Tuesday, July 28, 2009

Prodigy Spark - வெளியீட்டு விழா

நேற்று வேலூரில், சன்பீம் பள்ளியில் நியூ ஹொரைஸன் மீடியாவின் 'Prodigy Spark' என்ற பள்ளி மாணவர்களுக்கான மாத இதழ் வெளியிடப்பட்டது. சோதனை முயற்சியாக மூன்று இதழ்கள் கொண்டுவந்தபிறகு, நான்காவது இதழ் இப்போது அச்சில் உள்ளது; ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.

‘பிராடிஜி மேதை’ என்று தமிழில் ஒரு மாத இதழ் கொண்டுவருகிறோம். அதுவும் பள்ளி மாணவர்களுக்கானதே.

Prodigy Spark - Launch of a student magazine

இந்த இரண்டு இதழ்களும் கடைகளில் இன்னும் சில மாதங்களுக்குக் கிடைக்காது. கடைகளில் கிடைக்காமலேயே போகலாம். மேதை இதழ் இன்னும் மூன்று மாதங்கள் கழித்து தனிநபர் ஆண்டுச் சந்தா வகையில் கிடைக்கலாம்; இணையத்திலோ நேரிலோ அதற்கு சந்தா செலுத்தலாம். Prodigy Spark இதழ் இப்போதைக்கு பள்ளிக்கூடங்கள் வழியாகவே விநியோகிக்கப்படும். சில மாதங்கள் சென்று, அதை நன்கு மேம்படுத்தியபிறகு (பீட்டா வெர்ஷன்!) இணையத்திலோ நேரடியாகவோ ஆண்டுச் சந்தாவாகக் கிடைக்கும்.

Suki Sivam addressing school children

நேற்றைய நிகழ்ச்சியில் சுகி சிவம் சுமார் 1.5 மணி நேரம் பேசினார். புத்தகங்களை ஏன் தேடிப் படிக்கவேண்டும், புத்தகம் படிப்பதால் என்ன பயன் என்பது பற்றிய அவரது பேச்சு, நகைச்சுவை இழையோட, சுவாரசியமாக இருந்தது. சுமார் 2500 மாணவர்களும் சில ஆர்வமுள்ள பெற்றோர்களும் வந்திருந்தனர்.

Launch of Prodigy Spark - Students 1

Launch of Prodigy Spark - Students 2

3 comments:

  1. //நேற்றைய நிகழ்ச்சியில் சுகி சிவம் சுமார் 1.5 மணி நேரம் பேசினார்.//

    வெய்யிலில், திறந்த வெளி அரங்கத்தில் 1.5 மணி நேரம் பேசுபவர்களுக்காக சுஜாதாவின் செல்லப்புலி காத்திருக்கிற்து. :-)

    Prodigy Spark-இன் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. வெயில் மங்கிவிட்டது. கருமேகம் மிரட்டிக்கொண்டே இருந்தது. பேச்சு முடியும்வரை மழை பொறுத்திருந்து, அடித்து நொறுக்கியதே! எனது படங்களைப் பார்த்தாலே தெரிந்திருக்குமே, மங்கிய ஒளியில் எடுத்துள்ளேன் என்பதை! மாணவர்கள் பேச்சை மிகவும் ரசித்தனர்.

    ReplyDelete
  3. வாழ்த்துகள் பத்ரி.

    ReplyDelete