Thursday, September 04, 2008

NHM Writer மாற்றங்கள்

NHM Writer என்னும் மென்பொருளை எங்களது நிறுவனம் வெளியிட்டிருந்தது. தமிழைப் பொருத்தமட்டில், பல உள்ளீட்டு முறைகள், பல எழுத்துக் குறியீடுகள் ஆகியவற்றுக்கான ஆதரவு இந்த மென்பொருளில் இருந்தது.

1. இந்த மென்பொருளை சற்றே விரிவாக்கி, அனைத்து இந்திய மொழிகளிலும் எழுதும் வகையில் செய்துள்ளோம். மலையாளம், கன்னடம், தெலுங்கு, அசாமி, வங்காளம், மராட்டி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி (சமஸ்கிருதமும்) ஆகிய மொழிகளில் இப்போது எழுதலாம். இப்போதைக்கு phonetic மற்றும் தட்டச்சுக்கு வாகான inscript ஆகிய உள்ளீட்டு முறைகளைப் பயன்படுத்தமுடியும்.

2. டிரெண்ட் மைக்ரோ என்ற வைரஸ்கொல்லி மென்பொருள் இருந்தால் NHM Writer இயங்கமுடியாத நிலை இருந்தது. அதை இப்போது சரிசெய்துள்ளோம்.

3. கடந்த இரண்டு நாள்களாக இணையத்தை உலுக்கி எடுத்துள்ள கூகிளின் Chrome என்ற உலாவியில் phonetic முறையில் தமிழில் எழுதுவது (அதேபோல பிற இந்திய மொழிகளில் எழுதுவது) முடியாததாக இருந்தது. இதே பிரச்னை ஆப்பிள் நிறுவனத்தின் Safari என்ற உலாவியிலும் இருந்தது. ஆனால் தமிழர்கள் விண்டோஸ் இயக்குதளத்தில் அந்த உலாவியை அவ்வளவாகப் பயன்படுத்துவதில்லை போலும். இன்று வெளியிடப்படும் build-ல் NHM Writer கொண்டு Safari, Chrome ஆகிய உலாவிகளிலும் எழுதமுடியும்.

4. மேலும் சில சிறு முன்னேற்றங்கள்: Alt விசைக்கு பதிலாக சிலர் F2, F3 ஆகிய விசைகளைப் பயன்படுத்தி தமிழில் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். அது செய்யப்பட்டுள்ளது. ஒருவித ஸ்பெஷல் “Undo” பயன்பாடு தரப்பட்டுள்ளது. சில பிழைகள் களையப்பட்டுள்ளன.

இந்த மென்பொருளை இங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

15 comments:

  1. என்னுடைய விசைப்பலகையில் உள்ளது ஜெர்மன் லே-அவுட். ஆனால் நான் முன்பு NHM உபயோகித்த போது, அதை US லே-அவுட்டுக்கு மாற்றி விடுகிறது. அதே போல UK லே-அவுடையும் USஆக மாற்றி விடுகிறது.

    புதிய வெளியீட்டில் இந்த குறை சரி செய்யப்பட்டு விட்டதா?

    ReplyDelete
  2. Thanks Badri..will try and let you know the result

    ReplyDelete
  3. மணிவண்ணன்: நீங்கள் கேட்டதும் சரி செய்யப்பட்டுவிட்டது. உங்களது டீஃபால்ட் என்னவோ அதற்கே இனி NHM Writer மாறிவிடும்.

    உபயோகித்துப் பாருங்கள்.

    ReplyDelete
  4. கூகிள் குரோமிலும், ஆப்பிள் சவாரியிலும் NHM எழுதி இனிதே இயங்குகிறது.

    இரண்டே நாட்களில், அதுவும் 48 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிரச்சனையை ஆராய்ந்து தீர்த்த நாகராஜனுக்கு ஒரு சிறப்பு பாராட்டு.

    ReplyDelete
  5. //உங்களது டீஃபால்ட் என்னவோ அதற்கே இனி NHM Writer மாறிவிடும்.//
    நானும் அப்படித்தான் எண்ணினேன். அன்று உங்களிடம் இதை தொலைபெசி மூலமாகவும் தெரிவித்தேன். ஆனால் இப்போதெல்லாம் பழைய மாதிரித்தான் இருக்கிறது. ஒரு வேளை இருப்பதை நீக்கி புதிய வெர்ஷனை தரவிறக்கி, அதை நிறுவ வேண்டியிருக்கும் போல உள்ளது.
    எது எப்படியாயினும் என்னைப் பொருத்தவரை கஷ்டம் ஏதும் இல்லை. இப்பொதெல்லாம் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மனுக்கு மொழிபெயர்க்கும்போது மட்டும்தான் ஜெர்மன் தட்டச்சு பலகையை பாவிக்கிறேன். ஆகவே அப்போது மட்டும் என்.எச்.எம்மை எக்ஸிட் செய்து விட்டு ஜெர்மன் செட்டிங்கிற்கு போகிறேன். வேடிக்கை என்னவென்றால் அப்போது மட்டும் என் விரல்களும் தன்னிச்சையாக ஜெர்மன் பலகைக்குத்தான் செல்கின்றன. மற்றப்படி ஆங்கிலமோ, தமிழோ பிரெஞ்சோ அடிக்க ஆங்கில தட்டச்சு பலகைதான் பாந்தமாக வருகிறது. ஆக இந்த பிரச்சினை வந்ததில் எனக்கு நன்மையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  6. பத்ரி ஸார்..

    என் போன்ற 'வித்தியாசங்களுக்கு' இதன் மூலம் பேருதவி செய்திருக்கிறீர்கள்..

    நன்றிகள் தங்களுக்கும் தோழர் நாகராஜனுக்கும்..

    ReplyDelete
  7. வெகு சீக்கிரத்திலேயே சரி செய்து தந்தமைக்கு நன்றிகளுடன்...!

    ReplyDelete
  8. Chrome browser-க்கும் சேர்த்து இவ்வளவு சீக்கிரம் fix செய்து நிஜம்மாகவே அசத்திட்டீங்க! நாகராஜனுக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்.

    ஒரு சந்தேகம். Chrome-இல் URL textfield இல் தமிழில் அடிக்கும் பொழுது வேலை செய்யும் தமிழ் typing, website உள்ளே இருக்கும் HTML form-களில் வேலை செய்வதில்லையே, ஏன்?

    அதாவது, www.google.com உள்ளே சென்று search fieldஇல் ‘அம்மா’ என்று அடிக்க முடிவதில்லை. இது Firefox2.0 விலும், Iphone (safari) இலும் (webkit-இலும்?) இருக்கும் Indic-language rendering ப்ரச்னையா, இல்லை NHM ப்ரச்னையா என்று தெரியவில்லை. Chrome-இல் தமிழ் பக்கங்கள் அழகாகவே render ஆகிறது. ஆனால், type செய்வதில் தான் ப்ரச்னை. I suspect either its an NHM bug, or an HTML issue.

    உங்களுக்கும்/மற்றவருக்கும் உதவும் என்பதால் இதை இங்கு பதிவு செய்கிறேன்.

    (நான் சொல்வது Windows-Vistaவில் Chrome + NHM 1.5.0.7 beta)

    நன்றி,
    விகடகவி

    ReplyDelete
  9. விகடகவி: இப்போது செய்திருக்கும் fix-ல் URL அடிக்கும் இடம், பிற இடங்கள் என எல்லா இடத்திலும் Chrome-ல் சரியாக வேலை செய்யவேண்டும்.

    அப்படி நடக்கவில்லை என்றால் வேறு ஏதோ பிழை உள்ளது. NHm Writer install செய்வதில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னை இருந்திருக்கலாம். என்ன என்று விசாரித்துச் சொல்கிறேன்.

    ReplyDelete
  10. விகடகவி: ஒரு சிறு பிழை இருந்தது. அதனால் விஸ்டா இயங்குதளம் கொண்ட சில மெஷின்களில் மட்டும் Google Chrome'ல் NHM Writer 1.5.0.7 சரியாக வேலை செய்யாமல் இருந்திருக்கிறது. அதனை இப்போது கண்டுபிடித்து வெர்ஷன் 1.5.0.9'ல் சரி செய்து விட்டோம்.

    NHM Writer 1.5.0.9'ஐ எங்கள் தளத்தில் இருந்து நீங்கள் தரவிறக்கிக்கொள்ளலாம்.

    தடங்கலுக்கு வருந்துகிறோம்.

    - K.S.Nagarajan
    New Horizon Media.

    ReplyDelete
  11. தமிழில் எழுத முடியாததால், குரோமை கைவிடலாமென்றிருந்தேன். NHM Writer கைகொடுத்தது.
    கோடி புண்ணியம் உங்களுக்கு.

    எனக்கு Mac OS X Apple Safariயில் தமிழ் அடிக்க வருகிறதே. ஒருவேளை விண்டோஸில் வேலை செய்யவில்லையா?

    ReplyDelete
  12. // விகடகவி: ஒரு சிறு பிழை இருந்தது.
    // - Nagarajan

    இது Chrome-இல் இருந்து செய்யும் பதிவு. 1.5.0.9 வேலை செய்கிறது.

    இனிது, இனிது.

    நன்றி!
    விகடகவி

    ReplyDelete
  13. நாகு: ஆமாம். Safari for Windows'லும் தமிழில் உள்ளிடுவது பிரச்சனையாக இருந்தது.NHM Writer'ல் இப்பிரச்சனை சரி செய்யப்பட்டுவிட்டது.

    - K.S.Nagarajan
    New Horizon Media.

    ReplyDelete
  14. hi... my name is aathi... i was trying to install the "NHM WRITER" but i don't know how to install it on ma "Apple - mac os x" can u plz help me with this...... thanks in advance

    ReplyDelete
  15. ஆதி: NHM Writer, விண்டோஸில் மட்டும்தான் இயங்கும். இப்போதைக்கு ஆப்பிள் மேக் அல்லது லினக்ஸ் இயக்குதளங்களில் இயங்காது.

    ReplyDelete