Saturday, March 03, 2012

Fiscal Deficit

இந்த ஆண்டு இந்திய அரசு எதிர்பார்த்ததைவிட அதிகமான நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) காண்பிக்கும் என்று தெரிகிறது. பொறுப்பே இல்லாமல் செலவழிப்பது ஒரு பக்கம் (MGNREGA, UIDAI), வருமானத்தை அதிகரிப்பதற்கான அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்காதது மறு பக்கம் என்று திக்குத் தெரியாமல் விழிக்கிறது அரசு.

வருமானத்தை அதிகரிக்க அரசு எடுத்திருக்கும் முடிவுகள்:

1. அரசு நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்றல் (disinvestment). ஓ.என்.ஜி.சி பங்குகளை விற்க முயன்று, சரியான விலை இல்லாத காரணத்தால் வாங்க யாரும் இன்றி, கடைசியாக பொதுத்துறை நிறுவனங்களை வற்புறுத்தி அதே பங்குகளை வாங்கவைத்திருக்கிறது அரசு. ஓ.என்.ஜி.சி பங்குகளை அதிகம் வாங்கியிருப்பது எல்.ஐ.சிதான். நானும் நீங்களும் செலுத்தும் இன்ஷூரன்ஸ் பிரீமியம் தொகை நாசம் ஆகாமல் இருக்க வேண்டிக்கொள்வோம்.

2. பொதுத்துறை நிறுவனங்களை அதிக டிவிடெண்ட் கொடுக்கச் சொல்லுதல்.

3. மறைமுக வரிகளை (ஆயத்தீர்வை, சுங்கத் தீர்வை, விற்பனை வரிகள்) அதிகரிப்பது.

ட்விட்டர் விவாதம் ஒன்றில் வருமான வரி முற்றிலும் நீக்கப்பட்டு, எல்லாமே மறைமுக வரிகளாக (விற்பனை வரி/மதிப்புக் கூட்டு வரி) மாற்றப்படவேண்டும் என்பதுபோல மருத்துவர் புரூனோ சொன்னார். இது எனக்கு ஏற்புடையதில்லை. நேரடி வருமான வரி மிக முக்கியமான ஒன்று. மறைமுக வரிகள் அனைத்துமே நுகர்வைப் பெருமளவு குறைப்பவை. எனவே பொருளாதாரத்தைப் பாதிப்பவை. ஒரு பொருள் 2 ரூபாய் என்றால் அதனை வரிகளால் 6 ரூபாயாக ஆக்குவது சந்தையைப் பாதிக்கும். வேலை வாய்ப்பைப் பாதிக்கும். பற்றாக்குறை உள்ள மூலப்பொருள்களுக்கு மட்டும்தான் இப்படிச் செய்யவேண்டும். உதாரணமாக பெட்ரோல்மீது வேறு வழியின்றி கடுமையான வரிகள் விதிப்பதை நான் ஆதரிக்கிறேன். ஆனால் பிளாஸ்டிக்மீதோ இரும்பின்மீதோ இன்றைக்கு அப்படிச் செய்யவேண்டிய அவசியம் இல்லை.

தனிநபர் வருமான வரி என்பது தெளிவான ஒன்று. ஒரு குறிப்பிட்ட வருமானத்துக்குமேல் உள்ளவர்களால் வரி கட்டியபின் மீதம் உள்ள வருமானத்தில் தம் வாழ்க்கையைப் பராமரிக்க முடியும். அதி ஏழைகளால் இதனைச் செய்யமுடியாது. அதே நேரம் அதிக வருமானம் உள்ளோருக்கு மிக அதிகமான வரிகளை விதித்தால் பொருளாதார முனைப்பைக் குறைப்பதாகிவிடும். அதே நேரம், இந்தியாவில் வருமான வரி கட்டுவோரின் சதவிகிதம் மிக மிகக் குறைவு. விவசாயிகள், தனியாகத் தொழில் செய்வோர் (மருத்துவர்கள், வழக்கறிஞர்கள்...), சிறு முதலாளிகள் என்று பலரும் எப்படியாவது வருமான வரியை டாட்ஜ் செய்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இருக்கும் வருமான வரி நியாயமானது என்பதுதான் என் கருத்து. கடந்த 10 ஆண்டுகளில் தனி நபர் செலுத்தவேண்டிய வருமான வரி என்பது குறைந்துகொண்டேதான் வந்துள்ளது என்பதை என்னை வைத்தே உதாரணமாகச் சொல்லமுடியும். ஒரு கட்டத்தில் வருமானத்தில் 25%-ஐ வரியாகக் கட்டிய நான், இன்று சுமார் 15%-ஐத்தான் கட்டுகிறேன். இதில் மேற்கொண்டு சலுகை தரவேண்டிய அவசியமே இல்லை.

மருத்துவர்கள், வக்கீல்கள், சிறு முதலாளிகள், சுயதொழில் செய்வோர் என அனைவரையும் வரி கட்டவேண்டுமோ இல்லையோ, கட்டாயம் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தாவது ஆகவேண்டும் என்று அரசு சட்டம் கொண்டுவரவேண்டும். அதேபோல விவசாய வருமானத்துக்கும் வரி விதிக்கவேண்டும். விவசாயமும் பிற தொழில்களைப் போலத்தான். இங்கும் செலவுகளைக் கழித்துக்கொண்டு லாபத்தில்தான் வரி கேட்கிறோம். அதுவும் standard deductions எல்லாவற்றையும் கழித்துக்கொண்டு, குறிப்பிட்ட அளவைத் தாண்டினால்தான் வரி என்று வரப்போகிறது.

அதே நேரம், MGNREGA போன்ற பண விரயத்தைக் கட்டாயம் தவிர்க்கவேண்டும். நிதி ஆதாரம் ஏதும் இல்லாமல் அனைவருக்கும் உணவு போன்ற திட்டங்களைவேறு தீட்ட ஆரம்பித்துவிட்டார்கள். இவற்றையெல்லாம் மாநில அரசுகளிடம் விட்டுவிடவேண்டும். அதற்கு ஏற்றாற்போல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு தரும் மானியத்தை அதிகரித்துவிட்டுப் போங்கள். இப்படி மத்திய அரசு தேவையின்றி மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மாநிலங்களின் வேலைகளில் தலையிடுவது ஆபத்தானது. RSBY போன்ற சுகாதாரத் திட்டத்திலும் மத்திய அரசு நேரடியாக ஈடுபடக் கூடாது. இதைச் செயல்படுத்துவது முழுவதுமே மாநில அரசுகளின் கையில் இருக்கவேண்டும்.

சோனியா காந்தி, தனக்கென தனி ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு அரசுக்கு வெளியில் அமர்ந்துகொண்டு பைத்தியக்காரத்தனமான திட்டங்களைத் தீட்டிப் பணத்தை வீணடிக்கிறார். இந்தப் பணத்தை எப்பாடு பட்டாவது திரட்டிக் கொண்டுவரவேண்டியது நிதியமைச்சரின் வேலையாகிறது. இதனால் தேவையின்றி ஃபிஸ்கல் டிஃபிசிட் அதிகமாகிறது.

இந்த ஒரு காரணத்துக்காகவே காங்கிரஸ் அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கவேண்டியது அவசியமாகிறது.

அடுத்ததாக திட்டக் குழு என்ற அமைப்பைக் கலைக்கவேண்டியதும் அவசியமாகிறது. மத்திய திட்டக் குழு என்ற ஒன்று இருப்பதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில திட்டக் குழு என்ற ஒன்று உள்ளது. இவர்கள் தனியாகப் பணம் ஒதுக்கிக்கொண்டு, தனியாகத் திட்டம் தீட்டி, planned, unplanned என்று இரண்டு கணக்குகளை வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த அமைப்பால் இன்று என்ன லாபம் உள்ளது என்று எனக்குப் புரியவில்லை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய நிதியிலிருந்து இவ்வளவு சதவிகிதம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும். அதன் அடிப்படையில் பணம் ஒவ்வோர் ஆண்டும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. அது தவிர, திட்டக் குழு முன் ஒவ்வொரு மாநில முதல்வரும் நின்று கையேந்த, சிரித்த முகத்துடன் மாண்டேக் சிங் அலுவாலியா, ‘வைத்துக்கொள்ளுங்கள் இந்தப் பணத்தை!’ என்று ஒரு அமவுண்டைத் தருகிறார். இது எதற்காக?

மாறாக, திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தரப்படவேண்டிய பணத்தை recalibrate செய்துவிடுவோம். ஆண்டாண்டு இது தடையின்றி நடக்கும். இது மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும். இது தவிர, ஒவ்வொரு மாநிலமும் தனக்கு வேண்டிய வரிகளை மதிப்புக் கூட்டு வரியாக விதித்துக்கொள்ளலாம்.

தம் வருவாயைக் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் ஒழுங்காக நிர்வாகம் செய்யவேண்டும். அப்போதுதான் உண்மையான federal அமைப்பை நாம் அடைவோம்.

23 comments:

  1. //சோனியா காந்தி, தனக்கென தனி ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு அரசுக்கு வெளியில் அமர்ந்துகொண்டு பைத்தியக்காரத்தனமான திட்டங்களைத் தீட்டிப் பணத்தை வீணடிக்கிறார். இந்தப் பணத்தை எப்பாடு பட்டாவது திரட்டிக் கொண்டுவரவேண்டியது நிதியமைச்சரின் வேலையாகிறது. இதனால் தேவையின்றி ஃபிஸ்கல் டிஃபிசிட் அதிகமாகிறது.

    இந்த ஒரு காரணத்துக்காகவே காங்கிரஸ் அரசை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தோற்கடிக்கவேண்டியது அவசியமாகிறது.//

    Well Said..Extra-constitutional powers like NAC are wrecking the economy and transgressing the powers of state like NREGA and Food Security Scheme.

    ReplyDelete
  2. பத்ரி

    இன்று மத்திய அரசு சில வரிகளையும்
    மாநில அரசு சில வரிகளையும் பிரிக்கிறது

    இதில்

    மத்திய அரசிற்கு செலுத்தப்படும் வரிகளில் சில வற்றை மாநில அரசிற்கு செலுத்துமாறு மாற்ற வேண்டும்

    அதாவது

    நடுவண் அரசு மாநிலங்களுக்கு நிதி தருவது என்று இல்லாமல்
    மாநிலங்கள் நடுவண் அரசிற்கு வரி கட்ட வேண்டும் என்று இருக்க வேண்டும்

    --

    பாதுகாப்பு, நிதி, நீதி, வெளியுறவு, சுங்கவரி, போன்ற துறைகளை மட்டும் நடுவண் அரசு வைத்துக்கொள்ள வேண்டும்

    கல்வி, சுகாதாரம் போன்றவை முழுவதும் மாநில அரசுகளின் கையில் இருக்க வேண்டும்

    ReplyDelete
  3. //மாறாக, திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தரப்படவேண்டிய பணத்தை recalibrate செய்துவிடுவோம். ஆண்டாண்டு இது தடையின்றி நடக்கும். இது மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும். இது தவிர, ஒவ்வொரு மாநிலமும் தனக்கு வேண்டிய வரிகளை மதிப்புக் கூட்டு வரியாக விதித்துக்கொள்ளலாம்.//

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  4. 1. UIDAI வீன் என்பது NPR திட்டத்தினாலா அல்லது அடிப்படையில் தவறு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    2. //திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தரப்படவேண்டிய பணத்தை recalibrate செய்துவிடுவோம்// - பணத்தை பிரித்து கொடுப்பது தவிர மற்ற வேலைகளை யார் செய்வார்கள்? இதை செய்வதற்கு ஒரு குழு தேவை இல்லையா?

    3. Subsidies ஐ விட்டுவிட்டீர்களே?

    ReplyDelete
    Replies
    1. 1. UID என்பது இந்நேரத்தில் வீணானது என்று நினைக்கிறேன். அதற்காகச் செலவிடப்படும் பல ஆயிரம் கோடிகளால் உபயோகம் இருக்காதோ என்று அஞ்சுகிறேன். அந்தப் பணம் கொண்டு பல ஆயிரம் பள்ளிகளை நடத்தலாம். பல லட்சம் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித் தரலாம்.

      2. மாநில அரசு செய்யும். மாநில அரசின் அதிகாரிகள் செய்வார்கள்.

      3. பொதுவாக சப்சிடீஸ் மீது எனக்கு அவர்ஷன் இருந்தாலும், சில மானியங்கள் தேவை. ஆனால் MGNREGA போன்ற அடிமுட்டாள்தனங்கள் நீக்கப்படவேண்டும். மாறாக ஏழை மக்களுக்கு டிரெக்ட் கேஷ் டிரான்ஸ்ஃபர் தரலாம். அதற்கு UID வேண்டாமா என்ற கேள்வியை ஒருவர் முன்வைக்கலாம். தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

      Delete
    2. mnrega மீது இருக்கும் கோவம் புரியவில்லை.பல ஆயிரம் கோடியில் நிலாவிற்கு ஆள் அனுப்புவது தேவையா(அமெரிக்கா 40 ஆண்டுகளுக்கு முன் அனுப்பி விட்டது).வெளிநாட்டில் இருந்து எளிதில் வாங்க கூடிய ஆயுதங்கள்,விண்வெளி துறை சம்பந்தப்பட்ட பொருட்கள்,சாட்டிலைடே அனுப்பும் முயறசிகளில் போகும் பல ஆயிரம் கோடிகள் கண்ணுக்கு தெரியவில்லையா.இப்போது வாங்கும் ராபாலே விமானங்களின் செலவு எவ்வளவு
      பல கோடி மக்களுக்கு அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க வைத்தது,கிராமங்களில் இருந்து மக்கள் நகரத்தை நோக்கி /வேறு மாநிலங்களை நோக்கி படையெடுப்பதை குறைப்பதில் MNREGA பெரிய வகையில் உதவி வருகிறது .அதை ஒழுங்காக நிறைவேற்றினால் பல நல்ல மாற்றங்களை ஏற்படுத்த கூடிய (சத்துணவை போல)திட்டம் அது

      Delete
  5. Finally ONGC shares,bought by LIC and SBI..So hereafter,impact in ONGC will affect SBI and LIC,,trusted by so many of us..More fear!!!

    ReplyDelete
  6. பத்ரி,

    வணக்கம்,

    //. விவசாயமும் பிற தொழில்களைப் போலத்தான். இங்கும் செலவுகளைக் கழித்துக்கொண்டு லாபத்தில்தான் வரி கேட்கிறோம். அதுவும் standard deductions எல்லாவற்றையும் கழித்துக்கொண்டு, குறிப்பிட்ட அளவைத் தாண்டினால்தான் வரி என்று வரப்போகிறது. //

    என்ன செய்ய இந்தியாவில் விவசாயிக்கு இணையமும் ,பிலாக்கும் எட்டாக்கனி அவன் எங்கே வந்து கருத்துசொல்லப்போறான் :-))

    விவசாயி என்றால் யாரை சொல்கிறீர்கள் பெரும் நிலச்சுவான் தாரர்களைய இல்லை ஒரு ஏக்கர் அரை முதல் 5 ஏக்கர் வரை வைத்திருக்கும் சிறுவிவசாயிகளையா?

    10 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கூட உற்பத்திக்கு செலவிட்ட தொகையை விளைச்சலை விற்பதன் மூலம் எடுக்க முடியாது.அது தான் இன்றைய இந்தியாவில் விவசாயத்தின் நிலை.

    விவசாய விலைப்பொருளுக்கான விலை நிர்ணயிக்கும் உரிமையை விவசாயிக்கு கொடுக்காமல் வரி விதிக்க மட்டும் ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்காங்க நம்ம நாட்டில் :-))

    நிகர நட்டம் வரும் ஒரு தொழிலில் எதை கழித்துக்கொண்டு வரி விதிப்பீர்க்களோ தெரியவில்லை.

    //சோனியா காந்தி, தனக்கென தனி ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு அரசுக்கு வெளியில் அமர்ந்துகொண்டு பைத்தியக்காரத்தனமான திட்டங்களைத் தீட்டிப் பணத்தை வீணடிக்கிறார். இந்தப் பணத்தை எப்பாடு பட்டாவது திரட்டிக் கொண்டுவரவேண்டியது நிதியமைச்சரின் வேலையாகிறது. இதனால் தேவையின்றி ஃபிஸ்கல் டிஃபிசிட் அதிகமாகிறது.//

    நீங்கள் சொல்வது போல நிர்வாகத்திறன் அற்ற அரசியல்வாதிகளின் செயல்ப்பாடுகளே நிதி நெருக்கடிக்கு காரணம், ஆனால் இங்கே சுழற்சி முறையில் அவர்களே மீண்டும் வந்து விடுகிறார்கள்.ஏன் எனில் மாற்று அரசியல் முகாம் அதை விட மோசமாக இருப்பதே.

    // திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் தரப்படவேண்டிய பணத்தை recalibrate செய்துவிடுவோம். ஆண்டாண்டு இது தடையின்றி நடக்கும். இது மக்கள் தொகை அடிப்படையில் இருக்கும்//

    மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்க மாநிலங்கள் ஒத்துக்கொள்ளுமா?
    உதாரணமாக பீகார், தமிழகம் என்ற இரண்டு மாநிலங்களைப்பார்ப்போம்,
    பீகார்

    மக்கள் தொகையில் 3 ஆம் இடம்(-10.3 கோடி)

    ஜிடி.பி பங்களிப்பில் 14 ஆம் இடம்

    தமிழ் நாடு ,

    மக்கள் தொகையில்-7 ஆம் இடம் (7.2 கோடி)

    ஜிடிபியில் 4 ஆம் இடம் -

    குறைவாக ஜிடிபி பங்களிப்பு செய்யும் பீகார் அதிகம் மக்கள் தொகை இருப்பதால் கூடுதல் நிதியைப்பெறும்,அதே சமயத்தில் பீகாரவி விட அதிக ஜிடிபி பங்களிப்பு செய்தாலும் குறைவான நிதியை தமிழகம் பெறும்.

    எனவே கூடுதல் நிதி பெற மக்கள் தொகையை பெருக்க மாநிலங்கள் முயன்றால் என்னாவது?

    //இது தவிர, ஒவ்வொரு மாநிலமும் தனக்கு வேண்டிய வரிகளை மதிப்புக் கூட்டு வரியாக விதித்துக்கொள்ளலாம்.//

    ஹி..ஹி இப்பவும் மாநிலங்கள் தேவையான வாட் வரியை விதித்துக்கொண்டு தான் இருக்கின்றன, இந்தியாவில் அதிக வாட் வரி விதிக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று.

    //தம் வருவாயைக் கொண்டு ஒவ்வொரு மாநிலமும் ஒழுங்காக நிர்வாகம் செய்யவேண்டும். அப்போதுதான் உண்மையான federal அமைப்பை நாம் அடைவோம்.//

    நிதி மேலாண்மைக்கு மட்டும் இல்லை பொதுவாகவே மாநில அரசுகள் நல்லாட்சி வழங்கினால் மத்திய அரசின் உதவியே தேவை இருக்காது. அது எங்கே நடைப்பெறுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சி அதிகாரம் குறுநில மன்னர்கள் போன்ற குடும்ப அரசியல் கட்சிகளின் வசமே, எங்கே நிர்வாகத்தில் கவனம் செலுத்துகிறார்கள்.

    வாய்ப்பே இல்லாத ஒன்றை ,நீங்க சுலபமாக ஒழுங்காக நிர்வாகம் செய்தால் நல்ல அரசு அமையும்னு சொல்கிறீர்கள்,அப்படியானால் இத்தனைக்காலமாக இந்தியாவில், தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலே தெரியாமல் வளர்ந்தவரா நீங்கள் :-))

    ReplyDelete
    Replies
    1. விவசாயம் என்றவுடனே வரும் உணர்புபூர்வமான பதில்களைக் கொண்டு விவாதிப்பது கடினம். நஷ்டம் வந்தால் எந்தத் தொழிலிலுமே வரி கிடையாது. எனவே விவசாயத்தில் நஷ்டம் வந்தால் விவசாயி வரி கட்டவேண்டியதில்லை. குறைந்த லாபம் வந்தால் டிடக்‌ஷன்ஸ் எல்லாம் இருப்பதால் அப்போதும் வரி கட்டவேண்டியதில்லை. விவசாயத்தில் வரும் கணிசமான லாபத்தை லேத் பட்டறை செய்தால் வரும் கணிசமான லாபத்துடன் ஒப்பிட்டு அதற்கு மட்டும்தான் வரி கட்டச் சொல்கிறேன்.

      எல்லாத் தொழிலுக்குமான உள்ளீட்டுச் செலவுகளைக் கழித்துக்கொண்டுதான் லாபத்தைக் கணக்கிடுகிறோம். லாபம் வரும் எல்லாத் தொழிலும் வரி கட்டவேண்டும் என்கிறேன். இதில் சிறு விவசாயி என்ன, பெரு விவசாயி என்ன?

      ===

      அடுத்து மக்கள் தொகை அதிகம் இருந்தால் அந்த மாநிலத்துக்கு அதிக நிதி ஆதாரங்களைத் தரவேண்டுமா?

      ஆமாம்.

      இதனால் மக்கள் தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் சிறு மாநிலங்களைத் தண்டிப்பதாக ஆகாதா?

      உண்மைதான்.

      அப்படியானால் என்ன செய்யலாம்? எப்படி மக்களவைத் தொகுதிக் கணக்கை ‘ஃப்ரீஸ்’ செய்துள்ளோமோ, அதேபோல இந்த மாநிலத்துக்கு இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட டேட்டம் ஆண்டைக் கணக்கில் வைத்துக்கொண்டு ஃப்ரீஸ் செய்துவிடலாம். அந்தத் தொகையைவிட அதிக மக்கள் தொகையை ஒரு மாநிலம் உருவாக்குமேயானால் அதனால் அந்த மாநிலத்துக்கு நஷ்டம். குறைக்குமேயானால், அந்த மாநிலத்துக்கு லாபம்.

      அது தவிர ஒரு மாநிலத்துக்கு என்றே தனியான வருவாய் வகைகள் உள்ளன. சொத்து வரி, மதிப்புக் கூட்டு வரி ஆகியன அந்த மாநிலத்தின் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. மக்கள் தொகை கட்டுக்குள் இருந்து, நல்ல பொருளாதார வளர்ச்சி இருந்து, வருமானம் பரவலாக இருந்தால், அம்மாநிலத்தின் வருவாய் அதிகமாக இருக்கும். தமிழகத்தின் பெர் கேபிடா வருவாய் பிகாரின் பெர் கேபிடா வருவாயைவிட அதிகம். அதேபோல தமிழகத்தின் பெர் கேபிடா வருவாய், கேரளத்தினுடையதைவிட அதிகம். எனவே மக்கள் தொகை குறைவாக இருந்தால் மட்டும் போதாது. படிப்பறிவு அதிகமாக இருந்தால் மட்டும் போதாது. பொருளாதார ஆக்டிவிட்டியும் அதிகமாக இருக்கவேண்டும். அதனால்தான் தமிழகம் பிகாரைவிடவும் கேரளத்தைவிடவும் வருவாயைப் பொருத்தமட்டில் சிறப்பாக இருக்கிறது.

      ===

      அரசியல் கட்சிகள் பற்றிய நகைச்சுவையில் நான் கலந்துகொள்ள விரும்பவில்லை. நான் ஓர் ஆப்டிமிஸ்ட். தமிழகக் கட்சிகள் சிறப்பானவகையில் முன்சென்று இப்போதிருப்பதைவிட நல்லாட்சியை எதிர்காலத்தில் வழங்கும் என்று நம்புகிறேன்.

      Delete
    2. பத்ரி,

      வணக்கம்,

      //ஆனால் MGNREGA போன்ற அடிமுட்டாள்தனங்கள் நீக்கப்படவேண்டும். மாறாக ஏழை மக்களுக்கு டிரெக்ட் கேஷ் டிரான்ஸ்ஃபர் தரலாம்.//

      மக்கள் ஏழைகளாக இருந்தாலும் உழைக்க கூடியவர்கள் என்ற வகையில் வேலையளித்து பயன்ப்படுத்திக்கொள்ள அரசு நினைப்பது முட்டால் தனம் ,ஆனால் வீட்டில் உட்கார வைத்து காசு கொடுக்கலாம் என நீங்கள் சொல்வது அதி புத்திசாலித்தனமானது :-))

      நீங்கள் சொல்லலாம் வேலை உத்திரவாத திட்டத்தில் ஊழல் நடக்கிறது அது லட்சியத்தை அடையவில்லை என்ன்று, நீங்களே சொல்லிக்கொள்கிறீர்கள் ஆப்டிமிஸ்ட் என்று அப்படியானல் சிறப்பாக நிர்வாகம் செய்தால் அத்திட்டம் வெற்றியடையும் என நினைக்கலாமே :-))

      "welfare state" என்பதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன், உலகில் உள்ள அப்படிப்பட்ட அரசுகள் எல்லாம் மக்களுக்கு வேலை உத்திரவாதம் அளிக்கின்றன, அதற்காக நிதியும் ,திட்டங்களும் உண்டு பிரான்சில் எல்லாம் ரொம்ப காலமாக இருக்கு. கட்டாயம் அரசு வேலை தர வேண்டும், வேலை கிடைக்கும் வரை உதவி தொகை அளிக்கும்.

      இப்போது அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு வேலையின்மை அதிகரித்தால் இந்தியா போன்றே 100 நாள் வேலைத்திட்டத்தினை கொண்டு வந்துள்ளதாக செய்தி.

      கல்வி,மருத்துவம் எல்லாம் மாநில அரசுகளிடம் விட்டு வேண்டும் என்றும் சொல்கிறீர்கள், விடலாம் தான் ஆனால் எல்லா மாநிலங்களிலும் ஒரே தரம் ,நிலை இல்லையே எனவே மத்திய அரசு எங்கே எப்படி நிலை இருக்கு எனப்பார்த்து நிதியை ஒதுக்க வேண்டியது இருக்கே,

      இன்று வரையில் எந்த மாநிலத்தின் தலைமை மருத்துவ மனையும் எய்ம்ஸ் அளவுக்கு தரத்துடன் அமைக்கப்படவில்லையே, மேலும் மருத்துவ ஆராய்ச்சிகளையும் மாநில அரசு மருத்துவமனைகள் செய்வதில்லை.சில மாநில அரசுகள் பொது நல மருத்துவத்துக்கு கூட போதுமான நிதி ஒதுக்காமல் கூட இருக்கிறது.எனவே மத்திய அரசும் மருத்துவத்தில் பங்களிப்பு செய்ய வேண்டிய நிலை.

      கல்வியின் நிலையும் அவ்வாறே ,மாநிலத்துக்கு மாநிலம் கல்வியின் தரம், அதற்கான வசதிகள் மாறுபடுகிறது. எல்லா மாநிலத்தையும் ஒரே சிலபஸ்,ஒரே தரம் என ஒரு பெடெரல் அரசில் கட்டாயப்படுத்த முடியாது என்பதால் இந்தியா முழுவதும் செல்லத்தக்க ஒரே தரம், நிலையில் ஒரு கல்வி கொள்கையை மத்திய அரசால் மட்டுமே செயல்ப்படுத்த முடியும்.

      சர்வ சிக்‌ஷா அபியான் திட்டங்களை எல்லாம் ஏன் மத்திய அரசு செயல்ப்படுத்த வேண்டும் ,மாநில அரசுகள் எல்லா பகுதிகளுக்கும் உரிய கவனம் செலுத்தாததால் தானே.

      *****

      // அதேபோல இந்த மாநிலத்துக்கு இவ்வளவு என்று ஒரு குறிப்பிட்ட டேட்டம் ஆண்டைக் கணக்கில் வைத்துக்கொண்டு ஃப்ரீஸ் செய்துவிடலாம்.//

      உதாரணமாக 2011 ஆம் ஆண்டை குறியிட்டாக நிர்ணயித்து விட்டால் என்ன ஆகும் என பார்ப்போம், இத்தனைக்காலமாக உற்பத்தியில் முனைப்புடன் செயல்பட்ட தமிழக அரசுக்கு நட்டம், ஆனால் மக்கள் தொகை உற்பத்தியில் முனைப்புடன் இருந்த பிகாருக்கு லாபம் என ஆகிவிடும்.

      இப்பவும் பிகாருக்கு அவ்வப்போது சிறப்பு நிதி ஒதுக்கப்படும் போது பிற மாநிலங்கள் சொல்வது/பொ.நிபுணர்கள் சொல்வது என்னவெனில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கும் சிறப்பு நிதி கொடுக்கப்பட வேண்டும் அப்போது தான் முனைப்புடன் உற்பத்தி குறையாமல் இருக்க பாடுபடுவார்கள்,வளர்ச்சி நிலைக்கும் என்று சொல்வதுண்டு.

      வேலை வாய்ப்பு என்பது எல்லாம் ஒரு மாநிலத்துக்குள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல நினைத்துக்கொண்டு சொல்வது போல இருக்கு. தமிழ் நாட்டில் தொழில்,உற்பத்தி பெருகி வேலை வாய்ப்பு பெருகினால் மற்ற மாநிலத்தவர்களும் அதனைப்பயன்ப்படுத்திக்கொள்ளவே செய்கிறார்கள்.

      உ.ம் தமிழ் நாட்டில் நிறைய வெளிமாநிலத்தவர் வேலைக்கு வருவது நடக்கிறதே.

      மகாராஷ்ட்ராவிலும் வேலை தேடி நிறையப்பேர் செல்கிறார்கள்.

      எனவே மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்குவதை விட உற்பத்தி , வேலை வாய்ப்பு பெருக சாதகமான மாநிலங்களுக்கு நிதி கிடைத்தால் அதன் பயன் அனைவருக்குமே சென்று சேறும்.

      உற்பத்தியில் கவனம் செலுத்தாத , மக்கள் தொகை அதிகம் இருக்கும் மாநிலத்துக்கு அதிக நிதி கிடைத்தால் அதனை விரயமாக்குவார்களே தவிர , பயனுள்ள வகையில் செலவிட மாட்டார்கள்.

      --------
      விவசாயிகளின் நிலைப்பற்றி எனது சிலப்பதிவுகள்:

      1) விவசாயி படும் பாடு-1

      2)விவசாயி படும் பாடு-2

      3) ஒருங்கிணைந்த விவசாயம்

      Delete
    3. Atleast you should visit a nearbybvillage and see how this scheme is abused. I could notice people aged 90 and above sitting on the roadside ideally for few hours, pay 30 rupees to panchayat officials as bribe and pocketing the rest for 100 days thanks to the stupid schemes by Sonia and co.

      In my village, we don't get any labour for these 100 days even if we are willing to pay 300 rupees a day for 6 hours land work because these people get free money for 100 days doing nothing along with free rice. I can clearly see the nation going towards destruction and we have stopped doing farming once for all. KeeYes.

      Delete
  7. பொதுவாக மறைமுக வரிகள் நியாயமற்றவை - காரணம், அவை எழை, பணக்காரர் என்று எல்லோர் மீதும் ஒரே அளவில் இருப்பவை. ஆகவே அவை குறைவாக இருக்கவேண்டும். வருமான வரி என்பது அவரவர் வருமானத்தைப் பொருத்து இருப்பதால் நியாயமானது.

    சரவணன்

    ReplyDelete
  8. //அதேபோல விவசாய வருமானத்துக்கும் வரி விதிக்கவேண்டும். விவசாயமும் பிற தொழில்களைப் போலத்தான். இங்கும் செலவுகளைக் கழித்துக்கொண்டு லாபத்தில்தான் வரி கேட்கிறோம். அதுவும் standard deductions எல்லாவற்றையும் கழித்துக்கொண்டு, குறிப்பிட்ட அளவைத் தாண்டினால்தான் வரி என்று வரப்போகிறது//..sorry sir...AC roomla ukanthu 5 nimisam think panni eluthita ellam right nu aagi vidathu...nan oru veterinary doctor...daily 50 vivasaigalai meet panren...oruthar kooda nimmathia illa..eb,loan,kadumaiana men power shortage,iravu-pagal parkamal velai,.......innum evalavo ullathu...ada pala peruku tax na ennanu kooda theriathunga.. விவசாய விலைப்பொருளுக்கான விலை நிர்ணயிக்கும் உரிமையை விவசாயிக்கு கொடுக்காமல் வரி விதிக்க மட்டும் ஆலோசனை சொல்ல நிறைய பேர் இருக்காங்க நம்ம நாட்டில் :-))...ennaku tamil typing theriathu...sorry vavval sir..reliane,tata,ada wallmart koda விவசாய விலைப்பொருளுக்கான விலை நிர்ணயிக்கும் intha natula as soon as possible sothu panjam varunga...purailana mail pannunga vetparuthi@gmail.com...pesuvom...oru naal night 3 manikku enthirichu varrapuku thanni kaati parunga....vivasayam na ennanu therium....typing mudiyala...karuthu kandasamy ka kooda kalatha ooteathu romba siramam da samy.....

    ReplyDelete
    Replies
    1. யோவ் வெட்டிநரி வைத்தி,
      நீ பாக்குறது எல்லாம் subsistence farmer களை...தொழில் முறை விவசாயிகளைப் பார்த்துவிட்டு வரவும். அல்லது உன் தகுதிக்கும் திறமைக்கு இதுவே அதிகமோ என்னவோ...

      Delete
  9. //நிகர நட்டம் வரும் ஒரு தொழிலில் எதை கழித்துக்கொண்டு வரி விதிப்பீர்க்களோ தெரியவில்லை//valga vavval...

    ReplyDelete
  10. //விவசாயத்தில் வரும் கணிசமான லாபத்தை லேத் பட்டறை செய்தால் வரும் கணிசமான லாபத்துடன் ஒப்பிட்டு அதற்கு மட்டும்தான் வரி கட்டச் சொல்கிறேன்.//..லேத் பட்டறை illama uyir vala mudium...soru illama.....sssssabbba

    ReplyDelete
    Replies
    1. முட்டாள். விவசாயம் என்பது தொழில் தானே ? அல்லது அது என்ன கடவுளா ? மேடையில் ஏற்றி நித்தம் மூணு முறை குளிப்பாட்டி ஆரத்தி காட்ட ?

      Delete
  11. பத்ரி, வாடகைவீட்டில் குடியிருக்கிறீர்கள்தானே... புகைப்படத்துடன், முகவரி சான்றிதழ். ஐடி - யுடன் விவரங்களை அருகிலுள்ள காவல்நிலையத்தில் பதிவுசெய்துவிட்டீர்களா:-))) போலீஸ் கமிஷனரின் இந்த அபத்த உத்தரவு பற்றி எழுதுங்கள்!

    சரவணன்

    ReplyDelete
  12. Mr .Saravanan,

    House owner has to submit and not the tenant. Mattamana Govt and COP.
    Karvind

    ReplyDelete
  13. The center can allocate a portion of the central pool of taxes (IT, excise and other duties) collected in a particular state to that state. 75% of the total back to the state would be a good proportion. It would then automatically compel the states to enhance more tax earning measures. Why shopuld it be based on population?. And on top of this the states have their own sales tax and VAT.

    ReplyDelete
  14. Dear Sir,

    UID & RSBY

    நம்ம வேலைக்கு ஊளை வைக்குருங்களே



    த.முகேஷ்

    ReplyDelete