Tuesday, February 26, 2013

NHM Reader-இல் அசோகமித்திரன் புத்தகங்கள்

NHM Reader - தமிழ் மின்-புத்தகப் படிப்பான் செயலி இப்போது iOS இயங்குதளத்தில் மட்டுமே கிடைக்கிறது. ஆண்டிராய்ட் செயலி வெகு விரைவில் கிடைக்கத் தொடங்கிவிடும். கடைசிக் கட்டப் பரிசோதனைகள் நடந்துகொண்டிருக்கின்றன.

[NHM Reader-ஐ இறக்கிக்கொள்ள, உங்கள் ஐஃபோன் அல்லது ஐபேடில் App Store சென்று, NHM Reader என்று தேடி, இலவசமாக டௌன்லோட் செய்துகொள்ளுங்கள்.]

கொஞ்சம் கொஞ்சமாகப் புத்தகங்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளோம். புத்தகங்களைச் சேர்க்கும்போதும் ஆப்பிள் நிறுவனம், அவற்றைப் பரிசீலித்தபின்னரே அனுமதிக்கிறது என்பதால் கொஞ்சம் கால தாமதம் ஆகிறது. இந்தச் சுற்றுக்கான நேரம் எவ்வளவு என்பது இப்போதுதான் கொஞ்சம் புரிபடத் தொடங்கியிருக்கிறது. விரைவில் மேலும் மேலும் அதிகப் புத்தகங்களைச் சேர்க்கத் தொடங்குவோம். இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் இப்போதைக்கு ஆப்பிள் மூலமாக, App உள்ளிருந்தேதான் வாங்க முடியும். விரைவில், வெளியிலிருந்து (எங்கள் மின் வணிகத் தளத்திலிருந்து) வாங்கி, NHM Reader மின் படிப்பானில் படிக்குமாறு செய்ய உள்ளோம்.

இன்றுமுதல் அசோகமித்திரனின் நாவல்கள் அனைத்தையும் (ஒற்றன் நீங்கலாக - ஒற்றன் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளது) நீங்கள் NHM Reader மூலம் வாங்கிப் படிக்கலாம். இவை: கரைந்த நிழல்கள், தண்ணீர், 18-வது அட்சக்கோடு, மானசரோவர், ஆகாயத் தாமரை, இன்று ஆகியவை அடங்கும். இவற்றில் இரண்டை நாங்களே ஆங்கிலத்தில் கொண்டுவந்துள்ளோம். அவையும் NHM Reader மூலம் படிக்கக் கிடைக்கும். அவை: Star-Crossed (கரைந்த நிழல்கள்), Today (இன்று).

மின்புத்தகங்களாக இவற்றைப் படிக்கும் அனுபவத்தை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

[26 பிப் 2013 அப்டேட்: புத்தகங்களின் விலை யு.எஸ்.டாலரில் $0.0 என்று தெரிகிறது என்று சிலர் சொல்லியிருந்தனர். அது ஒரு bug. இந்திய ரூபாயில் சரியாகத் தெரிகிறது. இந்தச் சில்லறைத் தவறை சரி செய்து அப்ளிகேஷனை மீண்டும் அனுப்பியுள்ளோம். அது நிறுவப்படும்வரை இந்தப் பிரச்னை இருக்கும். தவறுக்கு வந்துகிறோம்.

28 பிப் 2013 அப்டேட்: மேற்கண்ட பிரச்னை சரி செய்யப்பட்டுவிட்டது. விலை 0.0 என்று சொல்லி, பின் வாங்கும்போது விலை வருமாறு இனி இருக்காது.]

30 comments:

  1. தகவலுக்கு மிக்க நன்றி ஐயா...

    ReplyDelete
  2. Badri
    I downloaded your app in iPad and read "Washingtonail thirumanam". My air journey was very well spent. Overall a nice experience.
    However a couple of minor issues.
    the look and feel of the app is still not very sophisticated. It gives a very desi(though intention is to read desi books!!!) look.
    It has orientation issues. When I rotate sometimes it flickers, doesn't change the layout. A couple of times the app became unresponsive.
    But definitely a very fine effort. Looking forward to read more books.

    ReplyDelete
    Replies
    1. After all we are desis:-) The look & feel is in for a complete change - hopefully we can roll the new look out in a month or so. Rotation - I will check. I have been using it and didn't see this myself. Thanks for the feedback.

      Delete
  3. அசோகமித்திரன் என்றதும் நினைவு வருகிறது - ஒலிப் புத்தகங்கள் என்ன ஆயிற்று? அவற்றை இப்போது குறுந்தகடுகளுக்குப் பதில் எம்.பி. 3 கோப்புகளாக நேரடியாகத் தரவிறக்கிக்கொள்ளும் வகையில் தரலாமே. தளத்தில் இடவசதி பிரச்சினை ஏற்படும் என்றால், ஃபிளிப்கார்ட் போல இ-வணிக தளம் எதிலாவது வாங்கிக்கொள்ளும்படியாவது தரலாம். முதலில் இவற்றை நீங்கள் வெளியிட்டபோது எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. இப்போது கிடைக்கவில்லை.

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. ஒலிப் புத்தகங்களும் விரைவில் இதே மின் புத்தகப் படிப்பானுக்குள் கிடைக்கத் தொடங்கும். எம்.பி.3 வடிவில் வரும்.ஃபிளிப்கார்ட்டிடம் பேசினோம். இப்போதைக்கு இசைப் பாடல்களை விற்பதற்குத்தான் முன்னுரிமை, புத்தகங்களை விற்க முற்படும்போது உங்களிடம் வருகிறோம் என்று அவர்கள் சொல்லிவிட்டார்கள்.

      Delete
  4. pudhiya muyarchikku vaazthukkal. nandri sir. sariyaana muraiyil idhai neengal kondu selveer ena nambugiraen. - kumar

    ReplyDelete
  5. kindleலில் படிப்பதற்கு ஏதேங்கிலும் வழி உண்டா?

    ReplyDelete
  6. நான் கார்பன் டேப் வாங்கியுள்ளேன். தமிழ் இணைய பக்கங்களில் அதில் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை. என்ன காரணம். இதுபோல் நிறைய பேருக்கு சிக்கல் உள்ளது. விளக்கினால் நல்லது.

    ReplyDelete
  7. உள்ளடக்கத்திற்கு சம்பந்தமில்லை என்றாலும் அசோகமித்திரன் என்ற ஒரு சம்பந்தத்தினால். அ.மி சிறுகதை தொகுப்பு அவுட் ஆஃப் ஸ்ஃடாக் உங்கள் பதிப்பகத்திலும், வெளியிலும். மறு பதிப்பு வெளியிடும் யோசனை உண்டா?

    ReplyDelete
    Replies
    1. அசோகமித்திரன் சிறுகதைகளை நாங்கள் வெளியிடவில்லை. கவிதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. முழுத் தொகுப்பாகப் போட்டால் விற்பனை குறைவு என்பதால் துண்டு துண்டாகப் பல புத்தகங்களாகப் போட்டிருக்கிறார்கள்.

      Delete
  8. Is it only available in Apple or Can I download it from SAMSUNG SII or SIII. Pls Advise.

    ReplyDelete
    Replies
    1. Currently only for Apple iOS, but very soon Android version will be out. Then you can download it in your Samsung(s).

      Delete
  9. Noticed that the Indru ebook is significantly cheaper than print where as the "Today" eBook is expensive than the print version! Just curious about the pricing model. I understand if it is a trade secret that can't be shared :)

    ReplyDelete
    Replies
    1. The English version was uploaded initially before we worked out the pricing strategy, so it is a bit high priced. Now, for all the Tamil books we will be uploading, the price will be lower than the print price, rounded of to the nearest dollar. The upper limit will be mostly $4 and no more however huge the book is.

      Delete
    2. I believe all readers have this question, that why ebooks are costlier than printed books. Happy to know that you are not following such a strategy! Trendsetting :)

      Delete
  10. பத்ரி நல்ல முயற்சி. எனது Samsung galaxy Android appsல் NHM writer. கிடைக்காத்தால் sellinam பதிவிறக்கம். செய்துள்ளேன். தங்கள் முயற்சி க்கு நன்றி

    ReplyDelete
  11. வாசிக்கும் அனுபவம் எப்படியிருக்கிறது என்று ஏதேனும் வீடியோ லிங்க்(youtube) பகிரவும்.

    ReplyDelete
  12. நல்ல முயற்சி. வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கும், தொடர்பயணங்களில் இருப்பவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாகயிருக்கும்.

    ReplyDelete
  13. what is your site to download ebooks. can they be read on pc? i am looking for books by t.janakiraman, jeyamohan and poomani. thank you.

    ReplyDelete
  14. Dear Badri sir,

    I have started reading Ramanujan book using my smartphone(iphone5).
    This is my first ebook reading experience using phone.
    Usually i hate reading ebooks but NHM reader is so good. The font size
    and basic options are perfect.

    I faced few problems and thought of sharing with you. Some special
    characters are not displayed properly. ex: symbol of theta, symbol of PI..

    Excellent effort sir. Thanks a lot.

    Regards
    Jay

    ReplyDelete
  15. When will you launch android app? We are waiting for that.

    ReplyDelete
  16. when will we get this app in android? we are waiting for this.

    ReplyDelete
  17. அண்ணா ஆண்டிராய்டுக்கான NHM Reader என்னவாயிற்று.

    ReplyDelete
  18. ஆண்டுராய்டுக்கான nhm reader தரவிறக்கம் செய்தாயிற்று. பயன்படுத்த நன்றாக உள்ளது. நன்றி

    ReplyDelete
  19. கூகுள் ப்ளே ஸ்டோரில் வந்துவிட்டதே! ஆனாலும், எனது டேப்ளட்டில் இன்டர்னல் மெமரி குறைவாகவே மீதி இருப்பதால் இன்ஸ்டால் பண்ண முடியவில்லை. இதன் ஏபிகே கோப்பினை என் எச் எம் தளத்தில் தரவிறக்கிக்கொள்ளும் வகையில் கொடுக்க முடியுமா? இதன் வழி, நேரடியாக மெமரி கார்டில் ஏற்றி, ஏபிகே இன்ஸ்டாலர் கொண்டு நிறுவிக்கொள்ள முடியும். ஒருவேளை ஏபிகே ஃபைல் என்பது வியாபார ரகசியமா என்பது எனக்குத் தெரியவில்லை!

    சரவணன்

    ReplyDelete
  20. ஒரு ஃபீட்பேக் - உங்கள் செயலியின் இன்ஸ்டலேஷன் லொகேஷனை எஸ்டி கார்டாக அமையுங்கள். அல்லது குறைந்த பட்சம் நிறுவிய பிறகாவது கார்டுக்கு மூவ் பண்ணக்கூடிய விதத்தில் அமையுங்கள். (இப்போதைய வடிவில் இந்த ஆப்ஷன் சாம்பல் அடிக்கப்பட்டுள்ளது) சிறிய அளவிலாற ஸ்டோரேஜ் கொண்ட ஆன்ட்ராய்ட் ஃபோன், டேப்ளட்களில் இடப்பிரச்சினை பெரிதாக உள்ளது.

    சரவணன்

    ReplyDelete
    Replies
    1. இப்போது இது சரி செய்யப்பட்டுவிட்டது. என்.எச்.எம் ரீடரை அப்டேட் செய்துகொண்டால், அதனை இப்போது எஸ்.டி கார்டுக்கு நகர்த்திக்கொள்ளலாம். அதன்பிறகான அப்டேட்டுகளின்போது, தானாகவே கார்டில் சேமிக்கப்பட்டுவிடும்.

      Delete
    2. ரொம்ப நன்றி!

      சரவணன்

      Delete
  21. NHM reader : Couldn't login After registration, when i try to login it says 'Your account has not been activated.

    ReplyDelete