Monday, August 04, 2014

கிராமம் முழுவதற்கும் சூரிய ஒளி மின்சாரம்

பிகார் மாநிலத்தில் தர்நாய் என்ற 450 வீடுகள் கொண்ட சிறு கிராமத்தில் உள்ள சுமார் 2,400 பேருக்கும் உதவும் வகையில் கிரீன்பீஸ் அமைப்பு 100 கிலோவாட் சக்தி கொண்ட ஒரு சூரிய ஒளி மின் அமைப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான முழுத் தகவல் கிரீன்பீஸ் பத்திரிகைக் குறிப்பில் கிடைக்கிறது.

இதில் நிறையக் கேள்விகள் எனக்குத் தோன்றின. அவற்றையெல்லாம் கிரீன்பீஸ் இந்தியாவுக்கு எழுதிக் கேட்டிருந்தேன். கடந்த பத்து நாட்களாக அவர்களிடமிருந்து பதில் வரவில்லை. இத்தனைக்கும், பத்திரிகையாளர் தொடர்புகு என்று இரண்டு ஆட்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் பத்திரிகைக் குறிப்பில் கொடுத்துள்ளனர்.

இது தமிழகத்துக்கு உபயோகமாகாது என்பதுதான் என் கருத்து. தர்நாய் போன்ற பல வட இந்திய கிராமங்களுக்கு அடுத்த இருபது ஆண்டுகளிலும் மின் இணைப்பு கிடைக்கப்போவதில்லை. எனவே, இந்தமாதிரியான சூரிய மின்சக்தி மைக்ரோ கிரிட் அவசியம். ஆனால் இரண்டு கோடி ரூபாய் முதலீடு என்றால் அரசினால் மட்டுமே முதலீடு செய்ய முடியும். தனியாருக்கு இதில் பிரேக் ஈவன் கிடைப்பது மிகவும் கடினம் என்று தோன்றுகிறது.

1 comment: