Wednesday, December 22, 2004

தமிழன்பனுக்கு சாகித்ய அகாதெமி

இந்த வருட தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது ஈரோடு தமிழன்பனுக்குக் கிடைத்துள்ளது. பரிசு பெற்ற நூல் "வணக்கம் வள்ளுவ!" என்னும் கவிதைத் தொகுப்பு.

Erode Tamilanban/ஈரோடு தமிழன்பன்
ஈரோடு தமிழன்பன்
படம் © பத்ரி சேஷாத்ரி


சென்ற வருடம் தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது "கள்ளிக்காட்டு இதிகாசம்" நாவலுக்காக வைரமுத்துவுக்குக் கிடைத்தது.

14 comments:

  1. தமிழ்நாட்டின் ஜெயந்தோ மஹாபாத்ரா என்று சொல்லிக்கொள்ளவேண்டியதுதான்.

    By: Montresor

    ReplyDelete
  2. more than the news indication of your copyright tells us something

    By: annon

    ReplyDelete
  3. காபிரைட் என்று போட்டிருக்கிறதே.. நீங்க நேரிலே சுட்ட போட்டோவா பத்ரி?

    By: anonymous

    ReplyDelete
  4. ஹிஹி, அந்த காபிரைட் சும்மா, வேற யாரும் சுட்டு அவங்க வலைப்பதிவுல போடணும்னா, என் பேரை கூட போடணும்னுதான். ஆமா, நான் நேர்லயே (டிஜிட்டல் கேமராவால) சுட்ட போடோ.

    மத்தபடி, தமிழன்பன் எழுதின எதையும் நான் இதுவரை படித்ததில்லை என்று உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  6. Paul Zacharia is the recipient for the award this year in Malayalam for his 'Zacharia-vude kathakal' – a voluminous anthology of his short stories that have appeared till 2002.

    Zacharia has mentioned in today's newspaper that as the award is being presented by a secular government and would be handed over by the one whose hands are not ‘communally tainted’, he will be accepting the same. This has an indirect reference to a recent event - Prof Sukumaran Azhikode, the noted literary critic refused to accept the Kerala Govt's Ezhuththachchan award from Chief Minister Ooman Chandy two weeks ago (in consultation with Justice V.R.Krishna Iyer) and then changed his mind.

    While I don't know who were in the selection committee for Tamil, eminent writer M.T.Vasudevan Nair chaired the Malayalam wing and has ensured the awardee has been selected this year too in a fair manner (last year the award went to the noted author and women's rights activist Prof Sara Joseph).

    era.mu


    By: eramurukan

    ReplyDelete
  7. பத்ரி, இன்னும் கொஞ்சம் விரிவாக எந்தப் படைப்புக்குக் கிடைத்தது போன்ற விவரங்களை நீங்கள் வழக்கமாக எழுதி இருப்பீர்களே...

    ReplyDelete
  8. செல்வராஜ்: "வணக்கம் வள்ளுவா" என்னும் கவிதைத் தொகுப்பு நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது என அறிகிறேன்.

    நான் பொதுவாக கவிதைத் தொகுதிகளைப் படிப்பவனல்லன். இந்தப் புத்தகத்தையும் தேடிப் படிப்பேன் என்று சொல்லமுடியாது.

    இரா.மு: எனக்குத் தெரிந்தவரையில் தமிழன்பனுடன், எஸ்.ராமகிருஷ்ணன், திலகவதி ஆகியோர் பேர்களும் இருந்ததாகவும், கடைசியில் கிடைத்தது தமிழன்பனுக்கும் ...

    அதற்கு மேல் எனக்கு சாகித்ய அகாதெமி குழுக்கள் பற்றியெல்லாம் தெரியாது.

    ஏனோ, தமிழில் மட்டும் ஒவ்வொரு வருடமும் பிரச்னைதான் என்று தோன்றுகிறது.

    நிற்க. உபமன்யு சாட்டர்ஜியின் "Mammaries of the Welfare State"க்குப் போய் சாகித்ய அகாடெமி கொடுத்திருப்பதும் எனக்கு ஏற்புடையதல்ல. அவரது "English August" அளவுக்கு "Mammaries"இல் சடயர் சரியாக வரவில்லை. பல இடங்களில் அலுப்பூட்டுகிறது. தூக்கியெறிந்து விடலாமா என்றுகூடத் தோன்றிவிடும்.

    ReplyDelete
  9. பத்ரி தேர்வு குழுவில் இருந்தவர்கள் குறித்து ஏதேனும் தகவல் தெரியுமா?

    ReplyDelete
  10. any discount for bloggers who want to buy the book :)

    By: anonymiss

    ReplyDelete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  13. தமிழன்பனின் ஏதோ ஒரு கவிதைத் தொகுதியை புரட்டியிருக்கிறேன். ஆனாலும் ஒரு நியூஸ் ரீடராகத்தான் அவர் எனக்கு பரிச்சயம். ஸ்பஷ்டமாக தமிழ் பேசினாலும் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாததால் தூர்தர்ஷனிலிருந்து 'கல்தா' கொடுக்கப்பட்டவர். தமிழன்பனின் முக்கியமான சாதனையாக நான் நினைப்பது அதிகமாக சர்ச்சைகளில் மாட்டிக்கொள்ளாதவராக இருப்பதைத்தான்! வாழ்த்துக்கள் தமிழன்பன் ஸார்!

    ReplyDelete
  14. தமிழன்பன் கவிதைகள் சில படித்திருக்கிறேன். அவரது கவியரங்கச் சிலேடைகள் 'அந்த' கவியரங்க நாள்களில் பிரபலம்.

    1.
    வானரங்குதிக்கும் குற்றாலந்தன்னில்
    வான் அரங்கு உதிக்கும் விண்மீனைப் பாட..

    2.
    காற்றின் போக்குவரத்தைக் கண்காணிக்கும்
    போக்குவரத்து அமைச்சர் மூக்கா (மு.க.) இலையா!

    (மு.க. போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரம்)

    அன்புடன்
    ஆசாத்

    ReplyDelete