Saturday, October 06, 2012

ஊடகம் பற்றி, பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு

இன்று காலை 9.00 மணி முதல் மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் பார்வையற்றோருக்கான ஒரு நாள் பயிலரங்கு ஒன்று நடைபெறுகிறது.  ரோட்ராக்ட் திருஷ்டி மற்றும் சென்னை கோரமண்டல் ரோட்டரி குழு இணைந்து நடத்தும் நிகழ்ச்சி இது. ‘நவீனத் தமிழ் ஊடகங்களில் பார்வையற்றோரின் பங்கேற்பு’ என்பது இதன் தலைப்பு.

காலை 9.00 மணி முதல் 9.30 வரையிலான தொடக்கவிழாவில் ச.சக்திவேல் (ஆசிரியர், பரிவு) தலைமையுரை ஆற்றுகிறார். மாலன் (ஆசிரியர், புதிய தலைமுறை) சிறப்புரை. கரிமல சுப்ரமணியம் (உதவி முதன்மை ஆசிரியர், தி ஹிந்து) வாழ்த்துரை.

9.30 முதல் 11.00 வரை மனுஷ்யபுத்திரன் (ஆசிரியர், உயிர்மை) ‘செய்தி: சேகரிப்பும் பதிவும்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கிறார்.

11.15 முதல் 12.00 வரை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ‘ஊடகமும் அறமும்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

12.00 முதல் 12.45 வரை பழ. அதியமான் (ஆய்வாளர் மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளர், அகில இந்திய வானொலி நிலையம்) ‘ஒலி ஒளி ஊடகம்’ என்ற தலைப்பில் பேசுகிறார்.

1.30 முதல் 3.00 வரை பத்ரி சேஷாத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்), ‘செய்தி: தேர்வும் எடிட்டிங்கும்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கிறார்.

3.15 முதல் 4.00 வரை நிறைவு விழா. அதில் அறிஞர் ஔவை. நடராசன் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றுகிறார். பாண்டிராஜ், திரைப்பட இயக்குனர் சிறப்புரை ஆற்றுகிறார்.

மயிலாப்பூர் பக்கமாக யாராவது சென்றுகொண்டிருந்தால் இந்த நிகழ்ச்சியில் தலை காட்டிப் பாருங்கள்.

7 comments:

  1. When you are organizing such programmes next time, please think of Dr.Sekar also

    ReplyDelete
    Replies
    1. இன்னிகழ்வை நான் ஏற்பாடு செய்யவில்லை. நந்தனம் கலைக்கல்லூரியின் பேராசிரியர் ரகுராமன் (இவரும் பார்வையற்றவரே) ஏற்பாடு செய்துள்ளார். அவர்தான் என்னை அழைத்தார். கணினிகொண்டு தமிழில் எழுதக்கூடிய பார்வையற்றோர் சுமார் 100 பேராவது அவருக்குத் தெரிந்து இருக்கிறார்கள் என்றார். இவர்கள் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாக,ஆராய்ச்சி மாணவர்களாக உள்ளனர். இவர்களால் பெரும்பாலும் பிறருடைய உதவி இல்லாமலேயே கணினியைப் பயன்படுத்த முடிகிறது. எனக்கு ரகுராமனை மட்டும்தான் தெரியும். அவருடன் நான் மின்னஞ்சலிலேயே தொடர்பு கொண்டுள்ளேன். தொலைப்பேசி மூலமாகவே அவர் என்னைப் பேட்டி கண்டு அதன் ஒலிப்பதிவை வலையில் ஏற்றியுள்ளார். இன்றைய நிகழ்ச்சிக்குப் பின் இவர்களைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டு எழுதுகிறேன். முனைவர் சேகரிடமும் இது பற்றிப் பிறகு பேசுவோமே...

      Delete
  2. // 9.30 முதல் 11.00 வரை மனுஷ்யபுத்திரன் (ஆசிரியர், உயிர்மை) ‘செய்தி: சேகரிப்பும் பதிவும்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கிறார். ///


    // பத்ரி சேஷாத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்), ‘செய்தி: தேர்வும் எடிட்டிங்கும்’ என்ற தலைப்பில் பயிற்சி அளிக்கிறார். ///

    இவர்கள் இருவருக்கும் செய்திப்பத்திரிகை எதிலும் பங்காற்றிய அனுபவம் இருப்பதாகத் தெரியவில்லையே! (உயிரோசை, தமிழ் பேப்பர், ஆழம் ஆகியவைகளை 'செய்தி' சஞ்சிகைகளாகக் கணக்கில் கொண்டால் தவிர)

    ReplyDelete
    Replies
    1. Dear Anon,

      You are correct about me. I have not worked in any news media organization.

      Delete
  3. WHETHER AAZHAM IS STILL IN PUBLICATION? IT IS NOT EVVEN AVAILABLE ' PADRIS' BLOG

    suppamani

    ReplyDelete
    Replies
    1. Dear friend,

      You can get Aazham from this website: http://www.aazham.in/magazine/. You will see issues till September 2012 there. October issue stories will come up by next week.

      My name is spelt as 'Badri'. Thanks.

      Delete
  4. what happened to AAZHAM website? I am getting DNS Error and webpage is not available message we well! could you please let me know the reason ?

    ReplyDelete