tell me honestly, for about Rs.250, you still think its a viable biz option for a Microfinance firm to fund & collect it ?

    ReplyDelete
  4. very good idea.Govt. can buy in bulk and distribute two or three per family at affordable rates.
    Subsidy for such products will
    help in saving money spent otherwise in treating water borne diseases. In fact it may work out to be economically viable to use this when compared to costs of
    treatment and loss in income on
    account of ill-health besides
    lives saved. i think there are some
    more products like this.if you search in dst india or csir site
    you may find out. i remember that one indian scientist based in usa
    developed a technology that has been widely used in rural areas.
    more later.

    ReplyDelete
  5. I think Ion Exchange India has a similar product that can be used to get clean water from taps.I dont know whether it is available in india now.

    ReplyDelete
  6. see this
    http://web.mit.edu/invent/www/ima/gadgil_intro.html
    That book is an interesting book.

    ReplyDelete
  7. http://web.mit.edu/invent/www/ima/gadgil_bio.html

    when i read your post this invention came to my mind.
    i forgot the exact name of the
    inventor although i remembered
    that it was a maharastrian name
    and had read it in this book.

    ReplyDelete
  8. http://web.mit.edu/invent/www/ima/gadgil_bio.html

    when i read your post this invention came to my mind.
    i forgot the exact name of the
    inventor although i remembered
    that it was a maharastrian name
    and had read it in this book.

    ReplyDelete
  9. see this
    http://ionindia.com/residentiallink.html#zersri
    Looks like i have a good memory for things i dont use now :)
    When I was working in India
    we used the word zero-b to mean
    that the person had zero-brain :).

    ReplyDelete
  10. //இது தொடர்பாக நான் ஈடுபட்டிருக்கும் ஒரு குறுங்கடன் நிறுவனத்துடன் பேசி ஏற்பாடு செய்யப்போகிறேன்.//

    நல்ல ஏற்பாடு.

    வாழ்த்துக்கள்.

    அதற்கு முன்னர் இது ஒரு மூலிகை பெட்ரோல் அல்ல என்பதை சோதித்து விடுவது நல்லது

    (புருனோவின் மனசாட்சி - டேய் நீ திருந்தவே மாட்டியா. எல்லாவற்றின் மேலும் சந்தேகமா)

    ReplyDelete
  11. பத்ரி

    இது நல்ல போஸ்ட். ஒவ்வொரு ப்லோக்கேரும் ஒரு கிராமம் தத்து எடுத்து உதவலாம். நான் ரெடி.

    நீங்கள் சார்ந்துள்ள குறுகடன் நிறுவனம் எது? நீங்கள் பார்டினரா?

    நன்றி
    ரமேஷ்

    ReplyDelete
  12. அருமையான பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. Badri, it is a good idea.

    Only NGOs should take up this because government will not do anything that does not bring votes or cash for the ruling party men.

    Thanks
    S. Sankarapandi

    ReplyDelete
  14. இலவசமாக தருகிரீர்களா? நல்ல கூத்து. "ஏதோ கிராமத்து மக்கள் எல்லாம் ஒன்றும் தெரியாதவர்கள், படித்தவர்கள் நாங்கள் வந்து புரட்சி செய்து நல்ல எண்ணம் காட்டி, உங்கள் ப்ட்டிக்காட்டு இருளிலிருந்து காப்பாத்துகிறோம்", என்ற நகர வாசி கர்வம் தான் எனக்கு தெரிகிறது.

    ஏழைக்கு நன்மை செய்கிறேன், இல்வச மின்சாரம் தருகிறேன் என்று, நாடெல்லாம் போர்வெல் போட்டு, நீர் நிலையை நாடெங்கும் நாசம் செய்தாச்சு. ஆயிரக்கணக்கில் ஏரிகளை அழித்து, வாய்க்கால், குளம், கண்மாய், நதி பராமரிப்புகளை "அரசு உதவி, தேசியமயமாக்கல், மக்கள் ஆட்சி" என்று கட்டு கதை விட்டு, கட்சி காண்ட்ராக்ட்ர்களையும் பொதுப்பணி துரை கேவலங்களையும் வைத்து கிராமத்து செல்வங்ளை சூரையாடி, கர்நாடகாவிடம் காவேரி கேட்டு பிச்சை, ஆந்திராவிடம் பாலாறு, கிருஷ்ணா பிச்சை, கேரளாவிடம் சின்ன சின்ன ஓடைக்கு பிச்சை என்று, பொது உடைமை என்று ஊளையிட்டு, பொதுவான தண்ணீரை (மணல் வேறு விசயம்) தனியார் மயம் செய்தாச்சு.

    வேலை வாய்ப்பு திட்டம், முன்னேற்றம், என்று கூறி, சக்கரை ஆலைகள் வைத்து, மாட்டு தோல் பண்ணை வைத்து (பன்னித்தோல் வைத்தால் சிறுபான்மையினர் மனம் புண்பட்டு, இந்து நாய்களே என்று மதச்சார்பின்மையாக திட்டவேண்டும்), பல ஏரிகுளநதிகளை நாசமாக்கியாச்சு.

    பாவம் நாட்டு ஏழைகள். மாதம் செல் போனுக்கு 300, சாரயத்துக்கு 500, கேபிளுக்கு 100, தனியார் பஸ் இல்லை, நல்ல சாலை இல்லை என்பதால் ஆட்டேவுக்கு 200-300, சினிமாவுக்கு 30-40 என்று கட்டுபவர்களுக்கு தண்ணீருக்கு 250 (3 ஆண்டுக்கா?) கட்டுப்படி ஆகுமா?

    கம்யுனிசம் ரசியாவில் கவுந்தாச்சு. சினாவில் பொருளாதார கொள்கையாக கவுந்தாச்சு. க்யுபாவில் காஸ்ட்ரோ சர்வாதிகாரிகள் செத்தால் கவிழலாம். ஆனால், இந்தியாவில் மட்டும், பத்திரிகை உலகிலும், வளையதளத்திலும் சாகாமல் வாழும் - கேபடிலசம் மூலம் பணம் சம்பாதித்த உத்த்மர்கள் தயவில்.

    ReplyDelete
  15. Badri,

    Great Idea! I was an Examiner of Patents at the Indian Patent Office, I remember granting patent to a simple filtering straw. Kimberly-Clarke was the assignee. It seemed very simple and looked like a use and throw device

    http://patft.uspto.gov/netacgi/nph-Parser?Sect1=PTO2&Sect2=HITOFF&u=%2Fnetahtml%2FPTO%2Fsearch-adv.htm&r=1&p=1&f=G&l=50&d=PTXT&S1=((kimberly.ASNM.+AND+straw.ABTX.)+AND+filter.ABTX.)&OS=an/kimberly+AND+abst/straw+AND+abst/filter&RS=((AN/kimberly+AND+ABST/straw)+AND+ABST/filter)

    ReplyDelete
  16. இந்த சாதனத்தை நீங்கள் அறிமுகப் படுத்தியதற்கு மிக்க நன்றி. இதைப் பற்றிய செய்திகளும் நம்பிக்கை தருகின்றன.

    இதன் ஆயுள் ஒரு வருடம்தான் என்றும் அறிகிறேன்.

    ReplyDelete
  17. Hi Badri,

    Good Effort.Will help in sourcing some contribution for this to happen.

    Rajan

    ReplyDelete
  18. பத்ரி,

    தகவலுக்கு மிக்க நன்றி. TNF (தமிழ்நாடு அறக்கட்டளை) மூலமாக இதை ஓரிரு கிராமங்களில் செய்யலாமா என்று யோசிக்கிறோம்.

    May need your help in contacting the company in Delhi. Hopefully we can do this. Thanks again.

    -MK

    ReplyDelete
  19. இது தொடர்பாக சில இடுகைகளை எழுதியிருக்கிறேன்

    1. நீரினால் ஏற்படும் நோய்கள் யாவை

    ReplyDelete
  20. Pure-it water purifier Unique Advantage is No Electricity is Required. Its Not an online water Purifier.Its an IN-Home Water Purifier.

    ReplyDelete
  21. http://bit.ly/x5qyn

    இதுவும் இது தொடர்புடையதே!

    ReplyDelete