Thursday, March 01, 2012

திராவிட இயக்கத்தின் 100-வது ஆண்டு விழா

திராவிட முன்னேற்றக் கழகம், 2012-ம் ஆண்டை திராவிட இயக்கம் தொடங்கி 100 ஆண்டுகள் நிறைவுறும் ஆண்டாகக் கொண்டாட முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுதும், ஆண்டு முழுதும் பெரும் கொண்டாட்டங்களை நிகழ்த்தவுள்ளதாகச் சொல்லியுள்ளனர்.

தினம் தினம் சர்ச்சைகளுக்குக் குறைவில்லாத வகையில் மேடை முழக்கங்கள் எழும்புகின்றன.

திராவிட இயக்கம் என்பது பிராமணரல்லாதார் இயக்கமாகத்தான் தோன்றியது. பிரிட்டிஷ் இந்தியாவில் சென்னை மாகாணத்தில் அரசு வேலைகளில் படித்த பார்ப்பனர்களே மிகப் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பதை எதிர்த்து பார்ப்பனர் அல்லாத சில சாதியினர் ஒன்று திரண்டு உருவாக்கிய ஓர் அமைப்பு, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டது.

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பது பார்ப்பனீய எதிர்ப்பு என்றும் இந்து மத எதிர்ப்பு என்றும் பெரியாரின்கீழ் மாறியது. ஆரிய - திராவிடக் கருத்தாக்கம் அதில் புகுந்து, வடவர் எதிர்ப்பு, ஆரியர் எதிர்ப்பு என்று மாறியது. வடவர் எதிர்ப்பு என்பது இயல்பாகவே இந்தித் திணிப்பு எதிர்ப்பாக மாறியது. சுதந்தரப் போராட்டத்தின்போது அப்போராட்டத்தையே எதிர்க்கும் அல்லது தனி திராவிட நாடு கேட்கும் குரலாக மாறியது.

சுதந்தரத்துக்குப் பிறகும் மொழிவாரி மாகாணப் பிரிப்புக்குப் பிறகும், திராவிடம் என்பது தமிழ் என்ற அளவில் சுருங்கிப்போக,

இனம்: ஆரியம் x திராவிடம்
மொழி: சமஸ்கிருதம்/இந்தி x தமிழ்
மதம்: பார்ப்பனியம்/இந்து x நாத்திகம்

என்ற இருமைகள் தோன்றின.

அரசியல்ரீதியில் திராவிடத் தனி நாடு என்று தொடங்கி, தனித் தமிழ்நாடு என்றாகி, பிறகு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்றானது.

திராவிட இயக்கத்தின் நன்மைகளாக எவற்றையெல்லாம் கூறலாம்?
  • வடமொழி கலவாத தமிழ் மொழி மறுமலர்ச்சி. தமிழை எளிமைப்படுத்துதல், மேடைப் பேச்சு என்ற பாணி.
  • வரைமுறையற்ற வகையில் நாடெங்கும் இந்தி திணிக்கப்படுவதைத் தடுத்தது
  • சீர்திருத்தத் திருமணம், பெருமளவு சாதி மறுப்பு, சமத்துவத்தை நோக்கிய தொடர் பயணம்
  • நாத்திகம் என்ற கருத்தின் பரவல். இன்று தமிழகம் அளவுக்குப் பிற மாநிலங்களில் கடவுள் மறுப்புக் கொள்கை பரவியுள்ளதாகத் தெரியவில்லை. அதன் காரணமாக மதம் சார்ந்த விஷயங்கள் மீது ஓரளவுக்கு healthy scepticism.
  • இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை வேகமாக வரவேற்றது. அதன் காரணமான வளர்ச்சி
  • இட ஒதுக்கீடு, அதன் விளைவாகக் கல்விப் பரவலாக்கம், அதன் விளைவாக மனித வள மேம்பாடு, விரைவான பொருளாதார மேம்பாடு.
  • அரசியல்ரீதியில் காங்கிரஸ் கட்சிக்கு செக். விளைவாக கூட்டாட்சியை நோக்கிய இந்தியப் பயணத்தில் முதல் அடி எடுத்து வைத்தது.
  • மாநில நலன்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தது.
இன்று திராவிட இயக்கம், முக்கியமாக திராவிட இயக்கத்தின் வாரிசுகள் தாம் மட்டும்தான் என்று சொல்லிகொள்ளும் திராவிடர் கழகம் (சமூக இயக்கம்), திராவிட முன்னேற்றக் கழகம் (அரசியல் கட்சி) ஆகியவை எந்நிலையில் உள்ளன? எதனை நோக்கிச் செல்லவேண்டும்?

6 comments:

  1. // திராவிடர் கழகம் (சமூக இயக்கம்), திராவிட முன்னேற்றக் கழகம் (அரசியல் கட்சி) ஆகியவை எந்நிலையில் உள்ளன? எதனை நோக்கிச் செல்லவேண்டும்?//

    பெரியாரின் நோக்கத்திற்கு மாறாக நடந்ததால், இன்றும் நடந்து வருவதால் ”கழகங்கள்” எல்லோமே கட்சியைக் கலைத்து விட்டு ஏதாவது ”மட ஸ்தாபனம்” ஆரம்பித்து நடத்தட்டும்.

    வீட்டில் உள்ளவர்கள் கோயிலுக்குச் சென்று உருளலாம். பூசாரிகள் காலில் விழலாம். பொட்டு வைத்துக் கொள்ளலாம். அதையே தன் கட்சிக் காரன் செய்தால் அவன் காட்டுமிராண்டி. எனக்கே கேவலமா இருக்கு கட்சிக்காரன்னு சொல்லிக்க.

    பெரியார் சொத்து சேர்த்து சேர்த்து தனது கட்சிக்குக் கொடுத்தார். இவர்கள் அதனை குடும்ப நிறுவனமாக மாற்றி விட்டார்கள். கட்சிக்காரன் சொத்து சேர்த்து சேர்த்துக் கொடுத்தால் அது எங்கே போகிறது என்பதுதான் எல்லோருக்கும் தெரிகிறதே!

    திராவிட இயக்கம் பெரியார் என்ற தன்னலமற்ற தலைவன் காலமான அன்றே செத்துப் போய் விட்டது. இப்போது இருப்பது அதன் உருக்குலைந்த, எதற்குமே உதவாத வெற்று எலும்புக் கூடுதான்.

    ReplyDelete
  2. மிக சிறிய கட்டுரையாக இருந்தாலும் , அதிக பொருள் கொண்டது. the big picture is completely visible here.

    ReplyDelete
  3. பத்ரி,

    வணக்கம்,

    திராவிட இயக்கம் 1912 இல் துவங்கியதாக கொண்டால் தான் 2012 இல் நூற்றாண்டு வரும், அப்படி எனில் 1912 இல் தோன்றியதா திராவிடர் இயக்கம்? அல்லது பொதுவான ஒரு இயக்கத்தினை திராவிடர் இயக்கத்தின் ஆரம்பம் எனக்கொண்டால் 1912 என எப்படி கருத முடியும்,

    ஜூவி யில் கழுகு பதிலில் உள்ளது,

    "வரலாற்று அடிப்படையில் பார்த்தால் 1916 இல் தென்னிந்திய நலச்சங்கம் உதயமானதில் இருந்து தான் பார்க்க வேண்டும்,அப்படிப்பார்த்தால் 2016 இல் தான் நூற்றாண்டு கொண்டாட வேண்டும்,ஆனால் 1912 இல் டாக்டர் நடேசன் தொடங்கிய மெட்ராஸ் யுனைடெட் லீக்'கை முன்னோடி இயக்கமாகச்சொல்லி கருணாநிதி விழாக்கொண்டாடுகிறார்.

    இதன்படி பார்த்தால் நடேசனாருக்கும் பல இயக்கங்கள் உண்டு.குற்றாலத்திலும் கோவில்ப்பட்டியிலும் திருவிடர் கழகம் தொடங்கிய விருதை சிவஞான யோகியின் வரலாறு 1908 இல் தொடங்குகிறது.எனவே இந்த ஆண்டில் திராவிட இயக்க நூற்றாண்டு விழா கொண்டாடுவது என்பதே ஆய்வுக்கு உரியது"

    கட்சிப்பெயரில் திராவிடம் என்று இருப்பதாலேயே திராவிட இயக்க நூற்றாண்டு கொண்டாட உரிமை இருப்பதாக கலைஞர் நினைத்துக்கொண்டு அவராகவே முடிவு எடுத்துக்கொள்வதா?

    தேமுதிக,மதிமுக ,அதிமுக எல்லாம் கூட திராவிடம்னு பெயரில் வைத்துள்ளார்கள் அவர்களும் ஆளுக்கு ஒரு நாளில் கொண்டாடி இதான் நூற்றாண்டு என சொல்லப்போகிறார்கள் :-))

    இது கூட அரசியல் சுய லாபத்துக்கு தான் பல ஊழல்கள் நில அபகரிப்பு என்று நாறிப்போய்விட்ட கட்சிக்கு நறுமணம் சேர்க்க திராவிடர் இயக்க நூற்றாண்டு கொண்டாடி மக்கள் மனதில் இடம் பிடிக்கப்பார்க்கிறார். இதனால் எல்லாம் திமுகவின் திராவிட சித்தாந்த கொள்கை எல்லாம் நீர்த்துப்போய் வெகு நாளாகிவிட்டதை மக்கள் மறக்கப்போவதில்லை.

    ReplyDelete
  4. Badri Sir,
    Crisp Commentary, but gives a lot of meaning. There is a term called In-ExApplicable which denotes our Mind. This means no one can explain and one can not be able to explain. Thravidar Kazhagam is also like that. No body knows who started it and no body bothers as well. But everyone uses that name for their own selfishness. Right from Periyar to DMK every one is using that name to fool people around. They restricted Brahmins and the result is magnanimous that many Brahmins educated much better and went to much more higher position. This itself is a thrash thrower in the faces of people who speak and divide the community as Aryan and Dravidian. As per the genetic engineering, the root of chromosomes of different ppl has been gathered and experimented and the result of which traverse through to only the same kind of root node with slight modifications. People created the caste system for their own selfishness and when one race is doing well, there are some opportunist who jumped and heated themselves in the shivering cold. Useless Dravidian statement and that is absoulte non-sense. Speaking so much Why Karunanidhi is allowing Maran to marry a brahmin girl and Udhayanidhi to marry a brahmin girl. Instead they can marry a tribal girl na? Atleast there community will be lifted.

    ReplyDelete
  5. திரு.ராம்பிரசாத் ,

    திராவிட அரசியலின் மய்ய நோக்கம் பிராமணர்களை வேளைகளில் இருந்து தூக்கி நாம் அங்கே இருக்க வேண்டும் என்பதல்ல . மிக சொற்ப அளவில் உள்ள ஒரு குழுவினர் 90% அதிகமான வேலை வாய்ப்புகளை பெறுவது ஆன்மீக ரீதியாய் கூட சாத்தியமில்லாதது .
    பிராமணர்கள் கலவி கற்றே அப்பதவிகளை அடைந்தார்கள் என்றாலும்கூட , மற்ற சாதியினர் அக்கல்வியை அடைய விடாது
    மற்ற சாதியினர் கேட்டால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றும் உரிமையை கடவுளிடம் பெற்றவர்கள் .....
    எனவே நூற்றாண்டுகளை மூடர்களாய் கடந்த சமூகத்தில் எழுச்சி உண்டாக்க எழுந்த சிந்தனை வடிவம் தான் .. திராவிட இயக்கங்கள் .(to be contd...)

    ReplyDelete
  6. ராம்பிரசாத் ......

    ஆர்ய - திராவிடம் கருத்தாக்கமே பொய் ,நாங்களும் தமிழர்கள் தான் என்று கூறுவீர்களேயானால் உங்கள் பின்னூட்டம் ஆங்கிலத்தில் வந்திருக்காது. இது தான் பார்ப்பனீயம் .

    பார்பனீயம் பிராமண சமூகத்தைத் தாண்டி பரவலாய் படித்த படித்ததனால் ஓர் நல்ல நிலைமைக்கு வந்த பலருக்கும் இப்போது இந்த நோய் பீடித்துள்ளது.

    ReplyDelete