Thursday, October 18, 2012

பருவமழையில் சென்னை

சொன்னமாதிரியே 18 அக்டோபர் 2012 அன்று வடகிழக்குப் பருவமழை ஆரம்பம். அதற்கு இரண்டு மூன்று நாள் முன்னதாகவே கொஞ்சம் மழை பெய்தது என்றாலும் நேற்று இரவு இடி மின்னலுடன் கூடிய கடும் மழை. கிண்டி பக்கம் தேவலாம். ஆனால் மைலாப்பூர் பகுதியில் பல தெருக்களில் ஒரே வெள்ளம். கார்கள், ஆட்டோக்கள் மிதக்கின்றன. இருசக்கர வாகனங்கள் பாடு திண்டாட்டம். இதில் தெருக்களில் பல இடங்களில் குழிகள் இருப்பதே தெரியவில்லை. தெருவோரம் வேறு சாக்கடைக்காகத் தோண்டி வைத்திருக்கிறார்கள். அதில் யாரெல்லாம் விழுந்து அடிபடப் போகிறார்களோ. படுமோசமான சிவிக் கட்டுமானம். இன்னும் ஒரு மாதத்தைத் தள்ளவேண்டும்.



4 comments:

  1. **** அதில் யாரெல்லாம் விழுந்து அடிபடப் போகிறார்களோ. ***

    ஒருவர் ஏற்கனவே பலி!

    சரவணன்

    ReplyDelete
  2. சென்னை நகரில் மின்கம்பிகள் தரைக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன. இவை பல இடங்களில் சரியான பராமரிப்பின்றி இருப்பதால் மழை பெய்யும்போது மழை நீரில் மின்சாரம் பரவி, அதில் கால் வைப்பவர்களின் உயிரைக்காவு வாங்குவது தொடர்நிகழ்வாக உள்ளது. இம்முறை, பருவ மழையின் முதல்நாளே இவ்வாறு தண்ணீரில் பரவியிருந்த மின்சாரத்துக்கு இருவர் பலியாகியுள்ளனர். (http://www.maalaimalar.com/2012/10/18104903/Youth-dead-for-today-morning-r.html)

    மதுரை போன்ற இடங்களில் மின்கம்பி அறுந்து விழுந்தால் மட்டுமே நீரில் மின்சாரம் பரவும் வாய்ப்பு உள்ளது. சென்னை நகரிலோ, தேங்கிக் கிடக்கும் ஒவ்வொரு சிறு குட்டையுமே ஒரு 'பொட்டென்ஷியல் டெத் ட்ராப்' ஆக உள்ளது. காரில் செல்பவர்களுக்கு ஆகத்து சற்றுக் குறைவு. பாதசாரிகள் ஒவ்வொரு அடியையும் உயிரைக் கையில் பிடித்தபடியே வைக்க வேண்டியுள்ளது. இது உடனடியாக கவனிக்கப் படவேண்டிய மிக முக்கியப் பிரச்சினை. ஆட்சியாளர்களோ, ஏன் மீடியாவோ கூட இதில் போதுமான கவனம் செலுத்தவில்லை. ஒவ்வொரு முறை மழை பெய்யும்போதும் ஓரிருவர் மின்சாரம் தாக்கி சாக வேண்டுமாம், அது இயல்பாம்! வேறு எந்த நாட்டிலாவது இந்த அநியாயம் உண்டா?

    சரவணன்

    ReplyDelete
  3. சென்னை, பேரு தான் தலை நகரம். சாலைகள் மிக மோசம்.

    ReplyDelete
  4. சிரிப்பதா அல்லது வருதப்படுவதா என்று தெரியவில்லை.சாலை அதை செப்பனிடும் பணி முறை அதுவும் மழை பெய்தால் பல் இளிக்கும் என்று ஒவ்வொரு பருவ காலம் வரும் போது பார்த்து பார்த்து அலுத்துவிட்டது. நான் இருக்கும் இடத்துக்கு பக்கத்தில் ஓரிடத்தில் தோண்டினால் சுமார் 1 மீட்டர் ஆழத்துக்கு தார் மிக்ஸ் இருக்கும், ஆதாவது “நோய் நாடி” என்று போகாமல் இறங்க இறங்க போட்டு நிரப்பியதால் வந்த வினை இது, இன்னும் சரியாகவில்லை.
    தண்ணீர் போக வழி செய்யாமல் எது செய்தாலும் சாலை பாழ் தான்.பண விரயம்.

    ReplyDelete