Saturday, November 15, 2008

NHM புத்தகங்கள் இலவசமாக!

ஆம், எங்களது புத்தகங்கள் முற்றிலும் இலவசமாக உங்களுக்கு வேண்டுமா?

கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டால் போதும்!
  1. உங்களிடம் ஒரு வலைப்பதிவோ, வலைத்தளமோ (தமிழோ, ஆங்கிலமோ) இருக்கவேண்டும்.
  2. கீழே உள்ள புத்தகங்களில் எது உங்களுக்கு வேண்டும் என்று குறிப்பிடுங்கள்.
  3. ஒவ்வொரு புத்தகத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள பிரதிகளையே வழங்க உள்ளோம். அதனால் முதலில் தொடர்புகொள்கிறவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  4. உங்களது அஞ்சல் முகவரியையும் செல்பேசி எண்ணையும் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். அல்லது நீங்களே எங்களது அலுவலகத்துக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம்.
  5. பெற்றுக்கொண்ட புத்தகத்தைப் படித்துவிட்டு, உங்களது வலைப்பதிவில் அதைப்பற்றி 800 வார்த்தைகளுக்குக் குறையாமல் (தமிழிலோ, ஆங்கிலத்திலோ) விமரிசனம் எழுதவேண்டும்.
  6. விமரிசனம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புத்தகம் நன்றாக இல்லை, பிடிக்கவில்லை என்றால் அதை உள்ளது உள்ளபடியே குறிப்பிடலாம். ஆனால் கட்டாயமாக விமரிசனம் எழுதியாகவேண்டும். 800 வார்த்தைகளுக்குக் குறையாமல்.
  7. புத்தக விமரிசனப் பதிவின்கீழ், அந்தக் குறிப்பிட்ட புத்தகத்தின் இணைய வணிகத் தள முகவரி (URL) இருக்கவேண்டும். அந்த முகவரியை உங்களுக்கு நாங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவிடுவோம்.
  8. விமரிசனம் எழுதிமுடித்தவுடன் அந்தப் பதிவின் முகவரியை எங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். அதனை நாங்கள் எங்களது தளத்தில் சேர்த்துக்கொள்வோம்.
  9. ஒருவர் ஒரு நேரத்தில் ஒரு புத்தகத்தை மட்டுமே பெறமுடியும். ஒன்றுக்கு மேற்பட்ட புத்தகங்களை ஒரே நேரத்தில் பெறமுடியாது. ஆனால், புத்தகங்களைக் கேட்கும்போது, 2 அல்லது 3 விருப்பங்களை வரிசைப்படுத்திக் கேட்கவும். உங்களது முதல் விருப்பம் முற்றுப்பெற்றுவிட்டால், அடுத்த விருப்பத்தைக் கொடுக்க முயற்சி செய்வோம்.
  10. ஒரு புத்தகத்தைப் படித்து, விமரிசனம் எழுதிய பின்னரே, நீங்கள் அடுத்த புத்தகத்தைக் கேட்டுப் பெறலாம்.
  11. இந்தத் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் கொண்டுவருவதற்கு நிறுவனத்துக்கு எல்லாவித உரிமையும் உள்ளது. சில காரணங்களுக்காக ஒரு சிலருக்குப் புத்தகங்களை வழங்காமல் இருக்கவும், காரணத்தைப் பொதுவில் சொல்லாமல் இருப்பதற்கும் நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.
  12. இத்திட்டம் தொடர்பாக மின்னஞ்சலில் மட்டுமே தொடர்புகொள்ள வேண்டும்.
  13. புத்தகம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு மாதத்துக்குள் விமர்சனம் எழுதவேண்டும்.
என்ன, ரெடியா?

புத்தகப் பட்டியல்:
  1. நான் வித்யா - லிவிங் ஸ்மைல் வித்யா
  2. ஆல் இன் ஆல் ஜெனரல் இன்சூரன்ஸ் - ஏ.ஆர்.குமார்
  3. கடல்புரத்தில் - வண்ணநிலவன்
  4. உயிர்ப் புத்தகம் - ஸி.வி.பாலகிருஷ்ணன்
  5. ஒண்டிக்கட்டை உலகம் - சிபி கே. சாலமன்
  6. களை எடு - கே.நம்மாழ்வார்
  7. அடடே பாகம் 1 - மதி
  8. என் பெயர் எஸ்கோபர் - பா.ராகவன்
  9. டௌன் சிண்ட்ரோம் - டாக்டர் ரேகா ராமச்சந்திரன்
  10. ஊனமுற்றோருக்கான கையேடு - டாக்டர் எஸ். முத்து செல்லக்குமார்
  11. ஹெச்.ஐ.வி. கொல்லப் பிறந்த கொடுங்கோலன் - நாகூர் ரூமி
  12. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவும் உணவு முறைகளும் - டாக்டர் எஸ். முத்து செல்லக்குமார்
  13. அற்புதக் கோவில்கள் - கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்
  14. இது உங்கள் குழந்தைகளுக்கான மகாபாரதம் - ஜெயா சந்திரசேகரன்
  15. ரகுவம்சம் - ஆ.வே.சுப்ரமணியன்
  16. ஜெயகாந்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஒலிப்புத்தகம் (MP3 ஆடியோ சிடி)
  17. புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - ஒலிப்புத்தகம் (MP3 ஆடியோ சிடி)
  18. Heroes or Villains : Sri Lanka circa 2007 - N.Sathiya Moorthy
  19. Star Crossed - Ashokamithran (கரைந்த நிழல்கள் நாவலின் ஆங்கில மொழியாக்கம்)
  20. மகா வம்சம் - தமிழில் ஆர்.பி.சாரதி

புத்தக விருப்பத்தை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: haranprasanna@nhm.in

28 comments:

  1. பத்ரி ஸார்..

    அருமையானத் திட்டம்தான்..

    எங்களையும் கட்டாயப்படுத்தி எழுத வைத்து எழுத்தை ஊக்குவிப்பது போலிருக்கும்..

    தங்களுக்கும் பல்வேறு ரசனையுள்ள உண்மையான விமர்சனங்கள் கிடைத்தது போலிருக்கும்..

    நன்று..

    எனக்கு 20 புத்தகங்களுமே தேவைதான்.. 5 நாட்களில் ஒன்றை முடித்துவிடலாம்.. கஷ்டமில்லை..

    ஆனால் 800 வரிகள் என்பதே மிகவும் குறைவு.. குறைந்தபட்சம் 8 பக்கங்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்..))))))))))))))))

    எனக்குத் தேவையான புத்தகங்களை மின்னஞ்சலில் அனுப்பி வைக்கிறேன்..

    வாழ்க வளமுடன்

    உண்மைத்தமிழன்

    ReplyDelete
  2. உண்மைத் தமிழன்: வேண்டுமென்றால் எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்:-) “நல்ல புத்தகம்”, “கெட்ட புத்தகம்” என்று இரண்டு வார்த்தைகளில் முடிக்காமல் இருக்கவே, இந்த ஐடியா!

    ReplyDelete
  3. மிக நல்ல முயற்சி பத்ரி. இது மூலமாக ஒரே புத்தகம் குறித்த பல பார்வைகளும் , அது தவிர புதிய புத்தகங்கள் குறித்த அறிவும் நம் வலைப்பதிவு வாசகர்களுக்கு கிடைக்கக்கூடும்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. உண்மைத் தமிழரே,
    பத்ரி 800 வார்த்தைகளில் (மினிமம்) விமர்சனம் வேண்டும் என்கிறார். நீங்கள் 800 வரிகள் என்கிறீர்கள் (உங்கள் லெவலுக்கு அது ஜுஜுபி என்பது வேறு விசயம்) :)

    //எங்களையும் கட்டாயப்படுத்தி எழுத வைத்து எழுத்தை ஊக்குவிப்பது போலிருக்கும்..
    //
    உங்களை எழுத வைக்க ஊக்கம் தேவையா ? இதென்ன கலாட்டா ? ;-)

    எ.அ.பாலா

    ReplyDelete
  5. பத்ரி சார்!!

    "இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். "

    அப்ப நாங்க ???

    ReplyDelete
  6. லிஸ்ட் அனுப்பியாச்சு. வெயிட்டிங் :-)

    ReplyDelete
  7. //உங்களை எழுத வைக்க ஊக்கம் தேவையா ? இதென்ன கலாட்டா ? ;-)
    //

    ஹா ஹா ஹா :) :) :)

    ReplyDelete
  8. பட்டியலிலே ச.ந.கண்ணன் புஸ்தகம் எதுவும் காணலியே? (:

    ReplyDelete
  9. புதுமையான முயற்சி பத்ரி சார்.

    சரியான, மற்றும் நேர்மையான விமர்சனக்களைப் பெற வழிவகுக்கும்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. //உங்களை எழுத வைக்க ஊக்கம் தேவையா ? இதென்ன கலாட்டா ? ;-)
    //
    ஹா ஹா ஹா :) :) :) ரிப்பீட்டு!!

    ReplyDelete
  11. இந்த வார்ப்புருவும் நன்றாகத்தான் இருக்கிறது

    ReplyDelete
  12. The credibility of the reviews is important.Otherwise readers may think
    that giving a book free and a review in
    the blog is a quid pro qua arrangement.
    Publishers try to promote books in many
    views.Getting them reviewed in one
    of them.But the credibility of the
    reviewer and review does matter.
    Having said all this, let me make
    one thing clear, I will not seek
    a book for review under this scheme.

    ReplyDelete
  13. Dear Anon:

    Of course, credibility of the reviews are important. But we believe informing about our existing books is quite important too. The blog posts of most posters will be more in the lines of 'introductions' to the book.

    Plus, the blogger has complete freedom to write anything he/she feels like about the book. By the way, this method is now followed by several global publishers.

    ReplyDelete
  14. Am so much interested to E-ink my first review for NHM.

    ReplyDelete
  15. //பத்ரி சார்!!

    "இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். "

    அப்ப நாங்க ???//

    உங்க பதிலுக்காக காத்திருக்கிறோம்...

    ReplyDelete
  16. //
    //பத்ரி சார்!!

    "இந்தியாவுக்குள் என்றால் எங்கள் செலவில் அஞ்சலில் அனுப்பிவைப்போம். "

    அப்ப நாங்க ???//

    உங்க பதிலுக்காக காத்திருக்கிறோம்...
    //

    இந்தியாவில் உங்கள் உறவினர், நண்பர் வீட்டு முகவரியைச் சொல்லுங்கள். அனுப்பி வைக்கிறோம். அங்கிருந்து பெற்றுக்கொள்வது உங்கள் பாடு! இல்லாவிட்டால் மேலும் சில வாரங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள். மின் - புத்தக வடிவில் உங்களை வந்து சேரும்.

    ReplyDelete
  17. நல்ல முயற்சி பத்ரி ஐயா,
    தமிழகத்தோட நிக்காம எங்களப் போல இந்தியாவுக்குள்ள ஊருசுத்தற தமிழர்களையும் சேத்திக்கனதுக்கு மிக்க நன்றி.
    பட்டியலை மி-சல் (மின்னஞ்சல்) அனுப்பிட்டு ஆவலோடக் காத்துக்கிட்டிருக்கேன்!

    ReplyDelete
  18. //மின் - புத்தக வடிவில் உங்களை வந்து சேரும்.//
    This is what I am looking for, I hope You know the after effects for being spreaded as PDFs.

    ReplyDelete
  19. என்னுடைய கமெண்ட் அனுமதிக்கப் படவில்லையா?
    பதிலிறுப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  20. அறிவன்: எந்த கமெண்ட்? நான் எதையும் நிறுத்திவைத்ததாகத் தெரியவில்லையே?

    ReplyDelete
  21. இளா: PDF-ஐ அல்லது அதுபோன்ற வேறு ஒரு ஃபார்மட்டை வைத்துக்கொண்டு, அதே நேரம் DRM-ம் இருக்குமாறு என்ன செய்யலாம் என்று பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

    ReplyDelete
  22. சூப்பர் சார். நீங்க ரொம்ப பாஸ்ட். இந்த மாதிரி திட்டமெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை. செல்போனை எடுத்து FAST ன்னு டைப் பண்ணினா EAST வருது. இப்பதான் அதுக்கு அர்த்தம் புரியுது.

    ReplyDelete
  23. இதன் மூலம் காதல்,சினிமா,மொக்கை தவிர்த்து புத்தகம் பட்றிய பல நல்ல பதிவுகள் கிடைக்கப்பெறலாம்.

    ReplyDelete
  24. என் பெயர் எஸ்கோபர் - பா.ராகவன் நூல் கொடுத்தால் பின்னூட்டமும் ஒரு கட்டுரையும் என் வலைப்பூவில் வெளியிடுகிறேன்.
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  25. Dear Badri,
    I believe in your scheme of sending books free of cost will definitely encourage both reading as well as writing, if i am true. Its one of the ways to promote books, sorry quality books...also i like to suggest that u can encourage readers to send money(voulentarily) if they get satisfied with your books..

    ReplyDelete