Monday, February 21, 2011

உலோகம். தமிழகமெங்கும். பாதி விலையில்!

சென்னை புத்தகக் கண்காட்சியில் ஜெயமோகனின் உலோகம் நாவல் அதிவேகமாக விற்பனை ஆகியது. மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது. அனைத்தும் புத்தகக் கண்காட்சியிலேயே விற்றுவிட்டன. கடைகளுக்குப் போகவே இல்லை.

இதன் விற்பனை வேகத்தைப் பார்த்து, இந்தப் புத்தகத்தை 5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம். விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம். அதே தாள், அதே தரம். விலை மட்டும்தான் பாதிக்குப் பாதி! ஏற்கெனவே தமிழகம் எங்கும் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் 5,000 பிரதிகளுக்குமாக ஆர்டர்கள் வந்துவிட்டன. அடுத்த நான்கு நாட்களுக்குள் பிரதிகள் அனைத்துக் கடைகளுக்கும் அனுப்பப்பட்டுவிடும். புத்தகக் கடைகள்முதல் தெருமுனைக் கடைகள்வரை எங்கும் கிடைக்கும். ஒரே மாதத்தில் 5,000-மும் விற்றுவிடும் என்கிறார்கள் எங்கள் விற்பனைத் துறையினர்.

பின்னர் விலை ஏறலாம். எனவே இந்த விலைக்கு இந்தப் புத்தகத்தை வாங்கவேண்டும் என்றால் இப்போதே கடைகளை அணுகி, புத்தகத்தை முன்பதிவு செய்து வாங்கிவிடுங்கள்.

புத்தகத்தை இணையத்தில் வாங்க
.

13 comments:

  1. >>தமிழகம் எங்கும் உள்ள கடைகளிலிருந்து மொத்தம் 5,000 பிரதிகளுக்குமாக ஆர்டர்கள் வந்துவிட்டன///

    இன்னொரு தமிழ் எழுத்தாளர் நேத்து முழுக்க தெருத்தெருவா ஏதோ ’உலோகம், உலோகம்’-னு புலம்பித் திரிந்ததாகக் கேள்வி.

    ReplyDelete
  2. ஒரு நிமிடம் பிளாட்டினம் தான் தமிழகம் பூராவும் கிடைக்கிறதோ என்று எண்ணிவிட்டேன்! புத்தகக் கண்காட்சிக்குப் போகாதது தவறோ என்று தோன்றுகிறது!!

    ReplyDelete
  3. அண்ணே..

    50 ரூபாய்க்கு பிரிண்ட் செய்தாலே உங்களுக்கு லாபம்தான் என்றிருக்கும்போது, நீங்க முன்னாடியே 50 ரூபாய்க்கே விற்றிருந்தால் எனக்கு அந்த 50 ரூபாய் மிச்சமாகி வேறொரு புத்தகம் வாங்கியிருப்பேன்..! - புலம்பல் தமிழன்..!

    ReplyDelete
  4. கடைசியில் ஜெமோ நாவலை தள்ளுபடி வரிசையில் தள்ளி வீட்டீர்கள் :).100 ரூபாய் கொடுத்து வாங்கியவர்கள் ஐயோ பாவம்.இதில் 50 ரூபாய்க்கு விற்றும் உங்களுக்கு லாபம் வருகிறது என்றால் முதலிலியே 50 ரூபாய் விலை என்று போட்டிருக்கலாம்.இதிலிருந்து அறியும் நீதி என்னவெனில் கிழக்கு புத்தகங்களின் அடக்க விலை
    விற்பனை விலையில் 50%க்கும் குறைவானது என்று வாசகர் புரிந்து கொள்ளலாமா.அது 30%தான் என்று நினைக்கிறேன்.ராயல்டி என்று கணக்கிடும் போது
    50 ரூபாய் அடிப்படையில் கணக்கிட்டாலும் எழுத்தாளருக்கும்,உங்களுக்கும் நட்டமில்லை என்று சொல்வீர்களா.இதே சலுகையை புத்தக கண்காட்சியில் அதிகம் விற்ற பிற நூல்களுக்கும் தரும் எண்ணம் உண்டா.

    ReplyDelete
  5. உண்மைத்தமிழன், அனானி: ஒரு புத்தகம் எந்த வால்யூமில் அச்சடிக்கப்படுகிறதோ, அதற்கு ஏற்ப அதன் உற்பத்தி விலை குறையும். 500 அச்சடித்தால் அதற்கு ஆகும் விலை ஒன்று. 5,000 அச்சடித்தால் அதற்கு ஆகும் விலை வேறு. 5,000 அச்சடித்தால் அது விற்பனை ஆகும் என்ற நம்பிக்கை இருந்தால்தான் பதிப்பாளர் அதனைச் செய்வார்.

    அடுத்து, பதிப்பாளர் எத்தனை லாபம் ஒரு புத்தகத்திலிருந்து வரவேண்டும் என்று நினைக்கிறாரோ, அதனைக் குறைத்துக்கொள்ள முற்படலாம். இங்கு அதனையும் செய்திருக்கிறோம்.

    இதிலிருந்து கிடைக்கும் நீதியாக நீங்கள் சொல்வது தவறு என்றுமட்டும் சொல்லமுடியும். அதற்குமேல் இங்கு உரையாடப் போவதில்லை.

    மேலும் பலர் குறைந்த விலையில் வாங்கி வளம்பெறட்டும் என்ற நம்பிக்கையில் செய்யும் நல்ல காரியமாக ஏன் இதனைப் பார்க்கக்கூடாது?

    பதிப்புத்துறையில் இருக்கும் வேறு நண்பர்களிடம் இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டுபோய்க் காண்பித்து அவர்கள் விற்பனை செய்தால் என்ன விலை வைப்பார்கள் என்று விசாரித்துப் பாருங்களேன்?

    ReplyDelete
  6. http://twitpic.com/42go6f/full

    உண்மைத்தமிழன் கவனத்துக்கு மேலே உள்ள புகைப்படம். புத்தகத்தின் உண்மை விலை 1 ரூபாய்தான். நேற்றுவரை இதன் பதிப்பாளர்கள் ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் என்பீர்களா? அவ்வப்போது கொஞ்சம் சிந்திக்கவும் வேண்டும் ஐயா.இல்லாவிட்டால் மூளை துருப்பிடித்துவிடும்.

    ReplyDelete
  7. மதுரையிலிருந்து....Tue Feb 22, 01:39:00 PM GMT+5:30

    அய்யா! உ.த....
    \\மிகக் குறைந்த பிரதிகளே (600) அச்சிட்டிருந்தோம். அதன் விலை ரூ. 100 என்று இருந்தது\\
    \\5,000 பிரதிகள் அச்சிட்டுள்ளோம். விலையையும் ரூ. 50 என்று குறைத்துள்ளோம்\\
    இவ்வளவு எளிமையாக-விளக்கமாக- எழுதியும் உமக்கு விளங்கவில்லையா?
    சொல்வது யார்? என்ன சொல்கிறார்? என்பது பற்றியெல்லாம் கொஞ்சம் கூடச் சிந்திப்பதில்லை... கேள்வி மட்டும் கேட்டுவிட வேண்டியது?

    பத்ரி சார், பாவம் சார் நீங்கள்...........

    ReplyDelete
  8. ஆனாலும் உங்களுக்கு பொறுமை சாஸ்தி பத்ரி!

    I remember reading an HBR case study sometime back about the Indian consumer culture in which the buyer feels affronted at discounts offered post-purchase, to the extent that he holds grudge against the vendor/brand by shunning them in future purchase decisions. Ostensibly it is the reason why some big chains went easy on discounts.

    ReplyDelete
  9. இங்கு பத்ரி சொல்லும் காரணம் சரியானதே.அதே சமயம் ஒரு புத்தகத்தை ரூ100 கொடுத்து வாங்கி விட்டு ஒரு மாதத்திற்குள் அதே பதிப்பகம் அதை ரூ 50க்கு விற்பனை செய்தால் (காரணம் என்னதான் உண்மையாக இருப்பினும்) முதலில் வாங்கியவர் மனதில் ஒரு நெருடல் ஏற்படுவதும் இயற்கை. அந்த வகையில் உண்மைதமிழன் சொல்வதும் சரியே.
    இவ்வகையில் புத்தக கண்காட்சியில் கிழக்கு பதிப்பக புத்தகங்கள் வாங்கியவர்கள இன்னும் சில நாட்களுக்கு சென்னை மயிலை ,தி.நகர் பகுதியில் நடைபெறும் கிழக்கு விற்பனை கடைகளில் நுழையாமல் இருத்தல் அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது!

    ReplyDelete
  10. Dear Badri,

    As a consumer immensely benefited from your stock clearance sale,I should not be making this comment but I feel such drastic discount sale would have an adverse say on the sale of your fresh books in future.My 10 cents of course!

    Regards,

    ReplyDelete
  11. @பத்ரி
    புத்தகக் கண்காட்சி வரை வந்து முதல் பதிப்பில் வாங்கி படித்து விமர்சனமும் எழுதி விட்டு திரும்பினால் பாதி விலையில் பொட்டிக் கடையில் கூட கிடைக்கும் என்றால்
    கண்பத் சொன்னது மிகச் சரி. ஒரு மாதத்துக்குள் பாதி விலை குறைந்து விட்டது என்பது முதலில் வாங்கி விட்டவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் செயல் தானே.
    இனிமேல் முதல் பதிப்பை அடித்துப் பிடித்து வாங்குவதை விட காத்திருந்து வாங்கலாம் என்று தோன்றும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை.

    விமர்சனம் இங்கே



    http://www.virutcham.com/2011/02/உலோகம்-புத்தக-விமர்சனம்/

    ReplyDelete
  12. ப‌த்ரி,

    அப்ப‌ இவ்வ‌ள‌வு ப‌ர‌ப‌ர‌ப்பா விற்க‌ப்ப‌ட்ட‌தா சொல்ல‌ப்ப‌ட்ட‌ உலோக‌ம் இதுவ‌ரைக்கும் 600 தான் வித்திருக்கு, ஃப்யூச்ச‌ர் ஆர்ட‌ர்ஸையும் சேர்த்தா 5,600 தான் வித்திருக்கா?

    ReplyDelete