Monday, February 23, 2009

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் புத்தக ஊழல்?

இன்று எனக்கு பெயரில்லாக் கடிதம் ஒன்று வந்தது. பிற பதிப்பகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் இந்தக் கடிதத்தின் நகல் போயிருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஒவ்வோர் ஆண்டும், நூலகத் துறை தமிழ்ப் பதிப்பாளர்களிடமிருந்து புத்தகங்களைப் பெற்று தமிழகத்தில் உள்ள நூலகங்களுக்கு அளிக்கும். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஒரு புதிய திட்டத்தைக் கொண்டுவந்தது. சுமார் 12,500 கிராமப் பஞ்சாயத்துகளுக்கு பல அடிப்படை வசதிகளைச் செய்து தருவது அதன் நோக்கம்.

இந்த வசதிகளில் விளையாட்டு மைதானம் அமைப்பது, சுடுகாடு கட்டித்தருவது ஆகியவற்றுடன் நூலகம் கட்டித் தந்து, சில புத்தகங்களை வாங்கி அங்கே வைப்பதும் அடங்கும்.

இது தொடர்பாக, பதிப்பகங்கள் தங்கள் புத்தகங்களை விண்ணப்பிக்கலாம் என்ற ஆணை பல மாதங்களுக்கு முன் வந்திருந்தது. அதைப்பற்றி என் வலைப்பதிவிலே எழுதியிருந்தேன்.

இதன்படி, தமிழ்ப் பதிப்பாளர்கள் அனைவரும் புத்தகங்களை விண்ணப்பித்திருந்தனர். புத்தக மாதிரிகள் கோரப்பட்டன. கொடுக்கப்பட்டன. மேலும் சில விவரங்களைக் கேட்டார்கள். கொடுத்தோம். பிறகு ஒரு நாள், திடீரென, உள்ளாட்சித் துறை அலுவலகத்தில் (அவர்கள்தான் இதற்கான வேலையைச் செய்பவர்கள்) வந்து பேச அழைக்கப்பட்ட சில பதிப்பாளர்களில் ஒருவர் எங்கள் அலுவலகத்துக்கு தொலைபேசியில் அழைத்து, “உங்களைக் கூப்பிடவில்லையா” என்று கேட்டார். இல்லை என்றோம்.

சில நாள்கள் கழித்து, நீதிமன்றத்தில் ஒரு பதிப்பாளர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகத் தகவலைப் படித்தேன். சென்னை உயர்நீதிமன்றமும் புத்தகக் கொள்முதலைத் தொடரக்கூடாது என்று தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கு முன்னமேயே சென்னை உயர்நீதிமன்றத்தில் வேறொரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாம். ஆனால் இது தொடர்பான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இதற்கிடையில் பதிப்பாள நண்பர் ஒருவர் என்னை அழைத்து, இந்த வழக்குகளின் பின் இருந்து பண உதவி செய்வது நான்தான் (அதாவது கிழக்கு பதிப்பகம்) என்பதாகச் செய்திகள் உலவுகின்றனவே, அது உண்மையா என்று என்னிடம் கேட்டார். எனக்கே இந்தச் செய்தி புதிது என்று ஆச்சரியத்துடன் தெரிவித்தேன்.

பொதுவாக, பொதுமக்களுக்கு நேரடியாகப் புத்தகங்களை விற்பதே எங்கள் நோக்கம். இடையில் நூலகங்களுக்கு விண்ணப்பிக்கத் தவறமாட்டோம். கிடைத்தால் புத்தகங்களைத் தருவோம். கிடைக்காவிட்டால் குறை சொல்லமாட்டோம். லஞ்சம் என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்படித்தான் நாங்கள் இதுவரை நடந்துவந்துள்ளோம். மறைமுகமாகப் பிறரை வழக்கு தொடுக்க வைத்துப் பார்ப்பதில் எங்களுக்கு விருப்பமும் இல்லை. செய்வதாக இருந்தால் நேரடியாகவே வழக்கு தொடுத்திருப்போம்.

இடையில் பத்திரிகையாளர் ஞாநி இது குறித்தான சில விவரங்களை என்னிடம் கேட்டார். எனக்குத் தெரிந்த விவரங்களைக் கொடுத்தேன். இன்று வந்த மொட்டைக் கடுதாசியில் இருக்கும் பல விவரங்கள் நான் அறியாதவை. அந்தக் கடிதம், இந்தப் புத்தகங்களைப் பெறுவதில் நிறைய ஊழல்கள் நடந்துள்ளன என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறது.

மொத்தம் 818 பதிப்பாளர்கள் விண்ணப்பித்திருக்க, வெறும் 41 பேர்களுக்கு மட்டுமே ஆணைகள் வழங்கப்பட்டுள்ளனவாம். அதிலும் ஒரு சிலருக்கு கோடிக்கணக்கிலும், பலருக்கு பெரும் லட்சக்கணக்கிலும். குறைந்தபட்சமாக 15 லட்ச ரூபாயாவது. அதிகபட்சமாக 1.7 கோடி ரூபாய். இந்த 41 பேர் போக, மீதி அனைவருக்கும் பூஜ்யம். மேலும் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே நூல் வழங்கல் ஆணை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்தக் கடிதம் சொல்கிறது. பல பதிப்பாளர்கள் நிறைய லஞ்சம் கொடுத்துதான் ஆணைகளை வாங்கியுள்ளனர் என்று இந்தக் கடிதம் குற்றம் சாட்டுகிறது.

மொத்தம் 41 நிறுவனங்களுக்கு 19 கோடி ரூபாய்க்கு மேல் புத்தகங்கள் தரச் சொல்லி ஆணை வந்துள்ளது (ரூ. 19,70,47,443)

1. எஸ்.சாந்த் & கோ ரூ. 1,73,16,160
2. அல்லயன்ஸ் கம்பெனி ரூ. 1,49,55,098
3. மணிமேகலை பிரசுரம் ரூ. 1,18,33,390
4. கலைஞன் பதிப்பகம் ரூ. 1,00,41,535
5. சட்டக் கதிர் ரூ. 69,42,800
6. சிக்ஸ்த் சென்ஸ் ரூ. 69,86,645
7. நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ரூ. 68,81,540
8. ஹிக்கின்பாதம்ஸ் ரூ. 68,25,385
9. திருமகள் நிலையம் ரூ. 66,69,682
10. பாரதி பதிப்பகம் ரூ. 63,82,219
11. சக்தி பப்ளிஷிங் ஹவுஸ் ரூ. 58,96,275
12. ஸ்ரீ செண்பகா பதிப்பகம் ரூ. 55,03,190
13. பூம்புகார் பதிப்பகம் ரூ. 52,68,360
14. சுரா பதிப்பகம் ரூ. 52,37,360
15. விகடன் மீடியா சர்வீசஸ் ரூ. 51,66,260
16. அருணோதயம் ரூ. 48,15,903
17. வானதி பதிப்பகம் ரூ. 46,25,130
18. தமிழ்ப் புத்தகாலயம் ரூ. 46,09,815
19. புத்தகப் பூங்கா ரூ. 45,12,820
20. பூங்கொடி பதிப்பகம் ரூ. 44,97,505
21. கவிதா பப்ளிகேஷன்ஸ் ரூ. 42,11,625
22. இலக்குமி நிலையம் ரூ. 39,00,526
23. நர்மதா பதிப்பகம் ரூ. 37,93,627
24. தமிழ்மண் பதிப்பகம் ரூ. 35,32,660
25. நக்கீரன் பப்ளிகேஷன்ஸ் ரூ. 30,01,740
26. விஜயா பதிப்பகம் ரூ. 28,71,052
27. அலைகள் வெளியீட்டகம் ரூ. 27,19,688
28. காவ்யா பதிப்பகம் ரூ. 26,90,335
29. புதுமைப்பித்தன் பப்ளி. ரூ. 25,11,660
30. காலச்சுவடு பதிப்பகம் ரூ. 23,40,642
31. மயூரா புக்ஸ் ரூ. 21,79,835
32. ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ் ரூ. 21,79,835
33. அம்சா பதிப்பகம் ரூ. 21,69,625
34. பழனியப்பா பிரதர்ஸ் ரூ. 21,49,205
35. கண்ணதாசன் பதிப்பகம் ரூ. 20,24,132
36. மீனாட்சி புத்தக நிலையம் ரூ. 19,40,053
37. வித்யா பப்ளிகேஷன்ஸ் ரூ. 18,07,170
38. வள்ளல் சீதக்காதி பதிப்பகம் ரூ. 15,72,340
39. பிரேமா பிரசுரம் ரூ. 15,51,920
40. குழந்தைகள் உலகம் ரூ. 15,26,395
41. ஐந்திணைப் பதிப்பகம் ரூ. 15,05,975

மொத்தம் ரூ. 19,70,47,433

======

Disclaimers: அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இந்த எண்கள் சரியானவையா என்று எனக்குத் தெரியாது. அந்தக் கடிதத்தில் உள்ள குற்றச்சாட்டுகள் உண்மையா என்று எனக்குத் தெரியாது. தகவலை இப்போதைக்குப் பொதுவில் பகிர்ந்துகொள்வது மட்டுமே நோக்கம். புத்தகம் பெறுதலில் ஊழல் நடந்துள்ளதா, லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதா போன்றவை யாரோ பெயர் தெரியாத ஒருவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மட்டுமே. எனது இந்தப் பதிவின் காரணமாக நான் யார் பேரிலும் குற்றம் சாட்டவில்லை.

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற புதுமையான திட்டங்களைக் கொண்டுவரும்போது, transparent ஆக, எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்காதவண்ணம், பொதுமக்கள் பயன்பெற ஏற்றதாகச் செய்வது அவசியம்.

8 comments:

  1. இப்பட்டியலில் காலச்சுவடு பதிப்பகத்தின் பெயர் இருக்க, உயிர்மை பதிப்பகத்தின் பெயர் இல்லாமல் இருப்பது வியப்பளிக்கிறது. இளையபாரதி நடத்தும் பதிப்பகத்தின் பெயர் விடுபட்டிருப்பதும் மர்மமாகவே உள்ளது.

    கொள்முதல் விலை நூலகங்களுக்கு வாங்கப்படும் விலைதானா என்பது தெரியவில்லை. அப்படி இல்லாதபட்சத்தில் 30 முதல் 40 சதவீதம் வரை சம்மந்தப்பட்டவர்களுக்குக் கமிஷனாகக் கொடுக்கப்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

    ReplyDelete
  2. அண்ணா ஊழல் மறுமலர்ச்சி திட்டம்
    - புத்தகம்

    Hi Badri, A book could be published later in that TOPIC.
    Regards,
    Srinivasan. V.

    ReplyDelete
  3. என்ன கொடுமை சார் இது !!

    அரசு வெளிப்படையாக நிதிநிலை அறிக்கையில் பெயரை கூறினாலும் குற்றம் சாட்டுகிறீர்கள் (அதுதான் சரியான நடைமுறை என்பது என் கருத்து)

    எந்த புத்தகம் என்று sole discretion of the Commissioner (இது தவறான நடைமுறை என்பது என் கருத்து) என்றாலும் வழக்கு தொடர்கிறீர்கள்

    ----

    ஜோக்ஸ் அபார்ட்

    இந்த இடுகையை வாசித்த பின் (முக்கியமாக அந்த ஹிந்து நாளிதழ் செய்தி) நாட்டுடமை குறித்த என் இடுகையை மீண்டும் ஒரு முறை வாசித்தால் நான் ஏன் (சரியாக கடைபிடிக்கப்பட்ட) அரசு நடைமுறையை மாற்ற கூடாது என்று திரும்ப திரும்ப வாதிட்டேன் என்பது புரியும்.

    ReplyDelete
  4. என்ன கொடுமை ப்ருனோ சார் !

    மிச்சமுள்ள 777 பதிப்பாளர்களும் அழுவாங்க. அதுனால அவங்க கிட்ட
    விண்ணப்பபடிவம் வாங்கியே இருக்க கூடாதுன்னு சொல்லுவீங்க போல இருக்கே.

    நீங்க உங்க பதிவுல அரசு எப்படி 27 எழுத்தாளர்களை தேர்ந்து எடுத்தார்கள் என்ற விசயத்துக்கு போகவே இல்ல. (பதிவும் நடைமுறைக்கு விளக்கம் கொடுப்பதாகவே இருந்ததால்).

    இந்த பதிவுல இருக்கும் மையக்கருத்து ஒரு பதிப்பகத்தையோ(எழுத்தாளரையோ) எப்படி தேர்ந்து எடுக்கிறார்கள் என்பது குறித்து.

    அரசு கமிட்டி அமைத்ததா ? அதில் இடம் பெற்ற உறுப்பினர்கள் யார் ? அவர்களில் யாராவது பதிப்பகத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களா (would they gain financially if these publishing houses get the orders ?) இதை போன்ற கேள்விகள் எந்தவொரு democratic setup ளையும் வரத்தான் செய்யும். வரவும் வேண்டும்.

    அரசு எவ்வளவு தான நியாயமாக, transparent ஆக கொள்கைகள் வகுத்தாலும் இது போன்று கேள்விகள் வந்து கொண்டு தான் இருக்கும். அப்பதான் முறைகளை சீர் அமைக்க முடியும்.

    எல்லா நூலகத்துக்கும் எவ்வளவு பணமோ அதை ஒதுக்கி விட்டு, புத்தகங்கள் மக்களின் demand க்கு ஏற்றவாறு வாங்கலாம். மக்களின் விருப்பத்தை அந்தந்த பகுதியின் நூலக அதிகாரி கண்டறிந்து அவற்றுக்கு ஏற்றவாறு ஆர்டர் செய்யலாம். அப்படி செய்யும் பட்சத்தில் இவ்வாறான பெரிய தொகை வராது. ஊழல் குற்றச்சாற்று வரவும் வாய்ப்புக்கள் குறைவு (relatively)

    எல்லா மொட்டை கடிதத்துக்கும் மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால் நாட்டுல எந்த வேலையும் நடக்காது. பத்ரி எதற்காக அந்த லெட்டர் அப்படியே பப்ளிஷ் பண்ணினாருன்னு அவருக்கே வெளிச்சம்.

    ReplyDelete
  5. //எல்லா மொட்டை கடிதத்துக்கும் மதிப்பு கொடுக்க ஆரம்பித்தால் நாட்டுல எந்த வேலையும் நடக்காது. பத்ரி எதற்காக அந்த லெட்டர் அப்படியே பப்ளிஷ் பண்ணினாருன்னு அவருக்கே வெளிச்சம்.//

    நான் அந்த லெட்டரை அப்ப்டியே பப்ளிஷ் செய்யவில்லை. அதிலிருந்து சில விஷயங்களை மட்டும்தான் வெளியே சொன்னேன். மேலும் இதுபற்றி சில விசாரணைகளை மேற்கொண்டபிறகுதான் இந்தப் பதிவை எழுதினேன்.

    மொட்டைக் கடிதாசிக்கு மதிப்பு கொடுக்கவேண்டியது இல்லைதான். அதனால் RTI முறையில் உண்மையான தகவல் என்ன என்று தெரிந்துகொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.

    ReplyDelete
  6. Finally a whistle blower post in tamil blog world. Waiting to see more information from the RTI.

    ReplyDelete
  7. நாட்டுடைமை விஷயத்தில் அரசின் சரியான நடைமுறை (1. நிதி ஓதுக்கப்பட்டபின்னர் தொடர்பு கொள்வது 2. நிதி நிலை அறிக்கையில் பெயர்கள் இடம்பெறுவது) குறித்த விமர்சணங்கள் இருந்தன.

    இரு வாரிசுகளின் சுயநலத்திற்கு ஒரு சரியான நடைமுறை மாற்றப்பட்டு தவறான நடைமுறை இடம்பெறக்கூடாது என்ற கருத்தை பதிய வைக்கத்தான் நான் அந்த இடுகையை எழுதினேன்.

    //அரசு கமிட்டி அமைத்ததா ? அதில் இடம் பெற்ற உறுப்பினர்கள் யார் ? அவர்களில் யாராவது பதிப்பகத்துடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களா (would they gain financially if these publishing houses get the orders ?) இதை போன்ற கேள்விகள் எந்தவொரு democratic setup ளையும் வரத்தான் செய்யும். வரவும் வேண்டும்.

    அரசு எவ்வளவு தான நியாயமாக, transparent ஆக கொள்கைகள் வகுத்தாலும் இது போன்று கேள்விகள் வந்து கொண்டு தான் இருக்கும். அப்பதான் முறைகளை சீர் அமைக்க முடியும்.//

    நடைமுறைகளை சீர் அமைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

    ஆனால் //நாட்டுடைமையாக்குதல் என்பது பட்ஜெட்டுக்குள் வரவே கூடாது. பட்ஜெட்டில் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கிவிட்டு, நிபுணர் குழுவைக் கொண்டு செயல்படுத்தப்படவேண்டிய ஒரு விஷயம் இது.// என்பது ஆபத்தான விஷயம் என்பதை மறுபடியும் பதிகிறேன்

    //என்ன கொடுமை ப்ருனோ சார் !
    மிச்சமுள்ள 777 பதிப்பாளர்களும் அழுவாங்க. அதுனால அவங்க கிட்ட விண்ணப்பபடிவம் வாங்கியே இருக்க கூடாதுன்னு சொல்லுவீங்க போல இருக்கே. //

    நான் அப்படி கூறவில்லை. மீண்டும் ஒரு முறை நான் எழுதியதை படித்து பாருங்கள். உங்களுக்கு தமிழ் புரியும் என்றே நம்புகிறேன்

    ReplyDelete
  8. பத்ரி அவர்களுக்கு,

    இந்தப் பதிவிற்கு சம்பந்தமில்லாத கேள்விதான்.

    அரசு நூல்களை வாங்குகையில் ஒரு ஃபார்மிற்கு ரூ2.70 என்று விலை நிர்ணயம் செய்துதான் வாங்குகிறது என்று கேள்வியுற்றேன். உண்மைதானா?!

    மிக்க அன்புடன்,
    செல்வேந்திரன்.

    ReplyDelete