Saturday, January 02, 2010

ரகோத்தமன் கிழக்கு பதிப்பக அரங்கில் (P1) ஞாயிறு அன்று

கிழக்கு பதிப்பகம் இந்தப் புத்தகக் கண்காட்சியில் வெளியிட்டிருக்கும் ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் விலகும் நேரம் நூல் மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறது. அரங்குக்குள் நுழையும் ஒவ்வொரு வாசகரும் திரும்பிச் செல்லும்போது இந்த நூலை வாங்கிச் செல்வதைக் காண முடிகிறது.

பத்திரிகைகள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் வட்டத்திலும் இந்நூல் மட்டுமே இன்றைக்குப் பேசப்படும் விஷயமாகி உள்ளது. பரபரப்பு அம்சம் தாண்டி, ஒரு நேர்மையான புலன் விசாரணை என்பது எவ்வாறு இருக்கும் என்பதை முதல் முறையாக இந்நூல் மிகையின்றி விவரித்திருப்பதும் இதன் வெற்றிக்கு முக்கியக் காரணம்.

நூலாசிரியரும் ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரியுமான கே. ரகோத்தமன், பத்திரிகை, தொலைக்காட்சி பேட்டிகளில் கடந்த சில வாரங்களாக மிகவும் பிசி;-) ஒருவாறு மீடியா பேட்டிகளை முடித்துக்கொண்டு நாளைக்குப் புத்தகக் கண்காட்சியில் கிழக்கு அரங்குக்கு வருகை தர ஒப்புக்கொண்டிருக்கிறார்.

ராஜிவ் கொலை வழக்கின் தலைமைப் புலனாய்வு அதிகாரியாகப் பணியாற்றிய கே. ரகோத்தமனை நேரில் சந்திக்க, என்ன வேண்டுமானாலும் கேள்விகள் கேட்க, உரையாட, புத்தகத்தில் அவரது கையெழுத்துப் பெற விரும்பும் வாசகர்கள், நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 4.15 மணி அளவில் கண்காட்சி வளாகத்தில் கிழக்கு அரங்குக்கு [P1] வரலாம்!

கிழக்கு அரங்கில் ரகோத்தமன் குறைந்தது ஒரு மணிநேரம் இருப்பார்.

====

அப்படி கிழக்கு அரங்குக்கு நாளை வரமுடியாதவர்கள் கட்டாயம் ஜீ தமிழ் தொலைக்காட்சியைப் பாருங்கள். இரவு 9.00-10.00. இது சென்ற வாரம் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம். ‘திடுக்’கிடும் தகவல்கள் இந்த இரண்டாம் பாகத்தில்தான் வெளியாக உள்ளன என்கிறார் சுதாங்கன்.

4 comments:

  1. பத்ரி,தொலைக்காட்சியின் ஒலி,ஒளித் துண்டை இங்கு யூ ட்யூபிலாவது அல்லது வீடியோக் காட்சியாகவாவது இங்கு இணைத்து உதவுங்களேன்..

    எங்களைப் போன்றவர்களுக்கு எளிதாக இருக்கும்..

    ReplyDelete
  2. pl give a link to the ZEE-TV episode.

    ReplyDelete
  3. அன்புள்ள பத்ரி,
    புத்தகக் கண்காட்சி ஏற்பாடுகள் குறித்து:
    1. எங்களைப் போன்ற முதுகிழவர்கள்/கிழவர்களுக்ககாகத் தனியாக “டிக்கட் கவுண்டர்” ஏன் வைக்கக்கூடாது? நான் இளசுகளுடன் பதினைந்து நிமிஷங்கள் கால்கடுக்க நிற்க வேண்டியிருந்தது.
    2. கிழவர்களுக்கு என்று அரங்கத்துள் உட்கார பெஞ்சுகள் போடப்பட்டு ஒதுக்கப்படக்கூடாதா?
    3. குடிப்பதற்குத் தர்மத் தண்ணீர்ப்பந்தல் திறக்கக் கூடாதா? கேட்டால் சில “கார்ப்பரேட்” புண்ணியவான்கள் உதவி செய்யத் தயாராக இருப்பார்களே!
    அன்புடன்
    கிருஷ்ணமூர்த்தி

    ReplyDelete