Saturday, March 31, 2012

மின்சாரம்

* ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் மின்வெட்டு அதிகமானது. மின்சார விலை நாளை முதல் அதிகரிக்கிறது.

* ஜெயலலிதாவுக்கு நான் வக்காலத்து வாங்கவேண்டியதில்லை. அவருடைய நடவடிக்கைகள் பொதுவாக எனக்குப் பிடிக்காது. ஆனால் இந்த மின்சார விஷயத்தில் அவர் செய்ததை நான் முழுதும் ஆதரிக்கிறேன்.

* கடந்த திமுக ஆட்சியின்போதும், இப்போது இருப்பதைப்போல மின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் அப்போது வெளியிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விற்கப்பட்ட விலையோ குறைவு. விளைவு, மின் வாரியத்துக்குக் கடுமையான  நஷ்டம்.

* ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் அதிக விலைக்கு வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவது நிறுத்தப்பட்டது. அதன் விளைவுதான் அதிகரித்த மின் வெட்டு.

* மின் வாரியம் ஒரு யூனிட்டுக்குக் கொடுக்கும் சராசரி விலை எவ்வளவு என்பதைக் கணித்து, அதனை அடிப்படையாக வைத்து விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதிலும்கூட அனைத்து வீடுகளுக்கும் மானியம் கொடுக்கப்படுகிறது.

* கொள்முதல் விலை யூனிட்டுக்கு சுமார் 5.75 ரூபாயாம். ஆனால் முதல் 200 யூனிட்டுக்கு ரூ. 3, அடுத்த 300 யூனிட்டுக்கு ரூ. 4 என்று ஒவ்வொரு வீட்டுக்கும் மானியம் கொடுக்கப்படுகிறது. இதற்குமேல் பயன்படுத்துபவர்களுக்கும், எந்த லாபமும் இன்றி, அடக்க விலைக்கேதான் விற்கிறார்கள். இதில் எப்படிக் குறை காண முடியும்?

* சில பன்னாட்டு நிறுவனத் தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட் ரூ. 2.50 அல்லது ரூ. 3.00 (அல்லது இப்படிப்பட்ட குறைவான அளவில்) என்று தடையில்லாத மின்சாரம் தருவதாக தமிழக அரசு ஒப்பந்தம் போட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இது எனக்குப் பிரச்னையாகத் தெரியவில்லை. இதுபோன்ற ஒப்பந்தம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு என்றுதான் இருக்கும். அதன்பின், சந்தை விலைக்கு விற்பார்கள். இப்படியான மானியம் கொடுத்தால்தான் அந்த நிறுவனம் தமிழகத்தில் தன் ஆலையை நிறுவும். ஆலை வந்தால்தான், வேலை வாய்ப்புகள் மட்டுமின்றி வரி வருமானமும் கிடைக்கும். அந்தக் காரணத்துக்காக குறைந்த விலை மின்சாரத்தை இந்நிறுவனங்களுக்கு அரசு தருவதை நான் ஆதரிக்கிறேன்.

* மின்வெட்டைத் தடுக்க, மிக வேகமாக அடுத்த 10,000 மெகாவாட் அளவுக்கான மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஆலைகளை நிறுவுவதைத் தவிர வேறு வழியே இல்லை. மேலும் மின்சாரத்தை அதிகமாக உற்பத்தி செய்யும்போது, அதன் கொள்முதல் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் யுடிலிடி (நீர், மின்சாரம் போன்றவை) விலைகளைப் பொருத்தவரை அவை கீழ்நோக்கிப் போனதாகச் சரித்திரம் இல்லை. வேகமாக மேல்நோக்கிப் போகாமல் இருந்தால் போதும்.

* பணவீக்கம் என்பதையும் மனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். பெட்ரோல் விலை ஏறுகிறது. கரியின் விலை ஏறுகிறது. ஆனால் மின்சாரம் மட்டும் ஆண்டாண்டாக அதே விலைக்கே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமில்லை.

11 comments:

  1. ஏப்ரல் 1க்கான பதிவை ஒரு நாள் முன்னதாகவே இட்டு விட்டீர்களே.

    ReplyDelete
  2. சென்னையில் மின்வெட்டு 2 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டபோது, பிற மாவட்டங்களில் இனி 4 மணி நேரமாகக் குறைக்கப்படும், இரவில் மின்வெட்டு இருக்காது, முன்ன்றிவிப்பின்றி மின்தடை செய்வது நிறுத்தப்படும் என்றார்கள். இவை எதுவும் கடைப்பிடிக்கப்படவில்லை. மதுரையில் காலை 6 மணிக்கும் இரவு 12 மணிக்கும் நடுவில் எட்டேகால் மணிநேர மின்வெட்டு உள்ளது. தவிர 12க்குமேல் நள்ளிரவிலும் பலநாட்கள் பலமுறை பின்சாரம் நிறுத்தப்படுகிறது. இதற்குக் கணக்கு எதுவும் கிடையாது.

    முதலில் சென்னைக்கு ஒரு நீதி, மற்ற மாவட்டங்களுக்கு ஒரு நீதி என்று ஏன் இருக்க வேண்டும்? தமிழ்நாடு முழுவதும் சம்மாக மின்வெட்டு அமல்செய்யப்பட வேண்டும். சென்னைக்கு 2 மணிநேரம், மதுரைக்கு 8.15 மணிநேரம் என்பது என்ன நியாயம்?

    சரவணன்

    ReplyDelete
  3. "கடந்த திமுக ஆட்சியின்போதும், இப்போது இருப்பதைப்போல மின் பற்றாக்குறை இருந்தது. ஆனால் அப்போது வெளியிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டது. மக்களுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விற்கப்பட்ட விலையோ குறைவு"


    தேர்தல் நெருங்கிகொண்டிருந்ததே இதற்க்கு காரணம்.
    இவுங்க எப்பவுமே இப்படிதான், கசானா காலி பண்ணுவாங்க

    ReplyDelete
  4. நமது அரசாங்கங்களின் முனைப்பு எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவில் மின்வழங்கு நிறுவனங்களை லாபகரமானவையாக மாற்றி தனியார்மயமாக்குவதே. எல்லா நடவடிக்கைகளும் இத்திசையில் அமைந்தவையே. உற்பத்தி, கடத்துகை, வழங்கல் ஆகியவற்றுக்குத் தனித்தனி நிறுவனங்களாக வாரியத்தைப் பிரிப்பதில் காட்டிய சுணக்கம், தொடர்ந்து விவசாயத்திற்கு இலவச மின்சாரம் போன்றவற்றினால் தமிழகம் ஒருவிதத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதியுதவி பெறுவதில் தண்டிக்கப்படுகிறது. நடுவண் அரசின் பொருளாதாரக் கொள்கைகளுடன் இணக்கமற்ற போக்கைக் கடைப்பிடித்தால் இதுதான் நிகழும் என்று எச்சரிப்பதுபோல. பாகிஸ்தானுக்கு 5000 மெவா வழங்கும் திட்டம் உண்டு, தமிழகத்திற்கு அவ்வாறு வழங்கும் திட்டம் இல்லை.

    வெளி மாநிலங்களில் இருந்து மின்சாரம் வாங்காததற்கு நிதிநிலை காரணமா, கூடங்குளம் காரணமா என்பது ஆள்பவர்களுக்கே வெளிச்சம்.

    பெருநிறுவனங்களுக்கும், பெருநகரங்களுக்கும் தடையில்லா மின்சாரம். சிறுதொழில்களுக்கும், பிறருக்கும் பிச்சைபோல எப்போதாவது என்றால் நீங்கள் மட்டும் மனிதர்களோ என்று கேட்கவே செய்வோம்.

    பெரிய அளவிலான மின் உற்பத்தித் திட்டங்களே மின்வெட்டைப் போக்க ஒரே வழி என்கிற வாதத்தை மின்கடத்துகை முழுக்கத் தனியார்மயமாகி, Smart Grid போன்றவை முழுமையான அளவில் லாபம் ஈட்டத்தகுந்த துறையாக வளர்ந்து நிற்கப் போகும் அண்மை நாட்களில் நீங்களே மாற்றிக்கொள்ளப்போகிறீர்கள்.

    மற்றபடி நீருக்கும் இதுதான் நிகழும் என்றால் நாம் வாழும் காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று வேண்டிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

    ReplyDelete
  5. i do agree....MGR introduce seytha oru vilakku payanpaduththum ezhai makkalukku mattum vilakku aliththaal paaraattalaam.

    ReplyDelete
  6. தாங்கள் கூறிய கருத்துகளை நான் பொதுவில் ஆதரிக்கிறேன். எந்த ஓர் அரசாங்கமும் எல்லா விஷயங்களிலும் மக்களிட்ம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்துக் கொள்ளலாகாது. மின் கட்டண உயர்வை மேலும் மேலும் ஒத்திவைத்ததன் விளைவு? இன்று மின் கட்டணம் ஒரேயடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
    மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து கொண்டு வருகிறது.இது வரை வசதியற்ற நிலையில் இருந்த பல லட்சம் குடும்பங்கள் மின் விசிறி, கிரைண்டர், மிக்சி,பிரிட்ஜ் போன்றவற்றை வாங்க முற்பட்டுள்ளனர். அவர்களின் ஆசை நியாயமானது. பாமர மக்கள் அனைவருக்கும் இவ்வித அடிப்படை வ்சதி இருக்க வேண்டும். அதுவே சுபிட்சத்தின் அடையாளம். ஆனால் துரதிருஷ்டவ்சமாக மொத்த மின் உற்பத்தி அளவு அத்ற்கேற்ற வகையில் உயர்த்தப்படவில்லை.இதன் விளைவு வரலாறு காணாத மின்வெட்டு.
    அதிகக் காசு ஆனாலும் பரவாயில்லை.எப்போதும் எல்லோருக்கும் மின்சாரத்தைக் கொடு என்பது தான் வருகிற நாட்களில் எழுகின்ற கோஷமாக இருக்கும்.
    சுமார் 30 அல்லது 40 ஆண்டுகளுக்கு முன்னர் “சோஷலிசம்” நிலவிய காலத்தில் தனியார் நிறுவனங்கள் மின் உற்பத்தியில் ஈடுபட அனுமதிக்கப்படவில்லை.பின்னர் சோஷலிசம் கைவிடப்பட்டது. ஆனால் தக்க நேரத்தில் கைவிடப்படவில்லை.அதே நேரத்தில் அரசின் கீழ் செயல்படும் மானில மின்வாரியங்களின் நிர்வாகம் கீழ் நோக்கிச் சென்றது.இதன் விளைவுதான் மின் வெட்டு, மின் கட்டண உயர்வு. நிர்வாகக் கோளாறுகளுக்கு அரசின் தலையீடு, தவறான கொள்கை ஆகியவை காரணம்.இந்தியாவில் அனேகமாக எல்லா மானிலங்களிலும் மின் வாரியங்கள் இவ்வித நிலையில் தான் உள்ளன.அனைத்துமே கடன் சுமையில் அழுந்திக் கிடக்கின்றன. நில்க்கரி அளிப்பவர்களுக்கு பாக்கி தர முடியவில்லை. தனியார் நடத்தும் காற்றாலைகளிடமிருந்து வாங்கிய மின்சாரத்துக்கு பெரும் பண பாக்கி. இது தான் நிலைமை.
    கட்டண உய்ர்வுக்குப் பிறகாவது தமிழகத்தில் மின்சார வாரியம் சீரமைக்கப்பட்டு முடுக்கி விடப்படுமானால் நல்லது.

    ReplyDelete
  7. கஜானாவைக் காலி செய்து விட்டு எதிர்க்கட்சி வரிசையில் உட்கார்ந்ததும் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிப்பது கருணாநிதிக்கு ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதாவிடம் 1000 குறைகள் இருந்தாலும் யாரும் மறுக்க முடியாத விஷயம் தேவையான நேரங்களில் அவர் காட்டும் உறுதியான அணுகுமுறை. கருணாநிதியின் வழவழா கொழகொழா வெண்ணைத்தனம் அவரிடம் எப்போதுமே கிடையாது.
    அவர் தம் பாணியில் கீழ்க்கண்ட நடவடிக்கைகளையும் எடுத்தால் நல்லது:
    மின்வாரியத்துக்கு இருக்கும் நிலுவைகளைக் கறாராக வசூல் செய்வது.
    புற நகர்களில் சில இடங்களில் வீடுகளுக்குக் கார்டுகளே இல்லை. சில இடங்களில் கார்டு இருந்தும் முறையாக அளவீடு நடப்பதில்லை. மீட்டர் ரிப்பேராகி மாதக் கணக்கில் மினிமம் கட்டணம் வசூலிப்பதும் நடைமுறையில் உள்ளது. முறையான அளவீடு மட்டும் கண்டிப்பான வசூலால் மின்வாரியத்தின் நிதி நிலைமை கண்டிப்பாகப் பெருமளவு சீரடையும்.
    அடுத்தது நீண்டகால நடவடிக்கையாக தனியார்மயமாக்குதல். தனியார் மயமாக்கினால் கட்டணம் உயர்ந்தாலும் தொழிற்சாலைகள், வசதி மிக்கவர்கள் அதற்கு மாறத் தயாராக இருப்பார்கள். இலவசம் என்ற பேச்சே இருக்காது. மின் திருட்டு, வசூல் குளறுபடிகள் பழங்கதையாகி விடும்.
    முழுமையாகத் தனியார் மயமாக்க வேண்டியது கூட இல்லை. அரசு மின்சாரத்துக்குக் கூடுதலாக அவர்களையும் போட்டியில் இயக்கலாம். தனியார்களின் போட்டி வந்தாலே அரசு நிறுவனத்துக்கும் அதன் ஊழியர்களுக்கும் கொஞ்சமாவது பயம் வரும். (அரசின் தொலைபேசித் துறை தனியார் நிறுவனங்களின் வருகைக்குப் பின் எவ்வளவு சுறுசுறுப்பாகி விட்டது?)
    (அப்புறம் கூடங்குளம் வேறு வந்தே விட்டதால் இனிமேல் வானத்திலிருந்து மின்சாரம் கொட்டப் போகிறதே!)
    அப்புறம், திரு பத்ரி அவகளுக்கு ஒரு கேள்வி, மின்சாரம் பற்றி இவ்வளவு எழுதும் நீங்கள் ஏழை மற்றும் கீழ் மத்தியதர மக்களை நேரடியாக பாதிக்கும் உணவு வழங்கல் துறையில் இருக்கும் குறைகள், ரேஷன் கார்ட் குளறுபடிகள், அதில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றி எழுதலாமே?

    ReplyDelete
  8. தமிழக மின் கட்டண உயர்வு குறித்த எனது பார்வையை அறிய பின்வரும் பிணையை இணைக்கிறேன். அதில், முந்தைய மின்விலையையும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண விபரம் குறித்த தகவல்களையும், மற்ற மாநிலங்களுடைய மின் விலை குறித்த பார்வையை பதிவு செய்துள்ளேன்.
    http://lakshmanaperumal.com/2012/04/02/%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3-%e0%ae%89%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81/
    கடந்த ஒன்பது ஆண்டுகளாக மின் கட்டணத்தில் எந்த விலை ஏற்றமும் இல்லை என்பதை அறிந்துகொள்ளுங்கள். பெட்ரோல் டீசல் விலை உயர்வு எத்தனை மாதங்களில், விலை உயர்வைக் கண்டிருக்கிறது என்பதை நாடறியும். சிந்தித்துப் பாருங்கள்!.

    ReplyDelete
  9. கஜானா காலி என்பதெல்லாம் சும்மா புருடா!ஜெயா கண்டுபிடித்த ஒன்று.அதன்படி பார்த்தால்..
    ஜூன் 1991,2001,2011 துவக்கங்களில் கஜானா காலியாகவும்,
    மே 1996,2006 முடிவுகளில் அது நிரம்பியும் இருந்திருக்க வேண்டும்..நிர்வாகம் என்று வரும்போது இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான்.என்ன, ஒருவர் கர்வி..இன்னொருவர் கபடதாரி!

    ReplyDelete
  10. PONGAIYA NEENGALUM UNGA CORRENTUM,.......................................

    ReplyDelete