Saturday, April 23, 2011

ஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்

ஆர்தர் கோனான் டாயில் எழுதிய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் முதலாவதான ‘A Study in Scarlet’ என்பதன் என்னுடைய தமிழாக்கம் - கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியானது. இப்போதும் அச்சுப் பதிப்பில் கிழக்கு வழியாகக் கிடைக்கும். இனி மின்புத்தகமாக, இலவசமாக scribd வழியாகவும் நீங்கள் இதனைப் படிக்கலாம். புத்தக தினத்துக்காக, உங்களுக்கே உங்களுக்காக!

Oru Mothiram Iru Kolaigal - Tamil Novel - Sherlock Holmes

6 comments:

  1. கொஞ்சம் முன்னாடி சொல்லியிருக்கக்கூடாதாங்க? இப்பதான் போனவாரம் தாம்பரம் ஸ்டேஷன்ல புக்கை வாங்கினேன். :-))

    ReplyDelete
  2. நல்ல பதிவு நன்றி பத்ரி :)

    சில கேள்விகள். இவற்றுக்கான பதில்கள் கிடைத்தால் அது மிகப் பலருக்கு உதவியாக இருக்கும்.

    இந்த இரு மின்னூல்களையும் இணையத்தில் முழுமையாக வெளியிட உங்களைத் தூண்டியது என்ன?

    இரண்டுமே உங்களது நூல்கள். இவற்றின் முதற்பதிப்புக்கள் விற்றுத் தீர்ந்துவிட்டனவா? மறுபதிப்புக்கள் போடும் எண்ணம் உள்ளதா? இத்தகைய மொழிபெயர்ப்புக்கள் வணிகப் பெறுமதி உள்ளவைதானா?

    மின்னூல்களாக இணையத்தில் விடுவது உங்கள் விற்பனையைப் பாதிக்கும் என எண்ணுகிறீர்களா? அல்லது ஒரு சோதனையாகத்தான் இவையிரண்டையும் வெளியிட்டுள்ளீர்களா?

    வெளிவந்து 10 அல்லது 15 ஆண்டு கடந்த நூல்களை இணையத்தில் வெளியிட நூலாசிரியர்கள் முன்வருவது அறிவின் பரவுகைக்கு உதவும் என நம்புகிறீர்களா? (எழுத்தாளர் இறந்து 60 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம், இல்லையா?)

    தமிழில் மறுபதிப்புவராத பல்லாயிரம் நூல்கள் உள்ளன. அவற்றில் மிகப் பயனுடைய பல அடங்கும். ஆயிரம் பிரதிகளுக்கு வாசகர் இல்லையெனினும் 100 பிரதியேனும் தேவைப்படும் பல நூல்கள் உள்ளன...

    நூலின் கடைசிப் பதிப்பு + 10 ஆண்டுகள் என்றமாதிரியாக நூல்களை இணையமேற்ற நீங்கள் ஆதரவளிப்பீர்களா? அல்லது இருக்கவே இருக்கிறது print on demand என்பீர்களா?

    உங்களிடமிருந்து விரிவான பதிலை வேண்டி நிற்கிறேன்.

    ReplyDelete
  3. Dear Badri, Any information on feedle. Are there no plans to on e-books. So we could have other books
    Vimal

    ReplyDelete
  4. உங்கள் மொழி பெயர்ப்பில் அடுத்த ஷெர்லாக் ஹோம்ஸ் புத்தகம் எப்போ சார் ரிலீஸ் ???

    ReplyDelete
  5. நன்றி பத்ரி

    ReplyDelete
  6. Just finished reading this (on a Chinese Android Tablet)

    Well engaginh translarion, would be interested in future books of this series.

    On a different note, are there any plans for NHM "paid" eBooks in future?

    ReplyDelete