Tuesday, August 06, 2013

தெலங்கானா விவகாரம்

கடந்த ஒரு வாரம் அவ்வப்போது தொலைக்காட்சி பார்த்ததில் தெலங்கானா விவகாரம் எனக்குச் சுத்தமாகப் புரியவில்லை என்பதுதான் எனக்குப் புரிந்தது.

இந்த ஹைதராபாத் மட்டும் தெலங்கானாவின் நடு மத்தியில் இல்லாமல் சீமாந்திரப் பகுதியில் இருந்திருந்தால் பிற ஆந்திர சிங்கங்கள் ‘எங்களுக்குத் தேவை ஒன்றிணைந்த ஆந்திரம்தான்’ என்று சொல்லியிருக்க மாட்டார்கள். கடந்த மூன்று மாநிலப் பிரிவினையிலும் பிரிந்துபோன குட்டி மாநிலம் தனக்கென ஒரு நகரைத் தேர்ந்தெடுத்து அதனைத் தலைநகராக வளர்த்தெடுக்க வேண்டியிருந்தது. ஆனால் இங்குதான் பிரிந்துபோகும் குட்டிப் பகுதிக்குள் இணைந்திருந்த மாநிலத்தின் பெரும் தலைநகரம் மாட்டிக்கொண்டிருக்கிறது. பிரச்னைக்கு ஒது ஒன்று மட்டும்தான் காரணம் என்று தோன்றுகிறது.

அப்படி ஒரு நகரின்மீது சாதாரண மக்களுக்கு அவ்வளவு தீவிர ஆர்வம் எல்லாம் இருக்க முடியாது. அந்நகரில் எக்கச்சக்க முதலீடுகளை சீமாந்திரர்கள் சிலர் செய்திருக்கிறார்கள் என்றால் அதில் என்ன பிரச்னை? தமிழர் தலைவர்கள் பெங்களூரிலும் ஹைதராபாதிலும் ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்வதில்லையா? இல்லை எல்லாமே ‘ஒருமாதிரியான’ அத்துமீறிய முதலீடுகளா?

இன்னொரு பக்கம், சந்திரசேகர ராவ் போன்ற கொக்கு மண்டையர்கள் மாநிலம் பிரிக்கப்பட்டதும் சீமாந்திர மக்களை வேலையை விட்டுத் துரத்திவிடுவோம் என்றெல்லாம் உளறுகிறார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின்படி அதெல்லாம் சாத்தியமில்லை. எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் ஏற்கெனவே இருக்கும் அரசு வேலையை விட்டெல்லாம் தூக்க முடியாது. புதிதாக உருவாகும் காலியிடங்களுக்கு யாரை வேலைக்கு வைப்பது என்பதை வேண்டுமானால் இருப்பிட முகவரியை வைத்து முடிவு செய்யலாம். அதே நேரம் சீமாந்திர மக்கள் தெலங்கானாவில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்துவிட்டால் தெலங்கானா மாநிலத்தில் வேலைக்கு விண்ணப்பிப்பதில் பிரச்னை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்.

இதைப் போன்ற அசிங்கமான சண்டை தமிழகத்தில் என்றுமே வராது என்று தோன்றுகிறது.

18 comments:

  1. நம்ம தமிழ் நாட்டில் திராவிட கட்சிகள் பண்ணல-னாலும் , ஜாதி கட்சி ஆசாமிகள் இந்த மாதிரி குதர்க்கமா கோரிக்கைகள் கண்டிப்பா ஒரு நாள் வைக்க தான் போறாங்க :)

    ReplyDelete
  2. /சந்திரசேகர ராவ் போன்ற கொக்கு மண்டையர்கள் / :-)

    ReplyDelete
  3. கொக்கு மண்டையர்கள்

    இதென்ன புது நாமகரணப் பெயர்? சிறப்பாக காரணம் ஏதும் உண்டா?

    ReplyDelete
    Replies
    1. கவுண்டமணி போல் சிந்தித்தன் விளைவு. அவர் தெலங்கானா கேட்டுப் படுத்தும் போராட்டத்தின்மீது எனக்கு எந்தக் கோபமும் இல்லை. ஆனால் இப்படி உளறியதானால் வந்த கோபம். எனவே திட்டவேண்டும்போலத் தோன்றியது. அப்போது கையில் வந்த பெயர் இதுதான்.

      Delete
    2. Can we expect similar diatribes in your debates in PT and Vijay TV?

      Delete
  4. ஆந்திர மாநிலம் உருவான காலத்தில் இருந்தே இந்த பகுதிகள் தனித்தனியாக தான் இருந்தன.அங்கு டேலேன்கானா ,ராயலசீமா,கடலோர ஆந்திரா மூன்று பகுதிகளுக்கும் உள் ஒதுக்கீடும் உண்டு .அந்தந்த பகுதியில் உள்ள கல்லூரிகள்,வேலை வாய்ப்புகளில் 85 சதவீதம் அந்த பகுதியை சார்ந்தவர்களுக்கு தான்.
    ஹைதராபாத் மட்டும் பொதுவாக ப்ரீ zone ஆக இருந்தது.பின்பு அதுவும் டேலேன்கானா பகுதி போல எடுத்து கொல்லப்பட்டது.ஆரம்பத்தில் இருந்தே மூன்றும் தனி தனி பிரிவுகளாக தான் இயங்கி வருகின்றன
    நிஜாமின் கீழ் இருந்த பகுதி என்பதால் தனியாக வேண்டும் என்ற போராட்டம் விசித்திரமான ஒன்று. இங்கும் அங்கும் இருக்கும் சாதிகளின்/மதங்களின் சதவீதத்திலும் பெரிய வித்தியாசம் கிடையாது.
    தமிழகத்தில் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு சாதி பெரும்பான்மை.இங்கு தனி மாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை எழாமல் இருக்க முக்கிய காரணம் திராவிட கட்சிகளின் ஆட்சி.இங்கும் வட தமிழ்நாடு,கொங்கு நாடு,தென் தமிழகம் என்று பிரிக்க வேண்டும் என்ற ?போராளிகள் முதல் மாநில சீரமைப்பு காலத்தில் இருந்தே உண்டு.அவர்கள் வலு பெறாத நிலைக்கு முக்கிய காரணம் கழகங்கள் தான்.

    பா ஜ கா டேலேங்கானவிற்காக பல ஆண்டுகளாக குரல் கொடுத்து வந்ததில் இருந்தே அதன் நோக்கத்தை புரிந்து கொள்ளலாம்
    சிறு மாநிலங்கள் ,பெரிய எண்ணிகையில் உள்ள சாதிகள்,பல மாநிலங்களில் உள்ள கட்சிகளுக்கு நல்லது. கோர்காலாந்து கோரிக்கையை யாரும் மதிக்க மறுக்கிறார்கள் என்பதால் கோர்கா தனிமாநில குழு பா ஜ க மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை அங்கு நிற்குமாறு அழைத்தது.அவரும் அவர் கட்சியும் எந்த கூச்சமும் இல்லாமல் கிடைத்த சந்தர்ப்பத்தை லட்டு போல பயன்படுத்தி ஜஸ்வந்த் சிங்கை டார்ஜிலிங் தொகுதியில் நிறுத்தி வைத்து வெற்றி பெற்றது.
    இங்கும் ஒன்றிரண்டு இடங்கள் கிடைக்கும் என்றால் தனி கோவை நாடு அல்லது,நாகர்கோவில் மாநிலம் கேட்டு போராடவும் பா ஜ கா தயங்காது

    ReplyDelete
    Replies
    1. தமிழ் நாட்டில் தப்பித்தவறி ஏதாவது நல்லது நடந்தால், அதற்கு திராவிட கட்சிகள் தான் காரணம்னு சுதி பிசகாம ஜால்ரா அடிக்கும் நீங்கள் , வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் பா.ஜ.க மீது பாயத்த‌வறுவதில்லை.......

      இன்றைய இளைஞர்களுக்கு பழைய நிகழ்வுகள் தெரியாது என்ற தைரியத்தில் என்னவெல்லாம் அடித்துவிடுகிறீர்கள்.......பாஜக தனிமாநிலங்களைத்தான் ஆதரிக்கிறது.... ஆனால் திராவிடக்கட்சிகளின் அடிப்படைக்கொள்கையே பிரிவினைவாதம்தானே? சுதந்திரமே வேண்டாமென்று கெஞ்சியது யார்? அல்லது குறைந்தது திராவிட நாட்டை [ அது எங்கே இருக்கு சார்? ] மட்டுமாவது வெள்ளையர்கள் ஆளவேண்டும் என்று பிரிட்டிஷ்காரன் காலில் விழுந்து கெஞ்சியது யார்?.....அடைந்தால் திராவிட நாடு ....இல்லையேல் சுடுகாடு என்று சூளுரைத்தவர்கள் தானே நீங்கள்? பிரிவினைவாத தடுப்புச்சட்டம் கொண்டுவரப்பட்டவுடன் வாலை சுருட்டிக்கொண்டு திராவிட நாடு கொள்கையை சுடுகாட்டுக்கு அனுப்பிய வீரர்கள்தானே திராவிட இயக்கத்தினர்?

      நிர்வாக வசதிக்காக மாநிலங்களை பிரிப்பது தவறென்றால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்ள அதிகாரமும் த‌வறென்று ஆகிவிடும் சார்...பிறகு கழக கண்மணிகள் பஞ்சாயத்துப்பணத்தில் முக்குளிப்பது எப்படி?

      Delete
  5. இதைப் போன்ற அசிங்கமான சண்டை தமிழகத்தில் என்றுமே வராது என்று தோன்றுகிறது - உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  6. Most of the renowned educational institutions are in & around Hyd. Just thinking abt the students passing out this year...What will happen to their seat in reputed colleges in Hyd.,
    It will take long time to build institution in new state and till that time, public and students looking for carrier will be affected.

    ReplyDelete
  7. கே சி ஆர் சொன்னதை பெரும்பாலானோர் புரிந்து கொள்ளவில்லை.
    ஹைதராபாத்தில் உள்ள அரசு அலுவலகர்களில் ஆந்த்ரா,ராயலாசீமாவை சேர்ந்தவர்கள் புது மாநில தலைநகர் உருவாகும் போது அங்கு பணிக்கு செல்ல வேண்டும் எனபது.
    புது மாநில தலைநகர் என்றால் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும்.அத்தனை இடங்களும் புது மாநிலமான சீமாந்த்ராவிர்க்கு தான் செல்லும் என்பதால்,டெலெங்கானாவில் புது வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகள் இருக்காது/பதவி உயர்வுகள் இருக்காது எனபது அவரின் கூற்று.
    புது மாநிலம் பிரிவதால் அதிக பலன்கள் ஹைதராபாத் கிடைக்காத மாநிலத்திற்கு தான். அங்கி ஏற்கனவே பணியில் இருப்பவர்களை யாரும் எடுக்க முடியாது.
    புதிதாக ஒங்கொலிலொ,விஜயவாடாவிலோ உருவாகும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் புது மாநிலத்திற்கு தான். இங்கு உயரும் நிலமதிப்பால் ,உருவாகும் அரசு,தனியார் வேலைவாய்ப்புகளால் டேலேன்கானா வாசிகள் பயன் பெறப்போவது கிடையாது .
    ஹைதராபாதில் பணியில் இருக்கும் யாரையும் அரசோ,தனியாரோ ஆந்த்ராவிர்க்கு சட்டப்படி அனுப்ப முடியாது.ஹைதராபாத் பத்து ஆண்டுகளுக்கு பொது தலைநகர் என்பதும் சீமாந்திரா வாசிகளுக்கு சாதகமான ஒன்று தான்.
    இப்போது இரு மாநில தலைநகரங்களும் ஹைதராபாத்தில் இயங்க போவதால் அரசு பணியாளர்களை பிரித்தாக வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. அதே இடத்தில இருந்தாலும் வேறு மாநில அரசு பணியாளர்கள்.புதிதாக பிரிந்த மாநில பணிக்கு செல்ல விருப்பமில்லை என்று இப்போது இருப்பவர்கள் டேலேன்கானா ஊழியர்களாக தொடரும் வாய்ப்புகளே அதிகம்.அவர்களை வலுக்கட்டாயமாக தள்ள முடியாது.கண்டுபிடிக்கவும் முடியாது

    அதனால் சீமாந்திரா அரசு பல புது பணியிடங்களை உருவாக்க வேண்டிய வாய்ப்பு வருகிறது.போராடியது டேலேன்கானா ,அதிக பலன் பெறப்போவது சீமாந்திரா மக்கள் தான்

    ReplyDelete
    Replies
    1. here is the exact wording of kcr.

      http://ibnlive.in.com/news/nontelangana-govt-employees-must-leave-after-state-is-formed-kc-rao/411547-37-64.html

      Delete
    2. Badri,in the early 1950s, the telugus did their very best to get madras into andhra pradesh. madras at that time was 40% telugu, and tamils barely made a majority. but they consoled with the promise of greater andhra and hyderabad, having been satisfied with kurnool as an interim capital. all erstwhile telugu leaders from circars like sanjeeva reddi, ranga et al had homes in madras and could speak madras tamil.

      Delete
    3. I read KCR's statement. He is not issuing a threat but at the same time, he is indicating that his wish is for the non-Telangana folks to "leave". Whether it is for helping the newly formed Seemandhra state to manage itself, or to make way for Telangana people to fill in those jobs - either way, the choice should be left to the employees. The demand is inherently wrong. The newly formed state can make its own policies on new hires. Existing staff should be dealt with in accordance with the constitution.

      Delete
    4. How will they split the existing moveable assets like vehicles/computers when two capitals are formed in hyderabad.Will they leave everything for telengana and buy items fresh or divide the assets in a ratio.

      Will the new state have no old employees and recruit everyone fresh from its areas and make them work in hyderabad for 10 years.

      what will telengana do with employees meant for entire andhra blocking recruitment/promotion for decades if no one volunteers or is sent for the new state.

      There exists separate telengana staff association and andhra staff association as they had zonal reservation and its better if they opt for the new state on voluntary basis and can be offered perks for joining the new state like accelerated assured promotions/increased HRA etc.They have never been part of the struggle and have opposed separate telengana.There will be bad blood if they insist to work for telengana govt and will face real or imagined discrimination in promotions and important postings

      Delete
  8. KOKKU MANDAIYAN OR BULB MOOKAN MR KCR HAS MADE TELANGANA
    PEOPLE TO BELIEVE THAT AFTER THE FORMATION OF TELANGANA
    THE SEEMANDHRA AND RAYALASEEMA PEOPLE WILL BE DRIVEN OUT
    OF HYDERABAD AND THEIR PLACES, JOBS, BUSINESS HOUSES CAN BE
    TAKEN OVER BY TELENGANA PEOPLE JUST LIKE SINGHALESE PEOPLE
    HAVE TAKEN OVER THE LAND, HOUSES OF TAMIL PEOPLE AFTER THE CIVIL WAR IN THE NORTH AND EAST OF SRILANKA.
    THE CONGRESS WHICH BELIEVES THAT KCR WILL MERGE HIS TRS
    AFTER THE FORMATION OF TELENGANA WILL BE DISAPPINTED AS KCR
    IS NURTURING THE HOPE OF BECOMING THE FIRST CM OF TELANGANA.

    ReplyDelete
  9. நேரு சொதப்பிய பல நூறு விஷயங்களில் இந்த தெலுங்கானா விவகாரமும் ஒன்று......சொல்லப்போனால் இந்தியாவின் மிக பழமையான தனி மாநில கோரிக்கை அதுதான்....அந்த பகுதி மக்களின் விருப்பத்துக்கு மாறாக தம்மோடு இணைத்துக்கொண்ட ஆந்திர அரசியல்வாதிகள் [ தெலுங்கானா பகுதியில் இருந்து முதல்வரான நரசிம்ம ராவ் , அஞ்சையா உட்பட ] ஹைதராபாத் தவிர்த்த இதர தெலுங்கானா பகுதியை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை.....அதுதான் பிரச்சினையின் முக்கியப்புள்ளி.....

    ReplyDelete
    Replies
    1. சரவணகுமார் சார்

      1947 காலகட்டத்தில் இருந்து திராவிட இயக்கத்தின் தனி நாடு கோரிக்கையை பார்க்க வேண்டும்.அப்போது மத அடிப்படையில் பாகிஸ்தான் பிரிந்தது.இந்தியா இந்து நாடாகும் என்று தான் பலரும் நினைத்தனர்.
      மதம் என்றும் இணைக்காது.கட்டுகோப்பான,முல்லாக்களுக்கு கட்டுப்பட்ட இஸ்லாமியர்கள் கூட சர்வாதிகாரிகளின் கீழ் இருந்தாலும் 25 ஆண்டுகள் கூட ஒன்றாக இருக்க முடியவில்லை.மொழி அடிப்படையில் கிழக்கு வங்காளம் உருவானது


      இந்தியா இந்து நாடாகாமல் (விடுதலையின் போது இந்தி,இந்து நாடு தான் பலரின் எண்ணமும் )நேருவும் /அம்பேத்கரும் புண்ணியம் கட்டி கொண்டார்.அதற்கு பெரிதும் உதவியது திராவிட இயக்கம்
      ஹிந்து நாடாக இருந்திருந்தால் எந்த அழகில் இருக்கும் இருந்திருக்கும் என்பதை நேபாளத்தை வைத்து புரிந்து கொள்ளலாம்.கிழக்கு வந்காளத்திற்கு முன்பே மொழி /இனம் அடிப்படையில் நாடு சிதறி இருக்கும்

      இட ஒதுக்கீடும்/மதசார்பின்மை/போலி மதசார்பின்மை தான் இந்தியாவை காப்பாற்றி வருகிறது.இந்த கொள்கைகள் நாடு முழுவதும் பரவ முக்கிய காரணம் திராவிட கட்சிகள் தான்.
      இட ஒதுக்கீட்டை காங்கிரஸ்/ஜன சங்கம் இரண்டும் எதிர்த்த கட்சிகள் தான்.ஹிந்தி திணிப்பை ஆதரிக்கும் கட்சிகள் தான் இரண்டும்.இவைகளை வேண்டாவெறுப்பாக ஆதரிக்கும் நிலை தான் இந்தியா ஒன்றாக இருக்க முக்கிய காரணம்

      Delete
  10. //இதைப் போன்ற அசிங்கமான சண்டை தமிழகத்தில் என்றுமே வராது என்று தோன்றுகிறது.//

    பத்ரி,

    கொங்குப் பகுதியில் உள்ள எண்ணவோட்டம் 'எந்தக் கட்சி' ஆட்சிக்கு வந்தாலும் எந்த வளர்ச்சி வேலையும் நடக்காது, ஆட்சியாளர்களின் கவனம் சென்னை நகரைச் சுற்றியே உள்ளது என்பதே. அதுவே தனி மாநிலம் கேட்கத் தூண்டுகிறது.

    கோவையின் மேம்பாட்டிற்கு, அது நொய்யல் ஆற்றை சுத்தப்படுத்துவதிலோ, குளங்களை ஆழப்படுத்துவதிலோ, மரம் வளர்ப்பதிலோ, சிறுதுளி, ராக் போன்ற அரசு சாரா நிறுவனங்களே தன்முனைப்புடன் செயலாற்றுகின்றன.

    தொடர் மின்வெட்டினால் தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டபோதோ, விமான நிலைய விரிவாக்கத்திற்கோ, ரயில் வண்டிகளை கோவை நகரினுள் விடுவதற்கோ எதுவானாலும் இப்பகுதி மக்கள் தாங்களாகவே போராடி வந்திருக்கிறார்கள். கோவைக்கு வரவேண்டிய IIM பிடுங்கி திருச்சியில் நடப்பட்டது. உலகத்தர பல்கலைக்கழகம் அமைப்பது கானல் நீராகவே உள்ளது. இதற்கிடையே கேரள லாபியின் தடைகள் (ரயில்கள் கோவை நகரினுள் வருவதைத் தடுப்பது, நீர்பிடிப்புப் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டுவது, மருத்துவக் கழிவுகளை தமிழகத்தினுள் கொண்டு வந்து கொட்டுவது) வேறு.


    உள்ளூர் திமுக, அதிமுக அரசியல்வாதிகள் எந்தப் பிரச்சைக்கும் வாயே திறப்பதில்லை. சொந்தமாகவே தொழில்துறையில் சிறந்து விளங்கும் இப்பகுதி மக்கள் மாநில அரசையோ, நடுவண் அரசையோ சார்ந்திருக்காமல் தாங்களாகவே இயன்ற வரையில் தீர்வு காண முயல்கிறார்கள். அதுவே மக்கள் ஆதரவை கொமுக, கொமதிக போன்ற கட்சிகள் நோக்கித் தள்ளக்கூடும்.

    பார்க்க மற்றும் அதன் பின் வரும் கருத்துகளை.

    ReplyDelete