Monday, September 05, 2011

அண்ணா ஹசாரே, இட ஒதுக்கீடு

நேற்று உங்களில் பலர் விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியைப் பார்த்திருக்கலாம். அந்த நிகழ்ச்சியை முன்னிட்டுத்தான் இந்த வரிசையின் முதல் பதிவை எழுதியிருந்தேன்.

நிகழ்ச்சியின்போது எழுந்த வலுவான ஒரு கேள்வி இட ஒதுக்கீட்டை முன்வைத்தது. அண்ணா ஹசாரே குழுவினர் முன்வைக்கும் லோக்பால் அமைப்பு இப்படித்தான் இருக்கும்.
  • ஒரு தலைவர், 10 உறுப்பினர்கள். (ஆக மொத்தம் 11 பேர்).
  • இவர்களில் குறைந்தபட்சம் நால்வருக்காவது சட்டப் பின்னணி இருக்கவேண்டும்.
  • இவர்களை ஒரு தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.
  • ஒரு ‘தேடுதல் குழு’ முதலில் சில பெயர்களைத் தேடிக் கொண்டுவரும். அதிலிருந்து 11 பேரை தேர்வுக்குழு தேர்ந்தெடுக்கும்.
இந்த 11 பேரும்தான் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து ஊழல் செய்யும் பிறர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்து உறுதி செய்து தண்டனை கொடுப்பார்கள்.

இந்த 11 பேரைத் தேர்ந்தெடுக்கும்போது இட ஒதுக்கீடு இருக்குமா என்ற கேள்வியை சிலர் முன்வைத்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்கும் ஓர் அமைப்பு அதிகாரம் இந்த லோக்பால் அமைப்புக்கு வருமானால், அந்த அமைப்பில் இட இதுக்கீடு இல்லையென்றால், அது மேல் சாதியினரால் நிரப்பப்பட்டு, வேண்டுமென்றே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் துன்புறுத்த வழிவகுக்கும் என்பதுதான் இதன் அடிநாதம்.

இப்போதைக்கு, நாடாளுமன்றத்தையும் சட்டமன்றங்களையும் பொருத்தமட்டில், அட்டவணை சாதியினருக்கும் பழங்குடியினருக்கும் மட்டும்தான் இட ஒதுக்கீடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. பெண்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. மதச் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கிடையாது. உயர்/உச்ச நீதிமன்றங்களில் நீதிபதியாவதற்கு யாருக்குமே இட ஒதுக்கீடு கிடையாது. 

மத்திய அரசு, மாநில அரசு வேலைகளில் அட்டவணை சாதியினர், பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு உள்ளது. பெண்களுக்கு என்று தனி இட ஒதுக்கீடு கிடையாது.

இட ஒதுக்கீடு என்பது எல்லாத் துறைகளுக்கும், எல்லாப் பதவிகளுக்கும் அவசியமானது என்ற முடிவுக்கு நான் வந்திருக்கிறேன். இட ஒதுக்கீடு என்ற கொள்கை, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தன்னம்பிக்கையை அளித்துள்ளது என்று நினைக்கிறேன். பெரும்பாலான மக்கள் மனத்தில் ஒருவித சந்தேகமும் தாம் ஒடுக்கப்படுகிறோம் என்ற கோபமும் இருக்கும்வரை இந்தியா என்ற தேசம் முன்னேறுவதற்கு வழியே இல்லை. இட ஒதுக்கீட்டினால் இந்தச் சந்தேகமும் கோபமும் ஓய்ந்துவிடும் என்றால் அத்தகைய கொள்கையை நாம் அனைவருமே விரும்பி ஏற்கவேண்டும்.

லோக்பால் முதற்கொண்டு நீதித்துறைவரை அனைத்துத் துறைகளிலும் equitable இட ஒதுக்கீடு அவசியம் என்றே நான் நினைக்கிறேன். அண்ணா ஹசாரே குழுவினர் இதனைப் புரிந்துகொள்ள முற்படவேண்டும். மாறாக, லோக்பாலைப் பொருத்தமட்டில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று சொல்வார்களேயானால், சில பகுதிகளிலிருந்து கடுமையான எதிர்ப்பை அவர்கள் சந்திக்கவேண்டியிருக்கும். அதையே காரணம் காட்டி, லோக்பால் சட்டம் நிறைவேறுவது தாமதப்படுத்தப்படலாம்; அல்லது நடக்கவே நடக்காமல் போகலாம். உதாரணத்துக்கு, பெண்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா எப்படி அல்லல்படுகிறது என்று பாருங்கள். அதில் உள்ள பெரிய குறையாகப் பலரும் சொல்வது சாதிகளுக்கான உள் ஒதுக்கீடு இல்லாதிருப்பதுவே.

Youth for Equality போன்றவர்கள் அண்ணா ஹசாரே போராட்டத்தை ஆதரிக்கிறார்கள்; எனவே அடிப்படையில் இந்தப் போராட்டம் எந்தத் திசையில் செல்லப்போகிறது என்று நன்றாகத் தெரிகிறது என்று சில எதிர்ப்பாளர்கள் பேசுகிறார்கள். அண்ணா ஹசாரே ஒரு சாதி வெறியர் என்பதுபோலச் சித்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. மேலும் சிலர் நகைப்புக்கிடமாக, அண்ணா ஹசாரே ஏதோ ஒருவிதத்தில் பாபாசாஹிப் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க முனைகிறார் என்பதுபோலத் திரிக்க ஆரம்பித்துள்ளனர். இந்த விஷயம் பெரிதாகப் போவதற்கு முன்னதாக இட ஒதுக்கீடு தொடர்பான தம் தெளிவான கருத்துகளை அண்ணா ஹசாரே குழுவினர் வெளிப்படுத்துவது முக்கியமாகிறது.

20 comments:

  1. நீயா நானாவில் லோக்பால் குறித்த விவாதம் நீர்த்த நிலையிலேயே நடந்தது என நினைக்கின்றேன். ஜன் லோக்பாலின் ஷரத்துகளை குறித்து ஆதரித்தோர் தரப்பிலிருந்து பேசியவர்களுக்கு அது எத்தனை மேம்போக்காக இருந்தது என்றும் புரியவில்லை ( ஷரத்தும் அதை அவர்கள் சொன்ன விதமும்)

    ஆனால் நிகழ்ச்சி முடிவில் கோபிநாத் என்னவோ பெரும் அளவில் விவாதம் நடந்து முடிந்தாற் போல் சொன்னது நல்லா சிரிக்க முடிந்தது

    ReplyDelete
  2. "நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்காணிக்கும் ஓர் அமைப்பு அதிகாரம் இந்த லோக்பால் அமைப்புக்கு வருமானால், அந்த அமைப்பில் இட இதுக்கீடு இல்லையென்றால், அது மேல் சாதியினரால் நிரப்பப்பட்டு, வேண்டுமென்றே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் துன்புறுத்த வழிவகுக்கும் என்பதுதான் இதன் அடிநாதம்."



    இது மொக்கை லாஜிக். இது எப்படி இருக்கிறது எனில்,

    "செவப்பா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டான்" - வடிவேலு

    இந்த ரேஞ்சில் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மேல்சாதியினர் எல்லாம் சேடிஸ்டுகள் போலவும், அவர்கள் எப்பவும் பிறரைத் துன்புறுதுவதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டுள்ளனர் என்பது போலவும் அமைந்த எண்ண ஓட்டத்தின் கரல்லரி இது. அந்த விவாதத்தில் இதை முதலில் எழுப்பியவரும் பிறகு அதைக் குறிப்பிட்டு, பெண்களை விட்டு விட்டார்கள் என்று பேசிய ஓவியாவும் நார்மலான ஆட்கள் மாதிரி எனக்குப் படவில்லை. ஒரு குழு அமைந்தாலே அது சதி செய்யத்தான் அமைந்தது போலக் கட்டமைப்பது என்ன விதமான மன நிலை? இன்றைய தேதியில், சுப்ரீம் கோர்ட், மற்றும் பல மானில ஹைகோர்ட் களில் உள்ள நீதிபதிகள் என்ன விகிதத்தில் உள்ளனர்? அவர்கள் நியாயமான தீர்ப்புகளைத் தரவில்லையா? எதிலும் சதி, தீங்கு மனப்பான்மை என நினைப்பது ஆரோக்கியமான மன நிலை அல்ல. Sheer paranoia.

    அப்பறம் பெண்கள் ஒதுக்கீடு மசோதா நிறைவேறாததற்கு உள் ஒதுக்கீடு ஒரு போங்கு காரணம். நிஜக் காரணம் லல்லு மற்றும் முலாயம் கும்பல் அக்மார்க் male chauvinistic கூட்டம். MCP என்ற வார்த்தைக்கு முலாயம்/லல்லு என்று டிக்ஷனரி அர்த்தம் போடலாம்.

    ReplyDelete
  3. கார்பொரேட் நிறுவனங்கள் அரசுடன் தான் பரிமாற்றம் நடத்துகின்றன. அதனால் அரசை இறுக்கிப் பிடித்தால் தனியார்களையும் அடக்காலம் என்று நீங்கள் கூறியதில் எனக்குள்ள ஐயப்பாட்டை முன்வைக்கிறேன்.

    எனது கேள்வி : லோக்பால் என்பது மக்களுக்கான ஒரு மசோதா. மக்கள் அரசாலோ, அரசு அலுவலர்களாலோ பாதிக்கப் பட்டால், 'அதை வழக்காக பதிவு செய்து' கூடியவிரைவில், நியாயம் கிடைக்க வழி செய்யும் ஒரு மசோதா. கார்பொரேட் விவகாரம் எல்லாம் அரசுடன் நடக்கும் என்றால், தவறு நடந்தால், அரசின் மீது வழக்கு போடுவார் யார்? மக்களுக்கு அந்த ஊழல் பற்றித் தெரியாதே! அரசுக்கு மட்டும் தான் தெரிய வாய்ப்புள்ளது. மறுபடியும் அரசு பிரமுகரோ, அரசு ஊழியரோ அதை அறிந்து வழக்கு போடுமாறு எதிர்பார்க்கப் படுமா? இல்லை மீடியாவினர் தெரிந்து கொள்ள வேண்டுமா? மீடியாவினருக்கு தெரியாதவாறு ஊழலை மறைக்க அரசு என்ன வேண்டுமானாலும் செய்ய வாய்ப்புள்ளதே!

    ReplyDelete
  4. இட ஒதுக்கீடு பற்றி : தற்காலிகமாக ஒருவருடைய தாழ்வு மனப்பான்மையை போக்க இட ஒதுக்கீடு உதவினாலும், அவர் அந்த சலுகையை பிடித்து மேலே வந்துவிட்டால் அதன் பின் அவருக்கு கொடுக்கப்படும் சலுகை, வீண் தானே? தாழ்ந்தவர் மேலே வந்துவிட்டால், அவரும் மேல் சாதி தான். மேல் சாதி என்று முன்னதாக அழைக்கப் பட்டவர் நூறு மார்க் வாங்கும் போது, சலுகை வாங்கி ஏற்கனவே மேலேறி வந்து விட்ட மற்றொருவர் எண்பது மார்க்கில் மேல் சாதிக் காரரை வென்றால், நம் திறமைக்கு மதிப்பில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை மேல் சாதியினருக்கு வந்துவிடாதா? இதே நிலை அரசியல் தேர்வுகளிலும் இருந்தால், திறமைக்கு என்ன மதிப்பு? ஒருவரை கீழிருந்து மேலேற்ற, மேலிருப்பவரை கீழே கொண்டு வர வேண்டுமா? இருவரையும் சமம் செய்துவிட்டு பின் சேர்த்து தூக்கிவிடவேண்டுமா?

    ReplyDelete
  5. SC,ST,OBC,MBC,religious minorities,differently abled- try to bring in all these categories in LokPal and ask for reservation- you can as well kill it and dont call this murder as social justice.

    ReplyDelete
  6. கீழமை நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு உண்டு. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீடு இல்லை என்றாலும், சாதி மற்றும் மதம் முக்கியமான அம்சங்கள். அனைத்து சாதியினரும் மதத்தினரும் இடம் பெறும் வகையிலேயே நியமனங்கள் நடைபெறுகின்றன.

    ReplyDelete
  7. 6 மணி நேர விவாதத்தை 1-2 மணி நேரத்துக்குள் கொண்டு வந்தும், முடிவில் இரு தரப்பினரின் பார்வைகளையும் கோர்வையாக எடுத்து வைக்கத் தவறிவிட்டார் கோபி. அரட்டை அரங்கத்தை விட சிறப்பாக இருந்தாலும், "நீயா நானா" நிகழ்ச்சி, சமூகப் பிரச்னைகளை விவாதிக்கும் பொழுது, இன்னும் நிறைய முன்னேற வாய்ப்பிருக்கிறது.

    பத்ரி, நீங்களும் இன்னும் சிலரும் "3 with 3" ஸ்டைலில், மக்கள் பங்களிப்போடு, விவாதத்தை converge செய்ய கோபிக்கு உதவியிருக்கலாம். அது முடியாத பட்சத்தில், கிழக்கு TV-க்காக நாங்கள் காத்திருக்க வேண்டியது தான். :)
    -விகடகவி

    ReplyDelete
  8. கண்ணன்: லோக்பாலை மக்களுக்கான மசோதா என்று சொல்வது ஆபத்தானது. நானும் மக்களில் ஒருவன். என் பக்கத்து வீட்டுக்காரனும் ஒருவன். நாங்கள் இருவரும் அடித்துக்கொண்டால் உடனே லோக்பால் சட்டம் அதனை எதிர்கொள்ளுமா என்று கேட்கலாமா?

    அடுத்து அரசுக்கும் கார்பொரேட் நிறுவனத்துக்கும் இடையிலான ஒரு கொடுக்கல் வாங்கலில் ஊழல் நடந்தால் என்ன ஆவது என்பது பற்றி. இப்போது சொல்லப்படும் 2ஜி ஊழல் என்பதே அப்படிப்பட்டதுதானே? தணிக்கையாளர், விழிப்புணர்வு கொண்ட பொதுமக்கள், ஊடகங்கள், எதிர்க்கட்சிகள் என அனைவரும் ஒன்றுசேர்ந்துதான் இந்த ஊழல்களை வெளியே கொண்டுவரவேண்டும். லோக்பால் ஊழல்களை வெளியே கொண்டுவர அல்ல. ஊழல்கள் வெளியே தெரிய ஆரம்பித்தது, புகார் வந்தால், அந்தப் புகார்களை விசாரித்து, நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இருந்தால், மேல் விசாரணை, வழக்கு என்று சென்று, குற்றம் ருசுவானால் தண்டனை கொடுப்பதுதான் அதன் நோக்கம்.

    ReplyDelete
  9. first of all., our constitution only gives us the soverigenity as indians...this has to be overruled in the areas of lokpal assuming powers in and over the parlimentary democracy,this means we have to totally change from an elected to participative democracy...this is definetly will not be acceptable to any of the judicary ., as then,any and every case ( we have crores pending cases in all our courts) may have to be re-assesed....this will interfere and hurt the judicial system...corporates are at root of greed which the politicians use to enhance their image and party strength..lokpal is silent on this...also it is silent on women officers as lokpal...it is also silent on reservations fr a equal representation of zonal or state level or community level....these are real and people issues that are simply cant be wished away.. mr shanti bhushan ., was a law minister of india.. he/ they should have addressed these areas., instead.this was never done.and the nation was mislead on a frenzy of anti corruption platform just like in bollywood movie style)so also is the case of who will judge if the lokpal himself joins hand with the politicians and corporates...this is a very scary situation !!...it is similar to jumping from frying pan to fire.....

    ReplyDelete
  10. The idea of Reservation policy and it's time frame is conveniently forgotten here. Any reservation policy should not go beyond 10 years. but we have been practicing this policy for more than 60 years in states like TN. now, only those who r economically backward [poor class] are the ones need attention. Moreover, the Vijay tv treated the whole issue in a very superficial way, and portrayed the movement in a negative manner. Maybe the channel is biased or Antony [the programme producer]didnt kno how to handle this particular show. I was also a participant of that show from IAC-C. On the whole it was an unpleasant experience.

    ReplyDelete
  11. the funny argument of 10 years for reservation gets parroted in every alternate argument.there are only 10 year programmes for malaria eradication or small pox eradication etc.they keep getting extended if they are not eradicated or become malaria control programmes if eradication is deemed impossible
    elimination of caste was expected in a short period by the members of constituent assembly.the 10 year review was for political representation and not for educational and job reservation.even now, in political reservation removal of reservation for SC/ST will result in gross underrepresentation of them.thats the fact
    less than 3% of the population pays income tax.by income criteria 97% will have to be under quota.the people from reserved communities are not against reservation for the poor among nonreserved communities.no one will have problem with 97% reservation for poor if its subdivided to oc poor,bc poor,mbc,poor,denotified communities poor,sc poor,st poor etc.its the artificially created bar of 50% by the courts and its quashing of quota for economically poor among forward castes in 1993 which is against quota for them

    ReplyDelete
  12. the entire concept of lokpal is flawed as it exists on a wrong premise of good bribe giver being forced to give bribe to a bad bribe taker.
    the maximum benefit on account of bribe goes to the bribe giver in 99% of the cases.its the bribe giver who goes to any extent to get his work done and not vice versa.
    another main flaw is the argument of corrupt govt and noncorrupt pvt sector/pvt citizens.nothing can be more farther away from truth than this.lets compare pvt hospitals and govt hospitals.there will be apercent of govt staff in govt hospitals who doesnt get bribes.its almost impossible to get one in the pvt setup.around 20%to 40 % of the lab charges,pharmacy goes back to the doctor as commission.
    the percentage of caessareans in pvt hospitals will be 5 times that of govt hospitals and this unnecessary surgery takes place for pure greed.the same with investigations or hospital stay.the pharma industries gift cars,buildings,foreign travels to the physicians depending upon their usage of their products.
    lets come to pvt schools and colleges and compare it with govt colleges.the admission to more than 75% of the seats in govt colleges doesnt involve any corruption while almost all seats in pvt institutions involve money and contacts.
    in telecom there was ADC.access deficit charge.the pvt sector companies where to give a certain amount of money to the public sector as it operates in nonprofitable sectors resulting in loss.almost all big companies cheated on this by not displaying the incoming call as ISD.its the pvt sector for you
    the travels whom i regularly use was not able to send vehicle for my previous visit and arranged their colleagues vehicle.he vehemently insisted to me on not paying him directly anything except the basic fuel charges and money for driver to deduct his commission and pay the rest to his colleague.the same with your mason or carpenter(when he refers the painter or plumber or viceversa) who considers commission as his right.there will not be asingle person in pvt sector who is noncorrupt and we throw all the muck on 0.5% of the population
    corruption can be controlled greatly by improvement of technology and not laws.making plastic money mandatory for all transactions(the govt can give the card vending machines free to small vendors and this can prevent counterfeit notes too) and total transparency in property details (click on the mouse should give u who owns which house in any street)will go a long way in eradicating corruption.

    ReplyDelete
  13. இந்த நாட்டின் சாபக்கேடு இடஒதுக்கீடு

    ReplyDelete
  14. //மேல் சாதி என்று முன்னதாக அழைக்கப் பட்டவர் நூறு மார்க் வாங்கும் போது, சலுகை வாங்கி ஏற்கனவே மேலேறி வந்து விட்ட மற்றொருவர் எண்பது மார்க்கில் மேல் சாதிக் காரரை வென்றால், நம் திறமைக்கு மதிப்பில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை மேல் சாதியினருக்கு வந்துவிடாதா? //

    இல்லை. தமிழக மருத்துவக் கல்லூரி அல்லது பொறியியல் கல்லூரி நுழைவுத் தேர்வை காட்டாகக் கொண்டால் அங்கு 100க்கு 98 எடுத்த முற்பட்ட சாதி மாணவனை விட 99, 99.5 எடுத்த பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சாதி மாணவன் பொதுத்தொகுப்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறான். 80 மார்க் எடுத்தவன் அல்ல. பொதுத் தொகுப்பு பட்டியலுக்கு வராத (முற்பட்ட சாதியைச் சேராத) மாணவர்கள் அவரவர் சாதிகளுக்குண்டான பட்டியலுக்குச் செல்வார்கள்.

    நீங்கள் சொன்ன 80 மார்க் 100ஐ வெல்வது, இன்னமும் தன்னுடைய தேர்வு முறை இன்னதென்று உச்சநீதி மன்றத்திடம் தெளிவாகச் சொல்ல முடியாமல் (நான்கு முறை மாற்றி மாற்றிச் சொல்லி) திணறும் IITக்களில் வேண்டுமானால் நிகழலாம்.

    ReplyDelete
  15. //The idea of Reservation policy and it's time frame is conveniently forgotten here. Any reservation policy should not go beyond 10 years.//

    அதை அரசியல் நிர்ணயச் சட்டம் சொல்லவில்லை. 10 ஆண்டுகள் என்று வரையறுக்க நீங்கள் யார்?

    இவ்வாறு உங்களை நோக்கி வினாவெழுப்ப 60 ஆண்டுகள் இடப்பங்கீடு தேவைப்பட்டிருக்கிறது.

    அது இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை காலமும், அதனால் பயனடைந்தவர்களும் தீர்மானிப்பார்கள்.

    1000 பேர் பசியோடு காத்திருக்கையில் 100 அப்பத்தை வைத்துக் கொண்டு, இவனுக்கு இவ்வளவு கொடு, அவனுக்கு அவ்வளவு பிரிச்சுக் கொடு என்பது கேப்மாறித்தனம். முடிஞ்சா 100 அப்பத்தையும் என் குழுவிற்கே அமுக்கிக் கொள்வேன் என்பது....

    100 அப்பம் இருப்பதினால்தானே இப்படி அடிச்சுக்கறாங்க? அதை 1000 ஆக்கினா தீஞ்சதோ, பிஞ்சதோ அவனவன் தகுதிக்கு ஏற்ப எடுத்துக் கொள்வானே?

    1000 பேரும் பசியாற வேண்டும் என நினைத்து அப்பத்தின் சப்ளையை அதிகரிப்பது இன்றைய தேவை மற்றும் புத்திசாலித்தனம்.

    ReplyDelete
  16. //இந்த நாட்டின் சாபக்கேடு இடஒதுக்கீடு//

    இல்லை, சாபக்கேடு நாட்டின் வளத்தை, வாய்ப்பை சிறு கூட்டம் பல நூற்றாண்டுகளாக தனக்கென வளைத்துக் கொண்டது.

    ReplyDelete
  17. நீயா நானா பார்த்தபோதுதான் லோக்பால் குட்டையில் இன்னும் குழப்ப வேண்டியது ஏராளம் இருக்கிறதென்று புரிந்து அதிர்ச்சியானது. இதில் இட ஒதுக்கீடு வேறேயா? அடக் கஷ்டகாலமே!
    ஊழலையும் லஞ்சத்தையும் ஒழிக்க நினைக்கிறவர்கள் ஒரே ஜாதியாக இருப்பதுதான் நல்லது. மனித மனோபாவம் பிரிவை நினைவுபடுத்தாத வரை அதைப் பற்றி யோசிக்காது. நினைவுபடுத்திவிட்டாலோ அதைத் தவிர எதுவுமே தெரியாது. தாழ்த்தப்பட்டவர், படாதவர், சிறுபான்மை என்று முதலிலேயே கட்டம் கட்டிப் பிரித்துவிட்டால் அந்த அமைப்பு அப்புறம் தன் முன் வருகிற லஞ்ச ஊழல் கேஸ்களை லஞ்ச ஊழல் கேஸாகப் பார்க்காமல் ஜாதிமத அடிப்படையிலேயே பார்க்கும் என்பது உறுதி.
    முற்பட்ட வகுப்பிலிருந்து ஒருவரைக் கூட சேர்க்காமல் சர்வஜாக்கிரதையாக ஒரு குழுவை அமைப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியானாலும் மற்ற பிரிவுகள் இருக்குமே! ஒரு தாழ்த்தப்பட்ட அதிகாரி/ அரசியல்வாதி மீது கேஸ் என்றால் அதை விடக் கொஞ்சம் உயர்ந்தவர்களான பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த நீதிபதிகள் அதை எப்படி அணுகுவார்கள்?
    லோக்பால் குழுவில் பிளவைத் தவிர்க்க இரண்டு வழிகள்: ஒன்று, ஜாதி, மதம் பற்றிய பேச்சே இருக்கக்கூடாது. அல்லது 100% இட ஒதுக்கீடு! அதாவது எல்லா உறுப்பினர்களுமே எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட்டவர்களாக இருப்பதுபோல் தெரிவு செய்து ஒரு குழுவை அமைத்து லோக்பாலில் அமர்த்திவிட வேண்டும். (உதா: பழங்குடியினர் & தாழ்த்தப்பட்ட, மைனாரிட்டி, அதிலும் இவ்வகுப்பைச் சேர்ந்த பெண்கள் மட்டுமே)அப்படியானால் ஏற்றத்தாழ்வுகளே இருக்காதல்லவா?

    ReplyDelete
  18. தாழ்த்தப்பட்டவர்களைச் சிறுகூட்டம் சுரண்டிவிட்டது என்று புலம்புகிறவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். பல தலைமுறைகளுக்கு முன் நடந்த அநீதியைப் பற்றி இப்போது பேசுவதைவிட இனி எப்படிப் பரிகாரம் தேடுவது என்று யோசிக்கலாமே! தாழ்த்தப்பட்டவர்களில் அரசுச்சலுகைகள் பெற்று முன்னேறியவர்கள் தங்களது அடுத்த தலைமுறைக்குச் சலுகைகள் தேவையில்லை என்று கூறி இன்னும் அலுமினிய க்ளாஸில் டீகுடிக்கும், மனிதக் கழிவுகளைச் சுமக்கும் தங்கள் சகோதரர்களுக்காகத் தாங்களாகவே மனமுவந்து விட்டுத்தரலாமே! மாட்டார்கள். ஏனென்றால் ஜாதி என்பது பிறப்பால் அல்ல! முன்னேறியபின் அவர்களும் ஆண்டைகளே! தேள் கடி பட்டதும் பிள்ளைப் பூச்சியும் தேளாகி விடுகிற மாதிரி!

    ReplyDelete
  19. //தாழ்த்தப்பட்டவர்களைச் சிறுகூட்டம் சுரண்டிவிட்டது என்று புலம்புகிறவர்கள் ஒன்றை யோசிக்க வேண்டும். பல தலைமுறைகளுக்கு முன் நடந்த அநீதியைப் பற்றி இப்போது பேசுவதைவிட இனி எப்படிப் பரிகாரம் தேடுவது என்று யோசிக்கலாமே!
    //

    அடடா, என்ன ஒரு சமூக அக்கறை?
    இப்போதைய கவலையெல்லாம், இந்த மட்டில் சமூக உரிமை பெறுவதே பெரும்பாடாகிவிட்டது. இனியொரு முறை முன்பு நடந்தது போல் உரிமையை இழக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே. ஏனெனில் என்ன செய்து பழையபடி நாட்டாமையை மீட்டெடுக்கலாமென ஒரு கூட்டம் இன்னமும் நப்பாசையுடன் காத்திருக்கிறது.

    //தாழ்த்தப்பட்டவர்களில் அரசுச்சலுகைகள் பெற்று முன்னேறியவர்கள் தங்களது அடுத்த தலைமுறைக்குச் சலுகைகள் தேவையில்லை என்று கூறி இன்னும் அலுமினிய க்ளாஸில் டீகுடிக்கும், மனிதக் கழிவுகளைச் சுமக்கும் தஅங்கள் சகோதரர்களுக்காகத் தாங்களாகவே மனமுவந்து விட்டுத்தரலாமே! //

    கவலைப்படாதீங்க. அவர்கள் தங்களுக்குள்ளே பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.

    இன்னைக்கு ஒவ்வொரு சாதிக்காரனும் தன் சாதிக்கென இன்ஞினியரிங், கலைக் கல்லூரிகளைத் திறந்து வருகிறான். அவன் தன் சாதி முன்னேற்றத்தை தானே பார்த்துக் கொள்வான்.

    தன் சார்பாக சிந்திப்பதை பிராமணர்களிடம் அவுட்சோர்ஸ் செய்த காலம் மலையேறிவிட்டது.

    ReplyDelete
  20. // இனி எப்படிப் பரிகாரம் தேடுவது என்று யோசிக்கலாமே!//

    அதற்குத்தான் கல்வியில் இடப்பங்கீடு தந்துள்ளார்கள்

    ReplyDelete