Monday, October 08, 2012

ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா

இந்த ஆண்டு கிழக்கு பதிப்பகம் இதுவரையில் அதிகம் புத்தகங்களை வெளியிடவில்லை. பெரும்பாலான நேரத்தை கல்வி சார்ந்த சில புத்தகங்களையும் பொதுத்தேர்வு சார்ந்த சில புத்தகங்களையும் வெளியிடுவதில் செலவிட்டோம். இனி மாதாமாதம் சில புத்தகங்கள் தொடர்ந்து வெளியாகும்.

சமீபத்தில் வெளியான கிழக்கு பதிப்பகப் புத்தகம்: ஸ்ரீ வைஷ்ணவம் என்சைக்ளோபீடியா. 360 பக்கங்கள், ரூ. 200.

ஸ்ரீ வைஷ்ணவம் என்பது தென்னிந்தியாவில், முக்கியமாகத் தமிழ்நாட்டில், பின்பற்றப்பட்டுவரும் ஒரு வைணவ மரபு. இராமானுசரின் வேதாந்த தரிசனத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டது. ஐயங்கார்கள் எனப்படும் பிராமணப் பிரிவினர் மட்டுமின்றி பிற சாதியினரும் இந்த மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

வேணு சீனுவாசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம் இந்த மதத்தின் அடிப்படைகளை முழுமையாக விவரிக்க எடுக்கப்பட்டிருக்கும் மிக நல்ல முயற்சி.

இந்தப் புத்தகத்தில் நான்கு பகுதிகள் உள்ளன. பகுதி ஒன்று வைணவ வழிபாட்டு முறையை விளக்குகிறது. பகுதி இரண்டு, இராமானுசரின் விசிஷ்டாத்வைத அடிப்படையை விளக்குகிறது. பகுதி மூன்று பன்னிரு ஆழ்வார்களைப் பற்றியது. பகுதி நான்கு, விசிஷ்டாத்வைத ஆச்சாரியர்களையும்  மடங்களையும் பற்றியது.

இதன் விற்பனை குறுகிய காலத்திலேயே மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.

புத்தகத்தை இணையத்தில் வாங்க

டயல் ஃபார் புக்ஸ் வழியாக வாங்க அழையுங்கள்: 94459-01234, 94459-79797

12 comments:

  1. More Shri Vaishava books at :

    http://www.nammabooks.com/Buy-Sri-Vaishnava-Books

    ReplyDelete
  2. எச்சரிக்கை: இந்த மதத்தை யார் வேண்டுமானாலும் பின்பற்றலாம். ஆனால் கோவில்களில், பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆக முடியும். அதை விட கொடுமை: கோவில்களில் வெட்கமின்றி "குடிமையில் கடைமைப்பட்ட குக்கரில் பிறப்பரேலும், முடியினில் துளபம் வைத்தாய், மொய் கழற்க்கன்பு செய்யும் அடியரை உகத்தி போலும், அரங்கமா நகருளானே" எனப் பாடுவார்கள். ஆனால் பார்ப்பனனர்களை மட்டுமே பிரபந்தம் ஓதும் குழாத்தில் சேர்த்துக் கொள்வார்கள். இதையும் இந்நூலில் விளக்கி விட்டால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அற்புதம்... இவ்வளவு ஏன், ஐயங்காருக்குள்ளேயே எத்தனை பிரிவினைகள். என் மாமா மகன் வடகலையாதலால் பார்த்தசாரதி கோவில் பிரபந்த குழாத்தில் ஓதக்கூடாது என்று ஒதுக்கியது நினைவுக்கு வருகிறது. வ.க., தெ.க. என்றில்லாமால் அனைவரும் அரங்கன் கலையில் உதித்தவர்கள் என்ற புரிதல் என்று வரும்?

      Delete
    2. ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு உரிய நிஷ்டையும், ஆசாரமும் இருந்தால் யார் வேண்டுமானாலும் பிரபந்தம் ஓதலாம். நீங்கள் கூறும் எத்தனை பேருக்கு அந்த நிஷ்டை இருக்கிறது? ஐயங்காருக்குள் இரண்டு கோஷ்டிகள் தான். அது சம்ப்ரதாய விஷயத்தில் உள்ள வேறுபாடுகள். நித்யபடி ஆரதனத்தில் ஒரு வருபாடும் இல்லை. முதலில் வேதம் மற்றும் திவ்யப்ரபந்தம் பிசறு இன்றி ஓதுபவர்களை கொண்டு வாருங்கள். அப்பறம் யாரை அர்ச்சகர் ஆக்குவது என்பதைப் பற்றி பேசுவோம்!

      Delete
    3. திருவல்லிக்கேணி, காஞ்சிபுரம் கோவில்களில் ஓதும் பார்ப்பனர்கள் அத்தனை பேரும் பிசிறின்றி அறிந்திருக்கின்றனரா? இதற்கு என்ன ஆதாரம்? நிஷ்டை பற்றி பேசுகிறீர்கள். சிகை (குடுமி) இல்லமால் கிராப் வைத்திருப்பவகர்களை எப்படி அனுமதிக்கலாம்?

      Delete
    4. நிஷ்டை, ஆச்சாரம் பற்றி கூறுகிறீர்கள். அதைவிட அடிப்படையான பஞ்ச சம்ஸ்காரத்தை எடுத்துக் கொள்வோம். நித்ய ஆராதனம் செய்வது, பனிரெண்டு திருமண் அணிவது. திருவல்லிக்கேணி பிரபந்தம் ஓதும் குழாத்தில் சேர்த்துக் கொள்ளப் படும் பொடியன்கள் எல்லாரும் இவற்றை அனுசரிக்கிரார்களா? பார்ப்பனன் என்ற ஒரே காரணத்தாலேயே சேர்த்துக் கொள்ளப் படுகிறார்கள்.

      மறுபடியும் கூறுகிறேன். தொண்டரடிப்பொடிகள் "மொய் கழற்க்கன்பு" பற்றியே பேசினார். திருமாலிடத்தில் அன்பு கொண்ட அனைவரும் பிரபந்தம் ஓதும் குழாத்தில் சேர்த்துக் கொள்ளப் பட வேண்டும். பிசிறின்றி ஓதத் தெரியாவிட்டால் காதல் கேட்டு உய்ந்து போகட்டும்.

      Delete
    5. அடியேன் வெங்கடேச தாசன் - உங்கள் கருத்துக்கள் மிகவும் அற்புதம். மடத்தின் ஜீயர்கள் இதை முன்னெடுக்கவேண்டும்.

      Delete
  3. Mr. Badri,

    I am in the USA.
    How do I get it here?
    Appreciate your reply.

    Regards,

    Rajagopal

    ReplyDelete
    Replies
    1. You can also order the physical book at the URL https://www.nhm.in/shop/978-81-8493-425-0.html

      We ship the book to anywhere in the world. The shipping cost may be more than the cost of the book. (See also answer below.)

      Delete
  4. Is there any possibility to buy ebook? (does Kizhakku has any plans to sell it books in ebook format [pdf] so that we will be able to read in handheld devices such as ipad).

    ReplyDelete
    Replies
    1. Plans are underway. We are testing an application now for Android and iPad. However when the app will go live depends on getting it to a better shape, getting approval from the app store etc. We are also talking to other vendors/market places who have the ability to push Tamil books to these devices. Somehow or the other all our books will start hitting the handheld devices very soon. Watch out for the announcements.

      Delete
  5. நமக்குள்ளே சண்டை வேண்டாம். இருப்பினும் பார்த்தசாரதி கோவிலில் தென்களியார்கள் தவிர யாரும் மூல விக்ரஹ திருமஞ்சனம் சேவிக்க இயலாது. அடியேன் நாவல்பாகம் திருமலை நம்பி கிருஷ்ணா தேசிகன்

    ReplyDelete