Monday, February 28, 2011

நொறுங்கும் ஆரியப் படையெடுப்புக் கோட்பாடு

கிரேக்க நாட்டிலிருந்து தற்போது சென்னையில் இருக்கும் நிக்கோலாஸ் கஸானாஸ் என்ற இந்தியவியல் பேராசிரியர், சனிக்கிழமை (26 பிப்ரவரி 2011) அன்று ஐஐடி சென்னையில் பேசினார். மத்திய ஆசியாவிலிருந்து ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவில் நுழைந்து கங்கைச் சமவெளிக்குப் பரவி, பூர்வகுடி இந்தியர்களை ஆக்ரமித்தனர்; அவர்களது நூல்தான் வேதங்கள் என்று ஒரு கோட்பாடு உள்ளது. மொஹஞ்சதாரோ, ஹாரப்பா நாகரிகத்தினரையும் இந்த குதிரை மேல் ஏறிப் போர்புரியும் ஆர்யர்கள்தான் அழித்தனர் என்றும் இந்தக் கோட்பாடு நீட்டிக்கிறது.

இவற்றை மறுத்து, இவற்றுக்கு மாறான ஒரு கோட்பாட்டை முன்வைக்கிறார் நிக்கோலாஸ் கஸானாஸ். ஆரிய-திராவிடப் பகை குறித்து எதையும் இவர் பேசுவதில்லை அல்லது முன்வைப்பதில்லை. மாறாக, வேதங்களை யார் இயற்றினரோ, வேதிக் அல்லது வேதமொழி எனப்படும் சமஸ்கிருதத்துக்கும் முந்தைய பழமையான மொழியை யார் பேசினரோ அவர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், அவர்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு வந்திருக்க வாய்ப்பே இல்லை; மாறாக அவர்கள் இந்தியாவிலிருந்துதான் வெளியே வடமேற்கு மற்றும் வடகிழக்குத் திசைகளில் போயிருக்கவேண்டும் என்பதும் இவரது வாதம். அந்தப் பேச்சின் வீடியோவைக் கீழே பார்க்கலாம். கேள்வி பதில் பகுதியும் இணைந்தது.

8 comments:

  1. அப்படில்லாமா நாங்க நொறுங்க விட்ருவோம்? பின்ன எங்க பொழைப்பு என்னாறது?

    ReplyDelete
  2. இந்த நிக்கோலசை இன்னுமா யாரும் இந்துத்வாவாதி என்று சொல்லவில்லை ? :D

    --
    இவர் கேட்க்கும் கேள்விகள் எல்லாம் டேவிட் பிராலே போன்றவர்கள் கேட்டவைகளே.

    விவேகானந்தர் கூட அவர் காலகட்டத்தில் இப்படியெல்லாம் கேட்டு அவருக்கும் பதில் கிடைக்கவில்லை.

    In Search of the Cradle of Civilisation என்ற புத்தகத்தைப் பார்க்கவும். அமேசான் ல் கிடைக்கிறது. 18 $ என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. @Vajra You can get in Motilal Banarisidas Publication Rs 250.

    ReplyDelete
  4. Another one is 'The Return of the Aryans' by B.Gidwani - he also presents similar views.

    ReplyDelete
  5. இதிலென்ன அப்படி ஒரு சந்தோஷம்.

    ReplyDelete
  6. இவை புதிதானவை அல்ல.

    திராவிடியன் அசெண்டிங் தியரி மற்றும் திராவிடியன் டிசெண்டிங் தியரி என இரண்டின் பாலும் பல ஆக்கபூர்வமான நூல்கள் உள்ளன.

    திராவிடியன் அசெண்டிங் தியரிதான் சரியானதாக இருக்க முடியும் என்பதற்கான வலிமையான ஆய்வு ஆக்க முடிவுகள் மறைமலையடிகள் காலத்திலேயே நிறுவப் பட்டு விட்டன...

    வேதங்களின் கட்டுமானம் பல காலகட்டங்களில் பல விதயங்களால் மாறுபட்டிருக்கிறது என்பதற்கான பல விளக்கக் கூறுகளும் உண்டு..

    உங்களுக்கு

    மறைமலையடிகள்,
    கந்தையா. ந.சி.

    ஆகியவர்களின் புத்தகங்களைப் பரிந்துரைக்கிறேன்...

    முக்கியமாக நாம் தமிழர்,தமிழர் சரித்திரம் போன்றவை...

    படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதினால் அறிய ஆவலாயிருக்கிறேன்..முக்கியமாக விதயங்களைத் திறந்த மனத்துடன் அணுகும் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கள் சுவாரசியமாக இருக்கும் என்பது எனது எண்ணம்...

    ReplyDelete
  7. ஆரிய இனம் என்று ஒன்று இல்லாத போது திராவிட இனம் மட்டும் எப்படி இருக்கமுடியும்? அது மட்டும் எப்படி சிந்து சமவெளிக்கு தமிழகத்திலிருந்து புலம்பெயர்ந்திருக்க முடியும் ?

    எப்படியாவது திராவிட இனவாதத்தை வளர்த்து அதன் மூலம் பிரிவினையை உருவாக்கவேண்டும், அதில் மதம் மாற்ற வேண்டும், என்ற கிருத்தவ அடிப்படைவாத சிந்தனையினால் உருவாக்கப்படும் "லிபரேசன் தியாலஜியால்" மதி மயங்கிய மார்க்ஸிஸ்ட் மடயர்கள் மட்டுமே இன்னும் திராவிட இனம் என்று பேசித் திரிகிறார்கள்.

    ஆரிய இனவாதக் கோட்பாடு எப்படி சரித்திரத்தின் குப்பைத்தொட்டியில் கடாசி எரியப்படவேண்டியதோ அதே போல் திராவிட இனவாதக் கோட்பாடும் எரியப்படவேண்டியதே. இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள்.

    ReplyDelete
  8. http://koenraadelst.blogspot.com/2011/03/still-no-trace-of-aryan-invasion.html

    ReplyDelete